வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை

Updated : ஜன 18, 2019 | Added : ஜன 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement
வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை

நாக்பூர்:மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில், ஒரு தம்பதிக்கு, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் மூலம் விசாரணை நடத்தி, விவாகரத்து வழங்கப்பட்டது

.மஹாராஷ்டிராவில் முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்து உள்ளது. பிரச்னைஇங்குள்ள நாக்பூர் குடும்ப நீதிமன்றத்தில், விவாகரத்து கோரி, ஒரு தம்பதி மனு தாக்கல் செய்திருந்தது.

நாக்பூரைச் சேர்ந்த, 37 வயதான கணவன் மற்றும் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாதைச் சேர்ந்த, 35 வயதாகும் மனைவி, அமெரிக்காவின் மிச்ஸிகனில் வசித்து வந்தனர். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர்களுக்கு, 2013ல், திருமணம் நடந்தது.திருமணத்துக்குப் பின், நாக்பூரில் உள்ள கணவனின் வீட்டுக்கு வந்தபோது, மாமியார் உள்ளிட்டோருடன், அந்த பெண்ணுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அது, கணவன், மனைவிக்கு இடையேயான பிரச்னையாக மாறியது.

இதையடுத்து, விவாகரத்து கோரி, நாக்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.இந்த வழக்கு, சமீபத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, விடுமுறையில் வந்த கணவன், நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், தற்போது, கல்வி, 'விசா'வில் சென்று உள்ளதால், மனைவியால் நேரில் ஆஜராக முடியவில்லை.


இழப்பீடு

இதையடுத்து, வாட்ஸ்ஆப் சமூக வலைதளத்தில், வீடியோ அழைப்பு மூலம் விசாரணை நடத்தக் கோரப்பட்டது.அதை ஏற்று, வீடியோ அழைப்பு மூலம், மனைவியிடம் விசாரணை நடத்திய, நாக்பூர் நீதிமன்றம், விவாகரத்து வழங்கியது. 'கணவர், 10 லட்சம் ரூபாயை, மனைவிக்கு இழப்பீடாக அளிக்க வேண்டும்' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜன-201913:16:32 IST Report Abuse
ஆப்பு வாட்சப் மூலம் விவாகம், விவாக ரத்து முடியலாம்....ஆனா "அது" முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
V.B.RAM - bangalore,இந்தியா
18-ஜன-201909:59:32 IST Report Abuse
V.B.RAM இது மிகவும் வரவேற்கத்தக்கது . நான் சென்னயில், இருந்தேன் . ஏன் மனைவி பெங்களூருல இருந்தாள். ஏன் மீது விவாகரத்து வழக்கு தொடுத்தார். கிட்டத்தட்ட ஏழு வருடம் ஆகியது. எங்களுக்கு ஒரு மகள் இருந்தாள். எனவே அவள் மகளுடன் நிம்மதியாக இருக்கிறாள். ஆனால் நான் ஒவேறுமுறையும் சென்னையில் இருந்து கடந்த ஏழு வருடமாக வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறுமுறை வந்து வேறுவழியில்லாமல் விவாகரத்து கொடுத்தேன். ஏன் வாழ்க்கையே நாசமாகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-201908:14:36 IST Report Abuse
Mani . V வெளங்கிரும் நாடு. நீதியை நிலைநாட்டும் நியாயவான்கள். (கள்ளக் காதல் தப்பில்லை, வாட்சப் மூலம் விவாகரத்து............) எங்க போய் முடியுமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X