ராகுலின் ஆலோசகர் ரகுராம் ராஜன்? இளைஞர்களை கவர புது திட்டம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ராகுலின் ஆலோசகர் ரகுராம் ராஜன்?
இளைஞர்களை கவர புது திட்டம்

புதுடில்லி:வரும் லோக்சபா தேர்தலுக்கு எந்த மாதிரியான பிரச்னையை கையில் எடுத்து, பிரசாரம் செய்யலாம் என காங்., தலைவர் ராகுலுக்கு, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் யோசனை வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல்,ஆலோசகர், ரகுராம் ராஜன், இளைஞர், புது திட்டம்

மோடி அரசை தாக்குவதற்கு ரகுராம் ராஜனிடம் இருந்து சில ஆலோசனைகளை பெற விரும்பி உள்ளார் ராகுல். வேலைவாய்ப்புகளை

உருவாக்க மோடி அரசு தவறியதை கையில் எடுக்க நினைத்த ராகுல், அதற்கு மாற்றான தீர்வுகள் குறித்த யோசனையை பெற்று அதை பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளதிட்ட மிட்டு உள்ளார்.சில நாட்களில் மட்டும்ரகுராம் ராஜனை, ராகுல் இருமுறை சந்தித்து பேசி உள்ளார். கடந்த வாரம் துபாய் சென்ற ராகுல் அவரிடம் பேசி உள்ளார்.


அவரிடம் ஆலோசிக்கும் விவகாரங்களின் அடிப் படையில் தேர்தல் பிரசாரத்துக்கு ராகுல் தயார் படுத்தி வருகிறாராம். முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் அறிவுரையின்படியே ரகுராம் ராஜனிடம் அவர் பேசி வருகிறார்.

மோடி அரசுக்கு எதிராகவும், அதே சமயம் இளைஞர்களை கவரவும் வேலைவாய்ப்பின்மை பிரச்னையை கையில் எடுப்பதே சரியானதாக

Advertisement

இருக்கும் என ராகுல் நினைக்கிறார். காங்., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலை வராக உள்ள சிதம்பரம்,நிபுணர்கள் பலரிடமும் ஆலோசித்து வருகிறார்.


2012-13 ம் ஆண்டில் சிதம்பரம் தான்,ரகுராம் ராஜனை தலைமை பொருளாதார ஆலோசகராக வும், ரிசர்வ் வங்கி கவர்னராக வும் நியமித்தார். 2016 செப்.,ல் நிறைவடைந்த ரகுராம்ராஜனின் பதவி காலத்தை மோடி அரசு புதுப்பிக்கவில்லை. அவரது பதவிக்காலம் முடிந்ததும் 2016 நவம்பரில் கறுப்பு பண ஒழிப்புக்காக பண மதிப்பிழப்பை அறிவித்தது.

அதிருப்தியில் மோடி


அரசுக்கு எதிராக கருத்து கூறி வந்த ரகுராம் ராஜன், அமெரிக்கா சென்று சிகாகோ கல்லுாரியில் பணியாற்றி வருகிறார்.


Advertisement

வாசகர் கருத்து (36+ 68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஜன-201921:06:00 IST Report Abuse

Nallavan Nallavanஅமெரிக்காவில் சம்பாதிப்பதை விட காங்கிரசின் ஏஜென்ட்டாக இருந்து சம்பாதித்துவிடலாம் என்று எண்ணுகிறார் போலிருக்கிறது ...... அடுத்த மண்மோகன் ரெடி .....

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
18-ஜன-201919:11:48 IST Report Abuse

Vijay D Ratnamஉண்மையிலேயே டாக்டர் சுப்ரமண்ய சுவாமி தீர்க்கதரிசினிதான். ஆரம்பத்திலிருந்தே சொல்லிக்கொண்டு வந்தார். இந்த ரகுராம்ராஜன் ஒரு கான்கிராஸ் அல்லக்கை என்று. ப.சிதம்பரம்தான்,ரகுராம் ராஜனை தலைமை பொருளாதார ஆலோசகராகவும், ரிசர்வ் வங்கி கவர்னராகவும் நியமித்தார். நிறைவடைந்த ரகுராம்ராஜனின் பதவி காலத்தை மோடி அரசு புதுப்பிக்கவில்லை. அந்த கடுப்பில்தான் அரசுக்கு எதிராக கருத்து கூறி வந்த ரகுராம் ராஜன் இப்போது தான் கான்க்ராஸின் அல்லக்கை என்று அப்பட்டமாக தெரிவிக்கிறார்.

Rate this:
rajan. - kerala,இந்தியா
18-ஜன-201917:32:54 IST Report Abuse

rajan.  ஒரு பொருளாதார மேதையை குட்டிச்சுவராகி அழகு பார்த்து விட்டனுங்க இப்போ அடுத்து ஒருவரை வைத்து ஆட்டைய போட தயாராகி வர்றானுங்க.

Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X