பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் தடையால் ஓட்டல் உணவு விலை உயர்வு

Added : ஜன 17, 2019 | கருத்துகள் (43)
Advertisement
பிளாஸ்டிக் தடை,ஓட்டல்,உணவு,விலை,உயர்வு

சென்னை: பிளாஸ்டிக் தடையை காரணம் காட்டி, ஓட்டல்களில், உணவு வகைகளின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வருவதால், மக்கள், சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில், உணவு துறையின் கீழ், விலை கண்காணிப்பு குழு உள்ளது. உணவு துறை அமைச்சர் தலைமையில் செயல்படும் அந்த குழுவில், நிதி, வேளாண், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் உள்ளனர். விலை கண்காணிப்பு குழு, அரிசி, சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்கும் பணியில் ஈடுபடுகிறது. இதற்காக, அத்தியாவசிய பொருட்களின் வரத்தை கண்காணித்து, பதுக்கலை தடுத்து, அவற்றின் விலை, செயற்கையாக உயர்த்தப்படுவது தடுக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க, இம்மாதம், 1ல் இருந்து, ஒரு முறை பயன்படுத்தும், 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு, தடை விதித்தது. இதனால், ஓட்டல்களில், உணவு வகைகள் வழங்க, பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில், வாழை இலை, காகிதம் உள்ளிட்ட மாற்று பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை காரணம் காட்டி, சாதாரணம், நடுத்தரம், உயர்தரம் என, அனைத்து வகை ஓட்டல்களிலும், உணவு வகைகளின் விலை, 20 ரூபாய் முதல், 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

'பிளாஸ்டிக் தடையை காரணம் காட்டி, ஓட்டல்களில், விலை உயர்வை தடுக்க, விலை கண்காணிப்பு குழு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது' என, நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
17-ஜன-201921:06:03 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இந்த வியாபாரிகள் கூட்டம் முன்பு ஜி எஸ் டி என்று மக்களை ஏமாற்றி காசை அதிகரித்தனர். இப்போது பிளாஸ்டிக் தடையைக் காரணம் காட்டி விலையைக் கூட்டிக் கொடுக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
17-ஜன-201918:34:13 IST Report Abuse
ரத்தினம் முதல்ல பிளாஸ்டிக் பாக்டரியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மூடணும். புது பாக்டரிக்கு லைசென்ஸ் தரக்கூடாது. இப்படி செஞ்சா நாடும் சுத்தமாகும் . மக்களும் ஆரோக்கியமா வாழை இலையில சாப்பிடுவாங்க. துணிப்பை உபயோகிப்பாங்க. உழவு தொழிலும் நெசவு தொழிலும் செழிக்கும். எடப்படியாரே இதுவே நல்ல தருணம். நல்லபடியா உத்தரவு போடுங்க
Rate this:
Share this comment
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
17-ஜன-201916:43:04 IST Report Abuse
வால்டர் ஒரு ஒரு டாஸ்மாக் கடையின் முன்பும் எவ்வளவு காலி தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், நவநாகரீக குடும்பத்தலைவிகள், மங்கைகள், ஆண்கள், இளைஞர்கள் எல்லோரும் கடைக்கு சிறு பொருள்கள் வாங்க கூட துணி பை எடுத்து செல்லாமல் கேரி பேக் வாங்கி வாங்கி சேர்த்து மறுநாள் காலையில் குப்பைத்தொட்டியில் போடவேண்டியது. மழை நேரங்களில் இவை எல்லாம் சென்று கால்வாயை அடைத்து தண்ணீர் தேங்கி கொசு கடிக்கு ஆளாகி நோய் வாய் பெற்று எவ்வளவு போராட்டங்கள். சிம்பிள் பிளாஸ்டிக் ஒழிப்பு ஒரு தீர்வு. சென்னை கடந்த 10 நாட்களாக நன்றாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X