ஒரு கல்லில் இரு மாங்காய்; தி.மு.க., புது கணக்கு| Dinamalar

ஒரு கல்லில் இரு மாங்காய்; தி.மு.க., புது கணக்கு

Added : ஜன 17, 2019 | கருத்துகள் (79)
Advertisement
ஒரு கல்லில்,இரு மாங்காய்,D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம், புது கணக்கு

புதுடில்லி: கோல்கட்டாவில், மம்தா பானர்ஜி நடத்தும் பேரணியில் பங்கேற்கும்படி, தி.மு.க.,வுக்கும் முறைப்படி அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பங்கேற்பாரா என்பதற்கான பதில், இதுவரை தெளிவாகவில்லை.

பிரதமர் பதவிக்கான போட்டியில் இருப்பதாலும், தேசிய அளவில், 'பெடரல் பிரன்ட்' என்ற புதிய அணி யோசனையை முன் வைப்பதாலும், தேசிய அளவில், மம்தா பானர்ஜிக்கு முக்கியத்துவம் கிடைக்கக் கூடாது என, காங்., நினைக்கிறது. காங்கிரசின் இந்த முடிவை அடிப்படையாக வைத்து, தி.மு.க.,வும், வேறு கணக்கு போடுவதாக தெரிய வந்துள்ளது.

மறைந்த, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு தந்தும், மம்தா பானர்ஜி வரவில்லை. மாறாக, அவர் சார்பாக, மூத்த, எம்.பி., டெரிக் ஒபிரெய்னை அனுப்பி வைத்தார். அந்த பாணியிலேயே, மூத்த தலைவர்கள் யாரையாவது அல்லது ராஜ்யசபா, எம்.பி., கனிமொழியையோ, தி.மு.க., சார்பில் அனுப்பி வைக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம், காங்கிரசை மனம் குளிர வைத்தாற் போல் ஆயிற்று; கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு வராத மம்தாவுக்கு பதிலடி தந்தது போலவும் ஆயிற்று. 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்ற கணக்கில், தி.மு.க., திட்டமிடுவதாக தெரிகிறது.

அதனால் தான், அதிகாரபூர்வமாக ஸ்டாலின் வருகையை, திரிணமுல் காங்கிரஸ் தரப்புக்கு, தி.மு.க., உறுதிப்படுத்தவில்லை என, டில்லியில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
23-ஜன-201916:32:11 IST Report Abuse
M.COM.N.K.K. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல அது இரண்டும் வெம்பிய மாங்காய் எதற்கும் உதவாது கண்ணா
Rate this:
Share this comment
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
19-ஜன-201920:08:34 IST Report Abuse
Tamilselvan மக்கள் சொத்துக்களை கொள்ளை அடிக்கும் குடும்ப கட்சிகள் ஒழிக்க பட வேண்டும். ஊழல் செய்யும் குடும்ப கட்சிகளுக்கு இதுவே கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
18-ஜன-201917:04:18 IST Report Abuse
R S GOPHALA இவன் அங்க போனா ஒண்டி பெருசா பேசி கிழிச்சிட போறானா ?? பெக்க பெக்கன்னு முழிச்சிக்கிட்டு நிப்பான். அவங்க பேசுறது இவனுக்கு புரியாது. இவன் என்ன சொல்லரான்னு அவனுங்களுக்குப் புரியாது. மைய்யமா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு விட்டா போதும்னு ஓடி வந்துடுவான்... இவனுக்கெல்லாம் இன்னும் முக்கியத்துவம் கொடுத்துக்கிட்டு இருக்காங்க பாருங்க. காலத்தின் கட்டாயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X