குருகுலம் பள்ளியில் 'உற்சவம்' கலை நிகழ்ச்சியில் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குருகுலம் பள்ளியில் 'உற்சவம்' கலை நிகழ்ச்சியில் அசத்தல்

Added : ஜன 16, 2019
Advertisement
 குருகுலம் பள்ளியில் 'உற்சவம்' கலை நிகழ்ச்சியில் அசத்தல்

ஊட்டி:ஊட்டி அகலார் குருகுலம் பள்ளியில், 'உற்சாகம்-2019' விழா நடந்தது.பள்ளி தாளாளர் அர்ஜூணன் தலைமை வகித்தார். ஐகோர்ட் நீதிபதி சதீஷ்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:சமூக வலைதளங்களால், சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகள், இன்னல்கள் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் அபாயங்கள், சிக்கல்களுக்கு பெற்றோரின் கவன குறைவே காரணம். சிறு வயது முதல், குழந்தைகள் பெற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.மாணவர்கள் மனப்பாடம் செய்து, அதிக மதிப்பெண் பெறுவதால், எவ்வித பயனும் இல்லை. புரிந்து படித்தால்தான் மாணவர்கள் வாழ்வில் மேம்படுவர். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறந்த கல்வியோடு, கலை, பண்பாடு, ஒழுக்கம் மற்றும் கலாசாரத்தை கற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். குருகுலம் பள்ளி மாணவர்கள் கல்வியுடன், நாடகம் உட்பட அனைத்து திறமைகளையும் பெற, பள்ளி நிர்வாகம் மேற்கொண்டுள்ள பணி, பாராட்டுக்குரியது. இவ்வாறு நீதிபதி சதீஷ்குமார் பேசினார்.தொடர்ந்து, பள்ளி மாணவர்கள், 15 நிமிடங்களில் நிகழ்த்திய முழு ராமாயணம் நாடகம், பார்வையாளர்களை கவர்ந்தது. இதில், மாவட்ட நீதிபதி முரளீதரன், பள்ளி நிர்வாகி வாசுகி அர்ஜூணன், முதல்வர் சுரேஷ்குமார், துணை முதல்வர் கணேஷ் உட்பட, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X