சந்திரசேகர ராவ் கூட்டணியில் ஜெகன் மோகன் ரெட்டி?

Added : ஜன 16, 2019 | கருத்துகள் (8)
Advertisement
ஜெகன் மோகன் ரடெ்டி, சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு, 3வது அணி, மெகா கூட்டணி

ஐதராபாத் : தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் அமைத்து வரும் 3வது அணியில் ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் சேர உள்ளதாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலுக்காக மாநில கட்சிகள் தயாராகி வரும் நிலையில் ஆந்திர எதிர்கட்சி தலைவரும், ஒய். எஸ்.ஆர்.காங்., கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியும் , தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கே.டி.ராமா ராவும் இன்று சந்தித்து பேசி உள்ளனர். இந்த சந்திப்பின் போது பா.ஜ., மற்றும் காங்., அல்லாத தாங்கள் அமைக்கும் கூட்டணியில் சேர வருமாரு ஒய்.எஸ்ஆர்., காங்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் ஒய்.எஸ்.ஆர்., காங்., தலைவர்கள் நேரடியாக சந்தித்து பேசிக் கொள்வது இதுவே முதல் முறையாகும். பா.ஜ., - காங் அல்லாத மெகா கூட்டணியை அமைக்க சந்திரசேகர ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் ஏற்கனவே மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், தேவ கவுடா, அகிலேஷ் யாதவ், ஸ்டாலின் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சி தலைவர்களை சந்தித்து மெகா கூட்டணியில் சேர அழைப்பு விடுத்துள்ளசார்.

ஆந்திராவில் சந்திரசேகரராவ் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் பொதுவான எதிரியான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தவும் இருவரின் கூட்டணி உறுதியாக உள்ளதாகவே கூறப்படுகிறது. காங் மற்றும் பா.ஜ., கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியேறி உள்ள நிலையில் அவரது எதிரிகளாக சந்திரசேகர ராவும், ஜெகன் மோகன் ரெட்டியும் கூட்டணி சேர்ந்திருப்பது ஆந்திர அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,இந்தியா
17-ஜன-201903:31:06 IST Report Abuse
அன்பு மூன்றாம் அணியினருக்கு மைனாரிட்டி மக்கள் ஓட்டும் வேண்டும். பிஜேபி உடன் கூட்டணியும் வேண்டும். அதற்காக தான் மூன்றாம் அணி. ஜெகனுக்கு தன்னை முதல்வராக்காத காங்கிரசை பிடிக்காது. மேலும் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து மோடி கொடுக்கவில்லை என்ற குறை வேறு ஆந்திர மக்களிடம் உள்ளது. அதனால் தான் மூன்றாம் அணியில் சேர்ந்துள்ளார். ஜெயித்தபிறகு, மோடியுடன் அமைச்சர் பதவிக்கு பேரம் பேசுவார். சந்துரு வேறு யாரும் அல்ல நமது ஆந்திரா வைகோ.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201917:36:46 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி பிஜேபி - க்கு எதிராக அனைத்து எதிர் கட்சிகளும் தனித்தனியாக மெகா கூட்டணி அமைக்கிறது...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-ஜன-201917:21:39 IST Report Abuse
A.George Alphonse All the leaders of the Political parties are only interested in power in order to save and protect their fame,name and properties by hook or crook by making Koottani with any parties during the states and Lokh Sabha elections.So now these parties are doing the same .We can hear so many such news in future till the Lokh Sabha election.Such things are common in Politics and there is nothing new to wonder or astonish on this matter.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X