அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்களை ஏமாற்றும் ஸ்டாலின்: முதல்வர்

Updated : ஜன 16, 2019 | Added : ஜன 16, 2019 | கருத்துகள் (10)
Advertisement

சேலம்: சேலத்தில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கிராம பகுதிகளில் ஏராளமான திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால், கிராமபகுதிகளில் நலத்திட்டங்களை நிறைவேற்றவில்லை என ஸ்டாலின் தவறான குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார். அவர், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, எத்தனை கிராமங்களுக்கு சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவரான பிறகும் கூட கிராமங்களுக்கு செல்லவில்லை. தேர்தல் நெருங்குவதால், கிராமங்களுக்கு சென்று கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார். யார் அதிகமாக உழைக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.


கடிதம்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தப் பொங்கல் எல்லோருக்கும் இனிய பொங்கலாக அமைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1,000 பொங்கல் பரிசாக அரசு வழங்கியது. எதிரிகளும், துரோகிகளும் நமது ஒற்றுமையைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். நமக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற தீய எண்ணத் தோடு அவதூறுச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; உண்மைக்குப் புறம்பாக உளறிக் கொண்டிருக்கிறார்கள். எந்தத் தேர்தல் எப்பொழுது வந்தாலும், தேர்தல் களத்திலே விசுவாசத் தொண்டர்களாகிய நாம் வெற்றி வாகை சூடுவோம்.அதற்காக அனைவரும் அயராது உழைப்போம்; ஒற்றுமையோடு ஓயாது உழைப்போம். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - chennai,இந்தியா
17-ஜன-201906:01:12 IST Report Abuse
Rajan அஞ்சாநெஞ்சன் ஆதங்கத்தை கொட்ட சமாதிக்கு போகப்போராமே.. என்ன பங்கு பாத்தியா.. சபரிசோன் துணை
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
16-ஜன-201918:17:30 IST Report Abuse
oce அவர் குழையவுமில்லை தவழவுமில்லை .முதல்வர் பதவி அவரை தேடி வந்தது.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
16-ஜன-201916:42:32 IST Report Abuse
rajan.  மக்களை எளிதில் ஏமாற்றும் வித்தை இந்த இரு திராவிட கட்சிகளுக்கும் அத்து படி. இவிங்களை ஒழித்து கட்டுவது ஒன்று தான் நாட்டிற்கு சுபீட்ச்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X