ரூ.475 கோடி மது பொங்கலுக்கு விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.475 கோடி மது பொங்கலுக்கு விற்பனை

Added : ஜன 17, 2019 | கருத்துகள் (23)
Advertisement
ரூ.475 கோடி,மது,பொங்கலுக்கு,விற்பனை

சென்னை: பொங்கலை முன்னிட்டு, 'டாஸ்மாக்' கடைகளில், 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 4,800 மது கடைகள் உள்ளன. இவற்றில், சராசரியாக தினமும், 80 கோடி ரூபாய் மதிப்பிலான, பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன. இது, வார விடுமுறை, தீபாவளி, ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில், 100 கோடி ரூபாயை தாண்டுகிறது.

பொங்கலை முன்னிட்டு, சனிக்கிழமை முதல் நாளை(ஜன.,18) வரை, அரசு விடுமுறை. அதில், நேற்று(17ம் தேதி) மட்டும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. தொடர் விடுமுறையால், மது விற்பனை அதிகம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, 12ல் இருந்து, 15ம் தேதி வரை, 475 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.

டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தொடர் விடுமுறையால், மது கடைகளில், 12ம் தேதி, 105 கோடி ரூபாய்; 13ல், 120 கோடி ரூபாய்; 14ல், 110 கோடி ரூபாய்; 15ம் தேதி, 140 கோடி ரூபாய்க்கு, மது விற்பனையாகி உள்ளதாக, மாவட்ட மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
17-ஜன-201917:43:03 IST Report Abuse
J.Isaac தமிழ் நாட்டிற்கு பெரிய சாபம் . பூரண மது விலக்கு வரவேண்டும் . இந்த நிலை நீடித்தால் கூடிய விரைவில் தமிழ் மக்கள் வடநாட்டவர்க்கு அகதிகள் ஆகிவிடுவார்கள் .
Rate this:
Share this comment
Cancel
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-201914:30:00 IST Report Abuse
Niranjan மனைவி , குழந்தைகளுக்கு நல்ல உடை உணவு போன்றவைகளுக்கு செலவாக வேண்டிய பணம் அநியாயமாக மது கடைகளில் வீணாகிறது. சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் டாஸ்மார்க்கில் வீணடித்து விட்டு, இலவசங்கள் ஏதிர் பார்த்து இருக்கின்ற கதி தமிழக மக்களுக்கு வந்து விட்டது . அரசாங்கம் மாறினாலும் மக்களின் இந்த கதி மாற போவதில்லை. மது கடைகளையும் இலவசங்களை இந்தியா முழுவதிலும் ஒழித்து கட்ட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Qin Huang Dao,சீனா
17-ஜன-201913:50:40 IST Report Abuse
sivakumar ALCOHOL IS THE MOTHER OF ALL EVILS என்று குரான் கூறுகிறது . இதை மக்களும் புரிந்து கொள்ளவில்லை அரசுக்கும் தெரிந்தாக தெரியவில்லை. கல்லாரொம்பினால் சரி என்று இருக்கும் அரசு இருக்கும் வரை கடும் குற்றங்களுக்கு குறைவு என்றும் காணமுடியாது. தினசரிகளில் அன்றாடம் வரும் செய்திகளே சாட்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X