அடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள்

Added : ஜன 16, 2019 | கருத்துகள் (63)
Advertisement
பள்ளி மாணவர்கள், கணக்கு, கணித அறிவு

புதுடில்லி : நாட்டில் உள்ள 56 சதவீத 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணக்கு கூட தெரியவில்லை என ஆண்டு கல்விநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ம் ஆண்டு கல்விநிலை அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 56 சதவீதம் 6 ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் போன்ற அடிப்படை கணக்குகள் கூட தெரியவில்லை. 5 ம் வகுப்பு படிப்பவர்களில் 72 சதவீதம் பேருக்கு எளிய வகுத்தல் கணக்குகள் கூட தெரியவில்லை. 70 சதவீதம் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு கழித்தல் கணக்குகள் தெரிவதில்லை. நமது மாணவர்கள் ஒரு விஷயத்தை வாசிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
தேசிய அளவில் 8 ம் வகுப்பு படிக்கும் 4ல் ஒரு குழந்தைக்கு வாசிக்கும் திறன் இல்லை. 2008 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 84.8 சதவீதம் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிக்க தெரிவதில்லை. 2018 ல் பள்ளி படிப்படை பாதியில் நிறுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 72.8 சதவீதமாக உள்ளது. கணித அறிவை பொருத்தவரை மாணவர்களை விட மாணவிகள் பின்தங்கி உள்ளனர். 44 மாணவிகளும், 50 சதவீதம் மாணவர்களும் மட்டுமே கணக்குகளை சரியாக போடுகிறார்கள்.
அதேசமயம், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், கேரளா, கர்நாடகா, தமிழகத்தை சேர்ந்த மாணவிகள் கணக்கில் சிறப்பாக உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள 5.5 லட்சத்திற்கும் அதிகமான 3 முதல் 16 வயதுடைய பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
16-ஜன-201919:26:25 IST Report Abuse
jagan இந்திய கல்லூரி மாணவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே...80 % கல்லூரி பட்டதாரிகள் வேலைக்கு எடுப்பதற்கு லாயக்கு இல்லை என்கிறது ஒரு ஆய்வு...எல்லாம் இட ஒதுக்கீடு மகிமை....இட ஒதுக்கீட்டில் வந்த ஆசிரியர்க்கு என்ன தெரியும்.....
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
16-ஜன-201919:13:20 IST Report Abuse
ரத்தினம் காரணம் என்னன்னா கல்வியை குடுக்க வேண்டிய அரசாங்கம் சாராயம் விக்குது. சாராயம் விக்க வேண்டிய வன் சாராயத்தை விட்டுட்டு கல்வியை விக்கிறான்.
Rate this:
Share this comment
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
17-ஜன-201903:09:56 IST Report Abuse
ராஜேஷ்இன்றைய மாணவ மாணவிகளின் நிலை , கணக்கு பாடம் படிப்பதைவிட லவ் பண்ணி கணக்கு செய்யக் கற்றுக்கொண்டு விட்டார்கள், காரணம் மொபைலால் நினைவாற்றலை இழந்துவிட்டதுதான்...
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
16-ஜன-201919:08:38 IST Report Abuse
ரத்தினம் பஞ்சாயத்து பள்ளிக்கூடத்தில 2 வது வாய்ப்பாடு, 3 வது வாய்ப்பாடு ன்னு பாட்டு பாடி படிச்சிருந்தா அடிப்படை பலமா இருந்திருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X