புதுடில்லி:''ரயில்களில், பயணியர், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது; அது பற்றி, அவர்கள் புகார் செய்ய, ரயில்வே போலீசை தேடி அலையாமல், 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்,'' என, ரயில்வே அமைச்சகத்துக்கு, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பரிந்துரைத்து உள்ளார்.
டில்லியில், ரயில்வே பாதுகாப்பு குறித்த அகில இந்திய மாநாடு, நேற்று நடந்தது. இதில், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே உயர் அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள நிறுவன மாக, ரயில்வே செயல்பட்டு வருகிறது. நக்சல் களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும், பயங் கரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதி களிலும், ரயில்கள் செல்கின்றன. பயங்கர வாதிகள், தங்கள் சதி திட்டம் நிறைவேற்றும் இடமாக, ரயில்களை தான் அதிகளவில் குறி வைக்கின் றனர். அத்துடன், ஓடும் ரயில்களில் கொள்ளை யடிக்கும் சம்ப வங்களும் அதிகளவில் நடக்கின்றன.
உறுதியில்லை
ஆண்டுதோறும், 24 ஆயிரத்துக்கும் அதிகமான, ரயில் கொள்ளை வழக்குகள் பதிவாகின்றன. அதனால், ரயில் பயணியர், பல்வேறு பிரச்னை களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், இது தொடர்பாக புகார் பதிவு செய்ய, பயணியர், ரயில்வே போலீஸ் நிலையத்தை தேடி அலைய வேண்டியுள்ளது. அந்த புகார், மாநிலம், மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு, சம்பவம் நடந்த இடத்தின் அதிகாரத்துக்குட்பட்ட போலீஸ் நிலை யத்துக்கு அனுப்பப்படுகிறது.புகார் மீது, பயணிக்கு உண்மையான தீர்வு கிடைக்கும் என்பதும் உறுதியில்லை.
அதனால்,ரயில் பயணியர்,ஆன்லைனில்,புகாரை பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி தர, ரயில்வே அமைச்சகத்துக்கு பரிந்தரைக்கிறேன்.இதற்கு, மத் திய உள்துறை அமைச்சகம்,தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என, உறுதி யளிக்கிறேன்.மத்திய போலீஸ் படையாக இருந்தா லும் சரி,மாநில போலீஸ் படையாக இருந்தாலும் சரி, மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவர்களின் நண்ப னாக பழக வேண்டும் என, போலீஸ் அதிகாரிகளிடம், நான் தொடர்ந்து கேட்டு கொண்டு வருகிறேன்.
அதையே தான் ரயில்வே பாதுகாப்பு படை போலீ சாரிடமும் கேட்டு கொள்கிறேன். ரயில் பயணி யரின் நண்பனாக, ரயில்வே போலீசார் இருக்க வேண்டும்.
மன கஷ்டம்
ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயில்களிலும், பயணியரின் உடைமைகளை சோதனை செய்வ தில், மாற்றம் கொண்டு வர வேண்டும். உடைகளை சோதனை செய்வ தால், பயணியருக்கு எந்த மனக் கஷ்டமும் ஏற்படக் கூடாது. இது பற்றி விவாதித்து, தீர்வு காண வேண்டும்.ரயில்களில், போலீசார் கண் காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். பயணியருக்கு, பாதுகாப்பு பணியில் போலீசார் இருப்பது தெரிந்தால்,நிம்மதியாக பயணிப்பர்.
நக்சல், பயங்கரவாதிகளால்
ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள, போலீசாருக்கு தேவையான பயிற்சி கள் அளிக்கப்பட
வேண்டும்.இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.மாநாட்டில் பேசிய ரயில்வே
அமைச்சர் பியுஷ் கோயல், 'ரயில் பயணியருக்கு, ஆன் லைனில் புகார் பதிவுசெய்யும் வசதி ஏற்படுத்தி
கொடுக்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
ஒவ்வொரு மண்டலத்திலும், ஒரு, 'மாடல்' ரயில் நிலையம் ஏற்படுத்த, ரயில்வே முடிவு
செய்துள்ளது.இது பற்றி ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில்வேயில், மொத்தம், 68 மண்டலங்கள் உள்ளன. ஒவ் வொரு மண்டலத்திலும், ஒரு மாடல் ரயில் நிலையம் உருவாக்க முடிவு செய்யப் பட்டு உள்ளது. இதற்கான நிலையத்தை தேர்வு செய்ய, மண்டல மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா, ௨௦ கோடி ரூபாய் ஒதுக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.மாடல் ரயில் நிலையத்தில், மின் துாக்கிகள், நடை மேம்பாலம், பயணியர் அமர்வதற்கான நவீன இருக்கைகள், உயர்தர நடைபாதைகள், குடிநீர் வசதி உட்பட, பயணி யருக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கும். இரண்டு மாதத்துக்குள், மாடல் ரயில் நிலையத்தை உருவாக்கவும், மேலாளர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
அதன்பின், மற்ற ரயில் நிலையங்களும், மாடல் ரயில் நிலையம் போல், மேம்படுத்தப் படும்.ரயில்வே வாரிய தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள வினோத் குமார், 68, மண்டல மேலாளர்களுடன், இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (6)
Reply
Reply
Reply