பதிவு செய்த நாள் :
உடல் நலக்குறைவால் தலைவர்கள் அவதி:
கடும் கவலையில் பா.ஜ., தொண்டர்கள்

உடல் நலக்குறைவு காரணமாக, பா.ஜ., முக்கியத் தலைவர்கள், திடீரென மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பது, அந்த கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

உடல் நலக்குறைவு, தலைவர்கள்,அவதி, கவலை, பா.ஜ., தொண்டர்கள், ரவிசங்கர் பிரசாத், அருண் ஜெட்லி, அமித்ஷா

ராஜஸ்தான் உள்ளிட்ட, மூன்று மாநில சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்கு பின், சமீபத்தில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் டில்லியில் நடந்தது. முக்கிய தலைவர் கள் அனைவரும் பங்கேற்று, நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தினர்.

அது முடிந்த ஒருசில நாட்களிலேயே, பா.ஜ., வின் முக்கிய தலைவர்கள் பலரும், மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நிதியமைச்சர் அருண் ஜெட்லி, திடீரென அமெரிக்கா கிளம்பிச் சென்றார். கடந்த ஆண்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த ஜெட்லி, அப்போதிருந்தே, மிகுந்த கவனத்துடன் இருந்து வருகிறார்.

தன்னை சந்திக்க வரும் விருந்தினர்கள் கை

கொடுத்தாலும், தொற்று அபாயம் காரணமாக, அதை தவிர்த்து விடுகிறார்.

இம்மாத இறுதியில், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கு கிறது. இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்கும் பணிகள், தீவிரமடைந்து உள்ள நிலையில், நிதியமைச்சரே, வெளிநாட்டுக்கு சென்று இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், 'பட்ஜெட்டை தாக்கல் செய்ய, அவர் வந்துவிடுவார்' என, நிதியமைச்சக வட்டாரங்கள் நம்பிக்கையுடன் உள்ளன.

சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும், திடீரென, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், சமீபத்தில்அனுமதிக்கப்பட்டார். சுவாசப் பிரச்னையால், ஏற்கனவே அவதிப்பட்டு வந்த இவருக்கு, டில்லியில் நிலவும் குளிர், மோசமான வானிலை ஆகியவை, பிரச்னையை ஏற்படுத்தி விட்டன.

இவரைப் பார்க்க, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா வந்தார். நலம் விசாரித்து விட்டுப் போன அவரே, நேற்று முன்தினம் இரவு, அதே எய்ம்சில் சேர்க்கப் பட வேண்டிய நிலைமைக்கு ஆளானார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்த தால், உடனடியாக மருத்துவமனையில்அனுமதிக்க பட்டார்.நேற்று காலையில், பா.ஜ., தேசிய பொதுச் செயலர்களில் ஒருவரும், மூத்த தலைவருமான, ராம்லாலுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர், டில்லியை அடுத்த, நொய்டா வில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால், அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக,

Advertisement

டாக்டர்கள் தெரிவித்துஉள்ளனர்.ஏற்கனவே, சிறுநீரக மாற்று சிகிச்சை செய்த, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், சற்று தளர்வுடன் தான் இருந்து வருகிறார். கோவா முதல்வர் மனோகர் பரீக்கரும், உடல் நலம் தளர்த்து மிகுந்த சோர்வுடன், பணிகளை கவனித்து வருகிறார்.

இவர்கள் அனைவருமே, கட்சி யின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர் கள். லோக்சபா தேர்தல் மிக நெருக்கத்தில் வந்துவிட்ட வேளையில், இவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது, பா.ஜ.,நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களி டையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

அமித் ஷா, 'டிஸ்சார்ஜ்' எப்போது?பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, பன்றி காய்ச்சல் அறிகுறியுடன், டில்லி,'எய்ம்ஸ்' மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் உட்பட, பா.ஜ., தலைவர்கள் பலர், மருத்துவ மனைக்கு சென்று, அமித் ஷாவின் உடல் நலம் பற்றி விசாரித்தனர்.

இந்திலையில், பா.ஜ., - எம்.பி.,யும், கட்சியின் ஊடகப் பிரிவு பொறுப்பாளருமான, அனில் பலுனி, நேற்று கூறியதாவது:அமித் ஷா உடல் நலம் தேறி வருகிறார். இன்னும், இரண்டு நாட்களில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார். அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்தவர் களுக்கு, கட்சி சார்பில், நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-ஜன-201908:19:30 IST Report Abuse

A.George AlphonseThe sickness is common to all human beings.We have to come across the sickness during our lives time in all the stages.Those who all fall in sick in BJP now are all above 60 years and also very busy people.It is not good and correct to mix up their illness with party function and the elections.By worrying about the health of these BJP leaders nothing is going to happen and there are so many young and energetic persons are in this party to take the party towards it's winning point in coming Lokh Sabha election.God is there to saves and protect this party towards it's winning point in coming Lokh Sabha election.

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
18-ஜன-201917:15:45 IST Report Abuse

PANDA PANDIYELLAM SARITHAAN MAAMU. NEENGA ATHA SONNALUM NAMBARAMAARI ELLA. THAT IS THE REAL REASON DEAR. UNBELIEVABLE. PUGALNTHA.. GUJARATH EGALNTHA.. CONGRESS ETHA VITTA ONNUM THERIYAATHU.

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
18-ஜன-201913:46:21 IST Report Abuse

Snake Babuபிஜேபி மூத்த தலைவர்கள் உடல் நலம் தேற வாழ்த்துக்கள். உடல் நல குறைவு அனைவருக்கும் ஏற்படும் சாதாரண நிகழ்வு, இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து போடுவது தவறு. நன்றி வாழ்க வளமுடன்

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X