பொது செய்தி

இந்தியா

சி.பி.ஐ.,யில் மாற்றம்: இயக்குநர் தீவிரம்

Updated : ஜன 16, 2019 | Added : ஜன 16, 2019 | கருத்துகள் (19)
Advertisement
சி.பி.ஐ., இயக்குநர், சிபிஐ, தீவிரம், நாகேஸ்வர ராவ், அலோக் வர்மா, CBI, interim chief, structural changes, agency Officials

புதுடில்லி: சிபிஐயில் பணிகள் அனைத்து மண்டலத்திற்கும் சமமாக இருக்கும் வகையில்,கட்டமைப்பில் மாற்றங்களை செய்யும் பணியை, அந்த அமைப்பின் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் துவக்கிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


பணிகள் பாதிப்பு


பல்வேறு மண்டலங்களில் பணிகள் சமமாக பிரித்து கொடுக்கப்படவில்லை எனவும், இதனால் விசாரணையில் பாதிப்பு ஏற்படுவதாகவும், பல மூத்த அதிகாரிகள் இயக்குநரிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை துவக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக, இது போன்ற விவகாரங்கள், டில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கூடுதல் இயக்குநர்கள், டிஐஜிக்கள் பங்குபெறும் காலாண்டு கூட்டத்தில் தான் விவாதிக்கப்படும். கடந்த ஆண்டின் கடைசி ஆய்வு கூட்டம் டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அப்போது, இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் கொள்கை முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்ததால், கூட்டம் நடக்கவில்லை.


தடை


முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். பின்னர் நாகேஸ்வர ராவ், சிபிஐயின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார். அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில், நாகேஸ்வர ராவ் கொள்கை முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.


ராஜினாமா


பின்னர் கடந்த 8 ம் தேதி அலோக்வர்மாவை சுப்ரீம் கோர்ட், சிபிஐ இயக்குநராக நியமித்ததுடன், அவரது பதவி குறித்து உயர் மட்ட குழு முடிவு செய்ய உத்தரவிட்டது. இதன் பின்னர் 48 மணி நேரத்தில், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதி சிக்ரி ஆகியோர் கூடி ஆலோசனை நடத்தினர். முடிவில், அலோக்வர்மா, தீயணைப்பு துறை இயக்குனராக மாற்றப்பட்டார். இதனை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்துவிட்டார். நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார்.


மாற்றங்கள்


சுப்ரீம் கோர்ட் விதித்த கட்டுப்பாடு தற்போது பொருந்தாது என்பதால், சிபிஐயில் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்வது குறித்து மூத்த அதிகாரிகளிடம் நாகேஸ்வர ராவ் ஆலோசனை கேட்டுள்ளார். இதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் இருக்கும் ஊழல் த தடுப்பு பிரிவு அலுவலகத்துடன், சிறப்பு குற்றப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகங்கள் அமைய உள்ளன. மேலும், பெங்களூருவில் உள்ள ஊழல் எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள், விசாரணை குறித்த அறிக்கை சென்னை மண்டலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது அவர்கள் ஐதராபாத் மண்டலத்தில் சமர்ப்பித்து வருகின்றனர். அதன் கீழ் 3 அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ராய்ப்பூர், ஜபல்பூர் மற்றும் போபால் பிரிவு ஊழல் தடுப்பு அலுவலகங்களையும் கண்காணிக்க ஐதராபாத் மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மும்பை மண்டலத்தில் கூடுதலாக, நாக்பூரில் செயல்படும். சிறப்பு குற்றப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதன் கீழ் உள்ள அலுவலகங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இடைக்கால சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த பொதுநல வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாகேஸ்வரராவ் சிபிஐ இயக்குனராக தனது பணியை தீவிரப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
metturaan - TEMA ,கானா
16-ஜன-201916:39:10 IST Report Abuse
metturaan பேசாம விஜகாந்த் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிடுங்க ..தனிஆளா அவரே எல்லாத்தையும் பாத்துப்பார் ..... எத்தனை சினிமால செஞ்சிருக்காரு
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜன-201916:13:11 IST Report Abuse
Endrum Indian அது எப்படி சமமாக இருக்க முடியும். ஊழல் என்பது சகலவித ரோகங்களும் நிறைந்தது, இது சில மாநிலத்தில் எண்ணிக்கையில், கணக்கு வழக்கில் (பணத்தில்) மிக மிக திகமாக் இருக்கும் அதை எப்படி ஒரே சீராக பிரித்துக்கொடுக்க முடியும். டாஸ்மாக் நாட்டில் ஊழல் நடந்தால் தசஸ்மாக் நாட்டு சி.பி.ஐ இடம் கொடுக்கவேண்டியதிருந்தால் மிக தைக்க அளவு வேலைப்பளு இருந்தால் எப்படி பிரித்துக்கொடுப்பீர்கள். ஒன்று செய்யுங்கள் 32 குழுக்களாக பிர்ஹத்துக்கொள்ளுங்கள் உங்கள் சிபி.ஐ வேலை பார்ப்பவர்களை. ஒவ்வொரு கேஸாக ஒவ்வொருகுழுக்களாக கொடுத்துக்கொண்டே மறுபடியும் முதல் குழுவுக்கு என்று மறுபடியும் ஆரம்பித்தது விடுங்கள், இது வெகு சுலபமாக நடக்க நல்ல அளவில் சமச்சீராக வேலை பளு இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
16-ஜன-201915:07:54 IST Report Abuse
makkal neethi அரசியல் அசிங்கங்கள் அவதாரத்தை புரிந்து கொண்டு செயல் பாடுங்கள் ..அந்த அசிங்கங்கள் நிலை இதுவே இன்றய நண்பன் நாளைய எதிரி.. இன்றய எதிரி நாளைய நண்பன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X