பதிவு செய்த நாள் :
மம்தாவின் எதிர்க்கட்சிகள் பேரணி
முக்கிய தலைவர்கள் புறக்கணிப்பு

புதுடில்லி:எதிர்க்கட்சிகளின் பலத்தைக் காட்டும் வகையில், கோல்கட்டாவில், 19ம் தேதி, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி நடத்தவுள்ள பேரணியில், காங்கிரஸ் தலைவர் ராகுல், மூத்த தலைவர் சோனியா உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பது உறுதியாகி உள்ளது.

மம்தாவின் ,எதிர்க்கட்சிகள், பேரணி,முக்கிய,தலைவர்கள், புறக்கணிப்பு

லோக்சபாவுக்கு வரும், ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்காக கட்சிகள் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின், மெகா கூட்டணி உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதற்காக, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி,

கோல்கட்டாவில், 19ல் பிரமாண்ட பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும்படி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி, தேசியவாத, காங்., மக்கள் ஜனநாயகக் கட்சி, தி.மு.க., தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரை எந்தக் கட்சியும், இந்தப் பேரணியில் பங்கேற்பது குறித்த முடிவை அறிவிக்கவில்லை.இந்த நிலையில், காங்., தலைவர், ராகுல், மூத்த தலைவர் சோனியா ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்பது உறுதி யாகி உள்ளது.இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:

வரும் லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட வேண்டும் என, கட்சித் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மம்தா பானர்ஜி நடத்தும் பேரணியில் ராகுல், சோனியா பங்கேற்கக் கூடாது என, மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

Advertisement

தெரிவித்துள்ளனர். அதன்படி, ராகுல் மற்றும் சோனியா பங்கேற்க மாட்டார்கள். மூத்த தலைவர், மல்லிகார்ஜுன கார்கே,அவர்கள் சார்பில் பங்கேற் பார். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் தனியாக கூட்டணி அமைத்துள்ள, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ், இந்தப் பேரணியில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் உள்ள, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி நிறுவனருமான, சந்திரசேகர ராவும் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pdhana - london,யுனைடெட் கிங்டம்
17-ஜன-201921:03:33 IST Report Abuse

pdhanaShe is a greedy woman, looking for the PM seat. I hope her party is defeated in this election.

Rate this:
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஜன-201918:06:32 IST Report Abuse

Lion Drsekarஎன்ன முக்கிய தலைவர்கள், குடும்ப தலைவர்கள் என்று தலைப்பைப் போடுங்கள், நேரு ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தை ஒவ்வொரு இனத்திற்கு பிரித்து கொடுத்திருக்கிறார், எனவே தலைவர் என்ற வார்த்தையை நீக்கி குடும்ப தலைவர் என்று போடுங்கள், உண்மையை நாமாவது பேசுவோமாக. வந்தே மதரம்

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜன-201916:23:54 IST Report Abuse

Endrum Indianஆமா அமீத் ஷாவின் ரத யாத்திரையினால் மிகப்பெரும் கலவரங்கள் தூண்டப்படலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லி அதை கான்செல் செய்யும் போது இந்த மும்தாஜின் முஸ்லிம்கள் மனநிலையில் உள்ள இந்த கட்சி குண்டர்கள் அதாவது தொண்டர்கள் கலவரம் செய்ய மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம்.

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X