ராகுலுக்கு ஆலோசனை வழங்குகிறாரா ரகுராம் ராஜன்?

Added : ஜன 17, 2019 | கருத்துகள் (66)
Advertisement
ராகுல்,ரகுராம் ராஜன், ப.சிதம்பரம், மோடி, லோக்சபா தேர்தல் பிரசாரம், ஆலோசனை

புதுடில்லி: அடுத்த பொதுத் தேர்தலுக்கு எந்த மாதிரியான பிரச்னையை கையில் எடுத்து, பிரசாரம் செய்யலாம் என காங்., தலைவர் ராகுலுக்கு, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் யோசனை வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துகள் கூறி வந்த ரகுராம் ராஜன், ராகுலுக்கு இந்த விஷயத்தில் உதவியதாக கூறப்படுகிறது. பொருளாதாரம் தொடர்பாகத் தான் பேச நினைத்த சில விஷயங்களையும் ராகுலுக்கு யோசனையாக கூறி உள்ளார்.
மோடி அரசை தாக்குவதற்கு ரகுராம் ராஜனிடம் இருந்து சில ஆலோசனைகளை பெற விரும்பி உள்ளார் ராகுல். புதிய வேலைவாய்ப்பை உருவாக்க மோடி அரசு தவறியதை கையில் எடுக்க நினைத்த ராகுல், அதற்கு மாற்றான தீர்வுகள் தொடர்பான யோசனையை பெற்று அதை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களில் மட்டும் ராகுல், ரகுராம் ராஜனை இருமுறை சந்தித்து பேசி உள்ளதாக காங்., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக, கடந்த வாரம் துபாய் சென்ற போது கூட ராகுல், ரகுராம் ராஜனிடம் பேசி உள்ளார். உண்மையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிவுரையின் பேரிலேயே ராகுல், ரகுராம் ராஜனிடம் பேசி உள்ளார். ரகுராம் ராஜனிடம் ஆலோசிக்கும் விவகாரங்களின் அடிப்படையிலேயே லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் தயார்படுத்தி வருகிறாராம்.

மோடி அரசுக்கு எதிராகவும், அதே சமயம் இளைஞர்களை கவர வேலைவாய்ப்பின்மை பிரச்னையை கையில் எடுப்பதே சரியானதாக இருக்கும் என ராகுல் நினைக்கிறாராம். காங்., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவராக உள்ள ப.சிதம்பரம் நிபுணர்கள் பலரிடமும் ஆலோசித்து வருகிறாராம். இவர்களில் ரகுராம் ராஜன், ப.சிதம்பரத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் சிதம்பரம் அளித்த அறிவுரைப்படி ராகுல், ரகுராம் ராஜனிடம் ஆலோசித்து வருகிறாராம். 2012-13 ம் ஆண்டில் ப.சிதம்பரம் தான், ரகுராம் ராஜனை தலைமை பொருளாதார ஆலோசகராகவும், 2013 செப்டம்பரில் ரிசர்வ் வங்கி கவர்னராகவும் நியமித்தார்.

2016 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ரகுராம் ராஜனின் பதவி காலத்தை மோடி அரசு புதுப்பிக்கவில்லை. இதனால் அதிருப்தியில் மோடி அரசுக்கு எதிராக பேசி வந்த ரகுராம் ராஜன், அமெரிக்கா சென்று சிகாகோவில் உள்ள வர்த்தக கல்லுாரியில் பணியாற்றி வருகிறார். ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருந்த மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, அவரது பதவிக்காலம் முடிந்ததும் 2016 நவம்பர் மாதத்தில் கறுப்பு பண ஒழிப்புக்காக பணமதிப்பிழப்பை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
17-ஜன-201922:46:51 IST Report Abuse
Gnanam தலையில் இருப்பதுதான் வாயில் வரும். ரகுராம் ராஜனின் தலை வேறு, ராகுலின் தலை வேறு. அவர் எதையாவது சொல்ல, எவர் வேறு ஏதாவது உளரப்போகிறார், வேடிக்கை பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
17-ஜன-201922:16:34 IST Report Abuse
rajan.  இரு பெரும் கோமாளிகள் தங்களை மேதாவி என்று நினைத்தே பாழாய் போய்டுவானுங்க. அந்த துபாய் சிறுமி இந்த பப்புவுக்கு கொடுத்த அறிவுரையை கூட இந்த பெருசுகளுக்கு புரிந்து நடந்துக்க தெரியல. பொருளாதார கேடிகளுக்கு நல்லதை நினைக்க தெரிவதில்லை. காங்கிரஸ் ஜோக்கர்ஸ் லேண்ட்.
Rate this:
Share this comment
Cancel
Kandaswamy - Coimbatore,இந்தியா
17-ஜன-201921:13:09 IST Report Abuse
Kandaswamy நம்ம பப்புவுக்கு, பிரம்மாவும், சரஸ்வதி தேவியும் பாடம் சொல்லிக்கொடுத்தாலும் மண்டையில ஏறப்போறதில்ல, ர.ரா சொன்னா மட்டும் புரிஞ்சிடுமோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X