அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கிங் மேக்கர், ஸ்டாலின், கனவு, பலிக்குமா?

சென்னை: நாட்டின் பிரதமர் யார் என முடிவு செய்யும், 'கிங் மேக்கர்' ஆக நினைக்கும், தி.மு.க., தலைவர், ஸ்டாலினின் கனவு பலிக்குமா என்பது, கோல்கட்டாவில், நாளை தெரிய வரும். காங்., தலைவர் ராகுல் கலந்து கொள்ள முன்வராத, திரிணமுல் காங்., தலைவர் மம்தா நடத்தும் கூட்டத்தில் பங்கேற்று, தேசிய முக்கியத்துவம் பெற, ஸ்டாலின் முயற்சி மேற்கொண்டு உள்ளார். வரும் ஏப்., அல்லது மே மாதத்தில், லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய அளவில், பா.ஜ., ஆட்சியை வீழ்த்துவதற்காக, மாநிலக் கட்சிகள் அனைத்தும், ஓரணியில் திரண்டு வருகின்றன.
கடந்த, 2018 டிச., 10ல், டில்லியில், தேசிய அளவில், எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், காங்கிரஸ் முன்னாள் தலைவர், சோனியா தலைமையில் நடந்தது. அக்கூட்டத்தில், மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்படுவது குறித்தும், பா.ஜ.,வை வீழ்த்துவது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. ஆனால், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, முடிவு செய்ய வில்லை. 'தேர்தலுக்கு பின், பிரத மரை தேர்வு செய்யலாம்' என, வட மாநில கட்சிகளின் தலைவர்கள் கூறியது தான், இதற்கு காரணம்.
இந்நிலையில், டிச., 16ல், சென்னை, அறிவாலயத்தில், கருணாநிதி சிலையை, சோனியா திறந்து வைத்தார். அதன்பின், ராயப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில், சோனியா, ராகுல், ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர், பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி

ஆகியோர்பங்கேற்றனர்.அதில், ராகுலை, பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் முன்மொழிந்தார். இது, தேசிய அளவில், எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது.
காங்கிரசுடன் கூட்டணி சேர விரும்பிய கட்சிகள் கூட, இந்த அறிவிப்பால் பின்வாங்கின. இந் நிலையில், தேசிய அளவில், எதிர்க்கட்சித் தலைவர்களின், இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம், நாளை, கோல்கட்டாவில் நடைபெறுகிறது. மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்து உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்க, ராகுல் மறுத்து விட்டதாக தெரிகிறது. ஆனால், ஸ்டாலின், இன்று கோல்கட்டா செல்கிறார். அங்கு, நாளை நடக்கவுள்ளஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ராகுலை, பிரதமர் வேட்பாளராக, தேசிய அளவில் முதன் முதலாக, ஸ்டாலின் தான் முன்மொழிந்தார். அவரது அறிவிப்பை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர், அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜிபோன்றோர் ஏற்கவில்லை. அதற்கு காரணம், அவர்கள் மூவரும், பிரதமர்

பதவிக்கு கனவு காண்கின்றனர்.
ஆனாலும், ஸ்டாலினின் அறிவிப்பு, தேசிய அளவில், அவரை அடையாளப்படுத்தியது. மாநில கட்சிகள் எதிர்த்த போதிலும், காங்கிரசில், அவருக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. எனவே, மம்தா அழைப்பை ஏற்று, நாளைய கூட்டத்தில் பங்கேற்க, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
மம்தா ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில், பா.ஜ.,வுக்கு எதிரான தேர்தல் வியூகம் குறித்தே ஆலோசிக்கப்பட உள்ளது. ஆனால், அந்த வியூகம், காங்கிரஸ் தலைமையிலானதா என்பது சந்தேகம். ஏனெனில், மம்தாவுக்கு என, தனி தேர்தல் வியூகம் உள்ளது.பா.ஜ.,வை எதிர்க்கும் மாநில கட்சிகள் எல்லாம் சேர்ந்து, தனி கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே, அவரது விருப்பம்.
தேர்தல் முடிவுகளுக்கு பின், யார் ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது அல்லது மாநில கட்சிகளின் கூட்டணியே, ஆட்சிக்கு தலைமை ஏற்பதாஎன்பதை தீர்மானிக்கலாம் என, மம்தா நினைக்கிறார். அதை வலியுறுத்தவும், வலு சேர்க்கவும், கோல்கட்டாவில் கூட்டத்தை கூட்டியுள்ளார். மம்தாவின் திட்டம் அறிந்த, ராகுல், நாளைய

கூட்டத்திற்கு வரப் போவதில்லை என்பது, உறுதியாகி உள்ளது.
ஆனால், ராகுலை, பிரதமராக்கவும், காங்., தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாகவும் உள்ள ஸ்டாலின் பங்கேற்பதால், அவர் என்ன கருத்து சொல்லப் போகிறார் என்ற, கேள்வி எழுந்துள்ளது. 'மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும், கருத்து வேறுபாடுகளை களைந்து, ஒரு குடையின் கீழ் பணியாற்ற வேண்டும்' என்பதை வலியுறுத்த, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
இதன் வாயிலாக, தேசிய அளவில், ஒரு பெரிய கூட்டணியை கட்டமைத்து, 'கிங் மேக்கர்' ஆகலாம் என, அவர் எதிர்பார்க்கிறார். அவரது கனவு பலிக்குமா என்பது, மம்தா உள்ளிட்ட, மற்ற தலைவர்கள் அளிக்கப் போகும் ஆதரவை பொறுத்தே அமையும். உ.பி.,யில், காங்கிரஸ் இல்லாமல், மாயாவதி - அகிலேஷ் யாதவ் கூட்டணி வைத்திருப்பதால், தேர்தல் முடிவுக்கு பின், பிரதமரை தேர்வு செய்யலாம் என்ற நிலைப்பாட்டுக்கு, அவர்கள் வந்துள்ளனர்.
எனவே, அந்த கருத்தை எதிர்த்தோ அல்லது ராகுலை தான் பிரதமர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்றோ, ஸ்டாலின் பேச போவது இல்லை. அதேநேரத்தில், பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணியில், காங்கிரஸ் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தவும், அதன் வாயிலாக, ராகுல் பங்கேற்காத நிகழ்ச்சியில், தனித்துவம் பெறவும், அவர் திட்டமிட்டுள்ளார்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.


Advertisement

வாசகர் கருத்து (123)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
metturaan - TEMA ,கானா
21-ஜன-201919:10:03 IST Report Abuse

metturaanமொதோ ஜோக்கர் ஆகாம இருக்கட்டும் தமாசு பண்ணாதீங்க தினமலர்

Rate this:
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
18-ஜன-201920:06:13 IST Report Abuse

ஏடு கொண்டலுஆசை எல்லாம் நல்லாத் தான் இருக்கு... எப்புடி நடத்திக் காட்டுவாப்ல? இவுரு பேசுற vacuum is filed as it is cried இங்கிலீசு நமக்கு புரியும்... இந்தியும் வராது. இத வச்சிக்கிட்டு கும்மிடிப்பூண்டி தாண்டுறதே கஷ்டமாச்சே.

Rate this:
rajan. - kerala,இந்தியா
18-ஜன-201919:52:30 IST Report Abuse

rajan.  கிங் மேக்கரா ஊழல் கிங் மேக்கரா. எதில் நிபுணத்துவமோ அதில் உருவாகிறவங்க. நாட்டிற்கு சீரழித்து அவிங்க குடும்பத்தை வாழ வைத்துக்குவாங்க.

Rate this:
மேலும் 120 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X