மாயாவதி பிறந்தநாள் விழாவில் தொண்டர்கள் அடித்த கூத்து| Dinamalar

மாயாவதி பிறந்தநாள் விழாவில் தொண்டர்கள் அடித்த கூத்து

Added : ஜன 16, 2019 | கருத்துகள் (28)
Advertisement
மாயாவதி, பிறந்தநாள் விழா, பகுஜன் சமாஜ் கட்சி

அம்ரோகா : கட்சி தலைவர் மாயாவதியின் உத்தரவை மீறி ஆடம்பரமாக அவரது பிறந்தநாள் விழாவை கொண்டாடி பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் செய்த அட்டூழியங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று தனது 63 வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்தநாளை மிக எளிமையாக கொண்டாட வேண்டும் எனவும், வரும் லோக்சபா தேர்தலில் பகுஜஜ் சமாஜ் - சமாஜ் கூட்டணியை அமோக வெற்றி பெற செய்ய வைப்பதே தனக்கு அளிக்கும் மிகப் பெரிய பரிசும் எனவும் தொண்டர்களிடம் கூறி இருந்தார். ஆனால் சில தொண்டர்களை இந்த செய்தி போய் சேரவேயில்லை.
அம்ரோகா பகுதியில் நடந்த கட்சி விழா ஒன்றில் 63 கிலோ பிரம்மாண்ட கேக் வாங்கப்பட்டது. ஆனால் அதனை வெட்டி, அனைவருக்கும் கொடுப்பதற்குள், பொறுமையின்றி விழாவில் கலந்து கொண்டவர்கள் மொத்தமாக சென்று கேக்கை கைகளாலேயே அள்ளி அள்ளி சாப்பிட்டனர். இதே போன்று தாமோக் பகுதியில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் நடன அழகிகள் வரவழைக்கப்பட்டு, நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடன கலைஞர்கள் மீது பகுஜன் சமாஜ் தொண்டர்கள் ரூபாய் நோட்டுக்களை வீசி எறிந்தனர். பகுஜன் சமாஜ் தொண்டர்களின் இந்த செயல்பாடு மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை - பழநி,இந்தியா
18-ஜன-201914:58:31 IST Report Abuse
தாமரை இந்த மாதிரி BJP யினர் யாரும் நடந்தால் கண்டிக்க வேண்டியதுதான். மாயாவதி கட்சியினரைக் கண்டிப்பது தலித் விரோதக் செயல்.
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Chennai,இந்தியா
17-ஜன-201906:30:17 IST Report Abuse
 Muruga Vel கலைஞருக்கு பிறகு உயிருடன் இருக்கும்போதே தனக்கு சிலை வைத்து கொண்டவர் இந்த மாயா … இவரை பிரதமராக்க முயற்சி செய்கிறார்கள் ..
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-201903:36:48 IST Report Abuse
J.V. Iyer தீமுக்க தொண்டர்கள் அங்கு ஏன் சென்றார்கள்? நம்பமுடியவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X