பதிவு செய்த நாள் :
உச்சக்கட்டம்!
கர்நாடக காங்கிரசில் கோஷ்டி மோதல்...:
கூட்டணி அரசு விரைவில் கவிழும் அபாயம்

பெங்களூரு:கர்நாடகாவில், ஆளும் மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட மோதல் மற்றும் காங்கிரசில் ஏற்பட்ட உள்கட்சி போட்டிகளால், கூட்டணி அரசு, விரைவில் கவிழும் அபாயம் உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக,காங்கிரஸ், கோஷ்டி மோதல், உச்சக்கட்டம், கூட்டணி அரசு, கவிழும் அபாயம்

கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது .மாநிலத்தில், கடந்தாண்டு சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 225 தொகுதிகளில், பா.ஜ., 104 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ், 80, மதச் சார்பற்ற ஜனதா தளம், 37 தொகுதிகளில் வென்றது.

விமர்சனம்பெரும்பான்மைக்குத் தேவையான, 113 பேரின் ஆதரவு இல்லாததால், முதல்வர் எடியூரப்பா தலைமையிலான, பா.ஜ., அரசு கவிழ்ந்தது.


இதையடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன், மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைந்தது. இந் நிலையில், காங்கிரசை சேர்ந்த,5, எம்.எல்.ஏ.,க் கள், சமீபத்தில் மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு சென்றனர்.அதன்பின், அவர்க ளுடன் தொடர்பு கொள்ளமுடிய வில்லை.

இந்த, எம்.எல்.ஏ.,க்களை விலை பேசும் முயற்சி யில், பா.ஜ., இறங்கியுள்ளதாக, கர்நாடக அரசியலில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதற்கிடையே, அரசுக்கு ஆதரவு அளித்து வந்த, இரண்டு சுயேச்சை, எம்.எல்.ஏ.,க்களும், ஆதரவை திரும்பப் பெற்றனர். ஆட்சியைப் பிடிக்க, பா.ஜ., தீவிரமாக முயற்சிப்பதாக, காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்தது.

இந்த அரசியல் குழப்பங்கள் குறித்து, அரசியல்

விமர்சகர்கள் கூறியதாவது:கர்நாடகாவில் தற்போதுள்ள நிலையில், ஆட்சியைக் கவிழ்க்க, பா.ஜ., எந்த முயற்சியும் செய்யவில்லை.


போட்டிஅதே நேரத்தில், ஆளும் கூட்டணிக்குள் உள்ள குழப்பங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டு உள்ள கோஷ்டி மோதல்களே, இந்த அரசை கவிழ்த்து விடும் என, பா.ஜ., நம்புகிறது. காங்கிரஸ் கட்சியில், முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் நீர்வள துறை அமைச்சர்,டி.கே. சிவகுமார் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது.இதில் யார் பெரியவர் என்ற போட்டி, அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது.

'லிங்காயத் பிரிவினருக்கு தனியாக இடஒதுக்கீடு அறிவித்ததே, காங்கிரஸ் தோல்விக்கு காரணம்' என, சிவகுமார் கூறினார்.'மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியே, இந்த முடிவு எடுக்கப் பட்டது. அமைச்சரவை கூட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம்' என, அதற்கு, சித்தராமையா பதில் கொடுத்தார்.

கட்சியில், மிகவும் வலிமையானவராக காட்டிக் கொள்ள சிவகுமார் தீவிரமாக முயற்சித்து வரு கிறார். நாட்டின் மிகப் பெரிய பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக அவர் உள்ளார். அதே நேரத்தில், கட்சியின் மூத்த தலைவரான, சித்தராமையாவும், தன் பலத்தை காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியே, தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு காரணமாக இருக்கும்.மேலும், மதச் சார்பற்ற ஜனதா தளத்துடன், கூட்டணி அமைக்க, சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார்.

கோபம்'அதிக தொகுதிகளில் வென்ற, காங்., தலைமை யில் ஆட்சி அமைந்திருக்க வேண்டும்' என, கட்சித் தலைமைக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மீண்டும் முதல்வராகும், தன் கனவு பறிபோனதால், அவர் கடும் கோபத்தில்உள்ளார்.இவ்வாறு காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல் மற்றும் கூட்டணிகளுக்குள் ஏற்பட்ட மோதல்களே, இந்த அரசை கவிழ்த்துவிடும்.

தற்போது இந்த மோதல்கள் தீவிரமடைந்து உள்ள தால், இது மிக விரைவில் நடப்பதற்கு சாத்தியம்

Advertisement

உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.அரசு தொடரும்!எங்கள் கூட்டணி அரசு, முழு பதவிக் காலமும் நீடிக் கும். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், மிகவும் மோசமான, குதிரை பேரத்தில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது, தற்போது நாட்டு மக்களுக்கு தெரிய வந்துள்ளது. கே.சி.வேணுகோபால்பொதுச் செயலர், காங்.,

எங்களுக்கு தொடர்பு இல்லை!கர்நாடக அரசியல் குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல் வருமான, எடியூரப்பா கூறியதாவது: கர்நாடக அரசைக் கவிழ்க்கும் எந்த முயற்சி யிலும், பா.ஜ., ஈடுபடவில்லை. காங்., எம்.எல்.ஏ.,க் களை விலைக்கு வாங்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை. டில்லியில் நடந்த கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத் துக்கு சென்ற, எங்கள் கட்சியின் அனைத்து, எம்.எல்.ஏ.,க்களும், அங்குள்ள, 'ரிசார்ட்'டில் தங்க வைக்கப்பட்டனர்.

இது குறித்து, எதிர்க்கட்சிகள் ஏன் கவலைப்பட வேண்டும்; கேள்வி எழுப்ப வேண்டும்?உங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களை நீங்கள் தான், பாதுகாக்க வேண்டும். அதைவிடுத்து, எங்களை குற்றம் சொல்வது நியாயமில்லை. இந்த ஆட்சியைக் கவிழ்க்க, நாங்கள் எந்த முயற்சி யும் செய்ய வில்லை. அதற்கான அவசியமும் இல்லை. காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் இடையே ஏற்பட்டுள்ள மோதலே, இந்த அரசை கவிழ்த்துவிடும்.

இரு கட்சிகளுக்கும், கூட்டணிக்குள் ஏற்பட்டு உள்ள குழப்பங்களை கவனிக்கவே நேரம் சரி யாக உள்ளது. அதனால், மாநில நிர்வா கத்தை கவனிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
18-ஜன-201917:08:47 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>காங்கிரஸின் லக்ஷணம் தெரிஞ்சுதான் சுதந்திரம் கிடைச்சதும் கலைக்க சொன்னாரு காந்தித்தாத்தா , கேக்கலியே நேரு மாமா எவ்ளோ சின்னங்களை மாத்தினானுக இதுவரை எவ்ளோபிரிவுகள் இருக்கு A டு Z என்று எல்லோரும் தலைவன் ஆர் தலைவி ஒரு இழவும் தெரியாது ஆனால் எல்லாத்துக்கும் தேவை பதவி தலைமை அடிக்கவேணும் துட்டுபல கோடிகளில் அதுக்கு பிஜேபி ஆட்ச்சிலேயே இருந்தால் ஒன்னும் கிடைக்காது என்றுதானே இநத பேயாட்டம் ஆடுறானுக எல்லோரும் மனசாட்சியுடன் சொல்லுங்கள் இவனெல்லாம் சுய உழைப்பால் இவ்ளோகொடிகள் சேர்த்துவச்சுருக்கீங்கன்னு அதுலேயும் ம்மாபெரும் கொடூரமான கொடுமை சசியின் உறவுகளின் கொள்ளை காலம் கோடிகளும் தான்

Rate this:
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
18-ஜன-201916:39:04 IST Report Abuse

Ramachandran  Madambakkamதேவகௌடாவின் கட்சியிலிருந்து 13 பேர் வெளியே வந்தால் அந்த கட்சி பிளவு பட்டதாகவே கருதப்படும். அதற்கு முயற்சி மேற்கொள்ளும் MLA வை முதல் அமைச்சர் என பா ஜ க அங்கீகரிக்க முடிவெடுத்தால் 104 +2 +13 என 119 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று பெரும்பான்மை பெறமுடியும். அதில் 15 பெரும் மந்திரியாக பா ஜ க அனுமதித்தால் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியும்.

Rate this:
Suri - Chennai,இந்தியா
18-ஜன-201914:22:01 IST Report Abuse

Suriமீன் கிடைக்குமா என்று கொக்கு ஒற்றை காலில் தவம் இருந்துகொண்டே இருக்கிறது. எடுயூரப்பா பீ ஜெ பீயின் பெயரை ஏகத்துக்கும் கெடுத்தது தான் மிச்சம். கொக்கு ஏற்கனவே ஏமாந்துவிட்டது. வெளியுலகத்துக்கு படம் காண்பிக்க இப்படிட செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. எப்பொழுது தன்னுடைய MLA க்களை காக்க கூவத்தூர் நாடகம் நடத்த வேண்டி வந்ததோ அப்பொழுதே கொக்கு ஏமாந்துவிட்டது.

Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
18-ஜன-201916:52:27 IST Report Abuse

Chowkidar NandaIndiaகோவாவில் இப்படித்தான் அண்ணன் எப்ப போவாரு, திண்ணை எப்ப காலியாகும்ன்னு ஒத்தை காலில் நின்னது தான் மிச்சம். அண்ணன் ஆரோக்கியமா இருக்காருன்னு சொன்னவுடனே அடிமடில வேர்த்து போச்சு நமக்கு. ஆந்திராவை பிரிச்சி ஆட்டைய போடலாம்னுட்டு பார்த்தா ஆந்திராகாரனும் விரட்டி விட்டான், தெலுங்கானாகாரனும் தள்ளி விட்டான். மீசையை முறுக்கி முறுக்கி இப்ப மீசையே இல்லாம போனது தான் மிச்சம். ஹையோ ஹையோ. ...

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X