நோயை தடுக்கும் நல்ல கிருமிகள்

Added : ஜன 17, 2019 | கருத்துகள் (6)
Advertisement
நோயை தடுக்கும்,நல்ல கிருமிகள்

வாஷிங்டன்: கிருமிகள் எல்லாமே நமக்கு கெடுதலை விளைவிப்பதில்லை. நல்ல கிருமிகளும் பல உண்டு. உணவை செரித்து, சத்துக்களை பிரித்தெடுக்க, நமது வயிற்றில் உள்ள பல நல்ல கிருமிகள் உதவுகின்றன. அவை இல்லாவிட்டால் நமக்கு உணவு செரிக்காது.

அதேபோலத் தான், மூக்கிலும், தொண்டையிலும் சில நல்ல பாக்டீரியா இருந்தால் ப்ளூ வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும் என்பதை, அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ப்ளூ வைரஸ் தாக்கியவர்கள், அதிலிருந்து தப்பியவர்கள் ஆகியோரின் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சேமிக்கப்பட்ட பாக்டீரியாக்களை மிச்சிகன் விஞ்ஞானிகள் வகைப்படுத்தி ஆராய்ந்த போது, குறிப்பிட்ட சில வகை பாக்டீரியாக்கள் உள்ளவர்களுக்கு ப்ளூ வைரஸ் தாக்குதல் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது. இந்த கண்டுபிடிப்பு, ப்ளூ வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உதவும் என்பதோடு, மனித உடலில் நல்ல கிருமிகள் ஆற்றும் பங்கைப் பற்றியும் நமக்கு புரிதலை தரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-ஜன-201912:15:33 IST Report Abuse
Nallavan Nallavan தெரிஞ்ச விசயந்தேன் ......
Rate this:
Share this comment
Cancel
Sangeedamo - Karaikal,இந்தியா
17-ஜன-201911:48:36 IST Report Abuse
Sangeedamo வாஷிங்டன் புத்திமான் சொன்னா மட்டுந்தான் நம்புவோம் நம்மவர் சொன்னா அவரை மடையன் என்று பட்டம் கட்டுவோம்
Rate this:
Share this comment
Cancel
HSR - MUMBAI,இந்தியா
17-ஜன-201908:09:40 IST Report Abuse
HSR அதைத்தான் பாக்டீரியா மற்றும் கிருமி நாசினி ஆன்ட்டிபயாட்டிக் போன்றவற்றை கொடுத்து அழித்து விடுகிறீர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X