பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
உலக வங்கி தலைவர் ஆவாரா இந்திரா நூயி?
டிரம்ப் கையில் இருக்கு, 'டிரம்ப் கார்டு'

புதுடில்லி:'பெப்ஸிகோ' நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி, இந்திரா நுாயிக்கு, உலக வங்கி தலைவர் பதவி கிடைக்குமா என்ற ஆவல், இந்தியாவில், குறிப்பாக அவர் பிறந்த சென்னைவாசிகளிடம் எழுந்துள்ளது.

 உலக வங்கி ,தலைவர், ஆவாரா, இந்திரா நூயி? , டிரம்ப், கையில், இருக்கு, 'டிரம்ப், கார்டு'

உலக வங்கி தலைவர், ஜிம் யங் கிம், இம்மாத துவக்கத்தில், திடீரென்று, பிப்ரவரியில் பதவி விலகப் போவதாக அறிவித்தார்.இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணி துவங்கியது. தேர்வுக்குழு பரிந்துரைக்கும் நபரை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ, டிரம்பிற்கு அதிகாரம் உள்ளது.

இந்நிலையில், தேர்வுக் குழு உறுப்பினரான, இவாங்கா டிரம்ப், உலக வங்கி தலைவர் பதவிக்கான போட்டியில், இந்திரா நுாயி பெயரை பரிந்துரைத்துள்ளார். 'இந்திரா நுாயி, ஓர் வழிகாட்டியாகவும், உந்து சக்தியாகவும்

திகழ்கிறார்' என, இவாங்கா டிரம்ப், 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார்.இது குறித்து, இந்திரா நுாயி, உடனடியாக கருத்து ஏதும்தெரிவிக்க வில்லை என்ற போதிலும், அவரை, உலக வங்கி தலைவராக நியமிக்க, டிரம்ப் விரும்புவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகஉள்ளது.

விமர்சனம்ஏனெனில், 2016ல், அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற போது, அதை, இந்திரா நுாயி கடுமையாக விமர்சித்தார்.டிரம்பின் தேர்வு, தன் மகள்கள் மற்றும் பெப்ஸிகோ ஊழியர் களிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பியுள்ளதாக வும், அவர்கள் அனைவரும் அழுகையுடன், துக்கம் அனுஷ்டிப்பதாகவும், இந்திரா நுாயி கூறினார்.'இனி நாம் பாதுகாப்பாக வாழ முடியுமா?' என, கறுப்பர் கள், பெண்கள், மாறுபாலினத்தோர் மனதில் கேள்வி எழுந்துள்ளதாகவும் இந்திரா நுாயிதெரிவித்தார்.

மறுப்புஇதற்கு, பெப்ஸிகோ ஊழியர்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, 'அனைத்து ஊழியர்களும் அவ்வாறு நினைப்பதாக தாம் கூறவில்லை' என, இந்திரா நுாயி மறுத்தார்.
இத்தகைய கடுமையான விமர்சனங்களை

Advertisement

வெளியிட்ட, இந்திரா நுாயியை, தன் மகள்
பரிந்துரைத்த காரணத்தாலேயே, உலக வங்கி தலைவராக நியமிக்க, டிரம்ப் விரும்புவாரா எனத் தெரியவில்லை.

இப்பதவிக்கு, இந்திரா நுாயி உடன், மேலும் சிலர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவர்களில், அமெரிக்காவின், சர்வதேச விவகாரங்களுக் கான கருவூலத் துறை கூடுதல் செயலர், டேவிட் மால்பாஸ் முக்கியமானவர். இவர், அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, டிரம்பின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர். இவருடன், டிரம்பின் மற்றொரு விசுவாசி, ரே வாஷ்பர்ன் பெயரும், உலக வங்கி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இறுதியில் யார் வெல்வார் என்பது, இன்னும் ஓரிரு தினங் களில் தெரிந்து விடும்.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji Pad - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜன-201900:31:31 IST Report Abuse

Balaji Padஎதிர்த்து கருத்து தெரிவிப்பவர்களே ஒரு தமிழருக்கு இந்த பதவி என்று பெருமை கொள்ளுங்கள் இந்த பெண்மணி சாதித்ததில் கோடியில் ஒரு பங்கு கூட சாதிக்காதவர்கள் எல்லாம் கருது சொல்லுகிறார்கள்

Rate this:
Manian - Chennai,இந்தியா
19-ஜன-201900:25:33 IST Report Abuse

Manianஎன் தங்கை கவிதாயினிதான் இதுக்கு சரி. கவிதை படியே உலக பண நெருக்கடியை தீர்த்துவிடுவாரே மேலும், இட ஒதுக்கீடடில் கல் தோன்றி மண் தோன்ரா காலத்திய திராவிடனுக்கு முன் உரிமை. இதற்காக போராடுவேன். இது கிடைக்காமல் விட மாட்டேன்-வைகோ உலக பேங்கு ஆரியர்கள் பேங்கு, அதை தேசிய உடைமையாகி விவசாய்களுக்கு இனமாக கொடுக்கவேண்டும் -வீரமணி வன்னியர்களுக்கு இது அநீதி, அன்புமணி இந்த பதவிக்கு ஏற்றவர்- டாக்டர் அய்யா இந்த நூலாயி கிறிஸ்துவர் இல்லை, என் மகனே வரவேடனும் - சீமான், எங்க எண்ணத்திலே ஆளி இல்லாவிடடலம் எனக்கே அந்த பதவி வேண்டும்-திருமா.. டிரம்ப்: நான் சும்மா உதஞ்சு விடுத்தேன் அவளவுதான்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-ஜன-201922:31:18 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அதற்கான அடிப்படை தகுதி கூட இந்த அம்மணிக்கு இல்லை..

Rate this:
Manian - Chennai,இந்தியா
19-ஜன-201900:16:21 IST Report Abuse

Manianஉனக்கு இருக்குதில்லே, அங்கே போயேன் தம்பி. ...

Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X