அசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான்| Dinamalar

அசிங்கப்படுத்த நினைத்த காங்.,க்கு வீடியோவில் பதிலடி கொடுத்த சவுகான்

Updated : ஜன 16, 2019 | Added : ஜன 16, 2019 | கருத்துகள் (44)
Advertisement
சிவராஜ்சிங் சவுகான், கமல்நாத், காங்,தூய்மை கங்கா, வீடியோ, வந்தே மாதரம்

போபால் : தங்களின் சாதனைகளுடன் ஒப்பிட்டு, மத்தியில் ஆளும் பா.ஜ.,வை அசிங்கப்படுத்த நினைத்து காங்., வெளியிட்ட டுவிட்டர் பதிவிற்கு, பா.ஜ., நிர்வாகி ஒருவர் பதிவிட்ட வீடியோவை ரீடுவிட் செய்து பதிலடி கொடுத்துள்ளார் ம.பி., முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ம.பி., முதல்வராகி உள்ளார் காங்., கட்சியின் கமல்நாத். அவர், தனது தேர்தல் வாக்குறுதியில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உஜ்ஜைன் ஷிப்ரா நதியை தூய்மைப்படுத்துவதாக கூறி இருந்தார். அதன்படி பதவியேற்ற 5 நாட்களில் நதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
தூய்மைபடுத்தப்பட்ட நதியின் வீடியோவை தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ம.பி., காங்., கட்சி, "கமல்நாத் வாக்குறுதி அளித்தபடி வெறும் ஐந்தே நாட்களில் ஷிப்ரா நதியை தூய்மைப்படுத்தி விட்டார். ஆனால் 2014 ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வாக்குறுதியில் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த பா.ஜ., கங்கையை தூய்மைப்படுத்துவதாக ஆயிரக்கணக்கான கோடிகளை வீணடித்து வருகிறது. அவர்கள் உஜ்ஜைன் வந்து பார்த்து, கற்றுக் கொள்ளலாம்" என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இதற்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள ம.பி.,யில் 13 ஆண்டுகளாக ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், காங்.,கின் இந்த கருத்து சிரிப்பூட்டும் வகையில் இருப்பதாக குறிப்பிடும் வகையில் நகைச்சுவை எமேஜி ஒன்றை பதிவிட்டுள்ளார். அத்துடன் டில்லி பா.ஜ., செய்தி தொடர்பாளர் தேஜேந்தர் பால் சிங் பக்கா என்பவர், "தி ஆக்சிடென்டல் இந்தியன்" என தலைப்பிட்டு வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றையும் ரீடுவிட் செய்துள்ளார்.
சவுகான் ரீடுவிட் செய்துள்ள அந்த வீடியோ லோக்சபாவில் எடுக்கப்பட்டதாகும். அதில், வந்தே மாதரம் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உடன் பாடிக் கொண்டுள்ளனர். அப்போது காங்., தலைவர் ராகுல் மட்டும் சுற்றி இருப்பவர்கள் திரும்பி, திரும்பி வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார். ம.பி., சட்டசபையின் ஒவ்வொரு மாதமும் கூட்டத்தொடர் துவங்கும் முதல் நாளிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் கமல்நாத் அரசு பதவியேற்ற உடன் அது நிறுத்தப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்கும் விதமாகவே சவுகான் இந்த வீடியோவை ரீடுவிட் செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201917:32:30 IST Report Abuse
Yaro Oruvan கமல்நாத் அவரு வீட்டு வரண்டாவ வேலைக்காரிய விட்டு தூத்து பெருக்கீட்டு, மத்திய பிரதேசத்தை சுத்தம் செஞ்சுட்டேன் அதுவும் அஞ்சே நாள்ள.. கைப்புள்ள கமல்நாத்
Rate this:
Share this comment
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
16-ஜன-201915:40:03 IST Report Abuse
unmaitamil ஐந்து நாள்ல ஒரு வாய்க்காலைதான் சுத்தம் செய்ய முடியும். இப்படி பொய் சொல்லியே வாழ்ந்த கூட்டம் கான் கிராஸ். ஐம்பது கிலோ மீட்டர் கூவத்தையே பலஆண்டுகள் சுத்தம் செய்வதாக, கூவம் மணக்குதுன்னு கோடி கோடியை கொள்ளை அடித்த கூட்டத்தை சேர்ந்தவர்தான் இந்த கொள்ளையணும். இவர்கள் காலத்திலும்தான் கங்கையை எப்படி சுத்தம் செய்தனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த சரித்திரம்தான்
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
16-ஜன-201915:21:21 IST Report Abuse
Sridhar 5 நாட்களில் நதியை சுத்தம் செய்தது உண்மையா இல்லையா? அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கமல் நாத்துக்கு மிக பெரிய பாராட்டை கொடுக்க வேண்டும். இப்படி ஒரு எளிதான வேலையை இவ்வளவு ஆண்டுகளாக செய்யாமல் வைத்திருந்த சிவராஜுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு உண்மையை ஒப்புக்கொள்ளாமல் பதிலுக்கு பதில் வேறு எதோ விஷயத்தை பேசி சப்பை கட்டு கட்டும் போக்கை மாற்ற சொல்லவேண்டும்.
Rate this:
Share this comment
amirthalingam - pondicherry,இந்தியா
16-ஜன-201917:40:37 IST Report Abuse
amirthalingamஅதற்கு முன் ஐம்பது ஆண்டுகள் ஆண்ட காங்கிரசு ஏன் செய்யவில்லை ? சொல்லுங்க ஸ்ரீதர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X