கடவுளை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ., : சசிதரூர் கடும் தாக்கு

Added : ஜன 16, 2019 | கருத்துகள் (68)
Advertisement
சசிதரூர், மோடி, பா.ஜ., திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்

புதுடில்லி : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் பிரதமர் மோடியுடன் வழிபாடு நடத்த உள்ளூர் எம்.பி., எம்எல்ஏ., மேயருக்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை. கடவுளை வைத்து பா.ஜ., அரசியல் செய்கிறது என காங்., எம்.பி., சசிதரூர் குற்றம்சாட்டி உள்ளார்.

ஒருநாள் பயணமாக நேற்று (ஜன.,15) கேரளா சென்ற பிரதமர் மோடி, புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் கேரள கவர்னர் நீதிபதி சதாசிவம், மாநில தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் உடன் சென்றனர். இது தொடர்பாக திருவனந்தபுரம் தொகுதி எம்பி.,யாகன சசிதரூர் பிரதமர் அலுவலகம் மற்றும் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்துள்ளார். சசிதரூர் ஏற்கனவே ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்றவை அமல்படுத்தப்பட்டது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார்.

தற்போது டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள கருத்தில், பத்மநாப சுவாமி கோயிலில் பிரதமர் தரிசனம் மேற்கொண்ட சமயத்தில் உள்ளூர் எம்பி., எம்எல்ஏ, மேயருக்கு கூட அனுமதி அளிக்கப்படவில்லை. எங்களின் பெயர்களை தரிசன பட்டியலில் இருந்து பிரதமர் அலுவலகம் நீக்கி உள்ளது. பா.ஜ., கடவுளைக் கூட அரசியலுக்காக பயன்படுத்துகிறது என்பதையே இது காட்டுகிறது. பிரதமர் வழிபாடு நடத்தும் சமயத்தில் மற்ற கட்சியை சேர்ந்தவர்களை அனுமதிக்கக் கூடாது என நினைக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் புதிய மேற்கூரை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் சசிகதரூர், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு மற்றும் காங்.,ன் நிலைப்பாட்டை பிரதமர் மோடி நேற்று கடுமையாக தாக்கி பேசி உள்ள நிலையில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் பிரதமர் வழிபாடு நடத்தியதை சசிதரூர் கடுமையாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shan - jammu and kashmir,இந்தியா
18-ஜன-201909:53:49 IST Report Abuse
shan உங்கள் தலைவன் வரும் போது நீங்கள் பிஜேபி காரர்களை கூட்டி சென்றீர்களோ ?
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
16-ஜன-201920:26:03 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN சசி தரூர் ஒன்னும் யோக்கியர் அல்ல. எம்பி.எம்எல்ஏ.> உடன் சேர்ந்து வழிபட்டால் அவர்களுக்குள் ஏதோ ...உள்ளது என்றும் சொல்லுவார் ....அவர்நாட்டின் பிரதமர் அவருக்கு தெரியாததா என்ன இந்த சசி தரூருக்கு தெரிகிறது. போறாமை எண்ணத்தால் குறை கூறுகிறார்...
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
16-ஜன-201915:20:43 IST Report Abuse
S.Ganesan பிரதமர் மோடி அவர்கள் சென்றது கோவிலுக்கு, அரசியல் அல்லது அரசாங்கம் சார்ந்த நிகழ்ச்சி அல்ல. பிறகு எதற்கு மற்றவர்கள் ? பிரதமரை நிம்மதியாக சாமி கும்பிட விடாமல் அதையும் அரசியல் ஆக்கும் இந்த சசி தரூர் போன்றவர்களை என்ன செய்வது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X