வேண்டுமா, வேண்டாமா, எடுபடாது! சபரிமலை விவகாரத்தில் கமல், 'தெளிவு'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேண்டுமா, வேண்டாமா, எடுபடாது! சபரிமலை விவகாரத்தில் கமல், 'தெளிவு'

Added : ஜன 18, 2019 | கருத்துகள் (71)
Advertisement
வேண்டுமா, வேண்டாமா, எடுபடாது,சபரிமலை,கமல்,தெளிவு

சென்னை : ''சபரிமலை விவகாரத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும். மக்கள் தீர்மானித்துவிட்டால், எதுவும் எடுபடாது,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: மக்கள், எந்தவொரு பிரச்னை என்றாலும், சென்னைக்கு தான் வர வேண்டும் என்ற அசவுகாரியம் இருக்க கூடாது. இதனால், நான்கு மண்டலங்களில், எங்களது அலுவலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டம் பற்றி தெரியும். ஆனால், அதுபற்றி முடிவு செய்யும் தருணம், இது கிடையாது. அந்த கூட்டத்தில் பங்கேற்க, எங்களுக்கு அழைப்பு வரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நெருக்கமாக இருப்பதால், அழைப்பு வரவில்லை என்பது கிடையாது. எங்கெல்லாம் நல்ல விஷயங்கள் நடக்கிறதோ, அங்கு போய் விடுவேன்.

பிரதமர் சொல்லவது போல், கேரள அரசு மோசமாக நடப்பதாக சொல்லி விட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவை பாதுகாக்க வேண்டியது,அரசின் கடமை. சபரிமலை, கேரளாவில் இல்லாமல், தமிழகத்தில் இருந்திருந்தாலும், அதை செய்ய, கடமைப்பட்டு இருப்போம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்தொடர்ந்து இருப்போம்.

சபரிமலை விவகாரத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும். மக்கள் தீர்மானித்துவிட்டால், எதுவும் எடுபடாது. இவ்வாறு, அவர்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
19-ஜன-201902:00:13 IST Report Abuse
ராஜேஷ் சபரிமலை விவகாரத்தில் எல்லாரும் சேர்ந்து எங்கள் நம்பிக்கையை கெடுக்க நினைக்கிறீர்கள் .எவ்வளவு ஆடணுமோ ஆடுங்கள் , மதுரை மீனாட்சி , ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்த அக்கிரமங்களை மீட்க வந்த அரசர்கள் மாதுரி .சபரிமலையை காக்க ஒருவன் வராமலா போவான் ?
Rate this:
Share this comment
Cancel
Velan -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜன-201923:46:25 IST Report Abuse
Velan மக்கள் என்ற பெயர் கொண்ட யாராவது சொல்லுங்க
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-ஜன-201921:02:34 IST Report Abuse
Nallavan Nallavan மக்க்கள்தான் தீர்மானித்து தீர்ப்பை எதிர்க்கிறார்களே ?? அது இந்த .....போதிக்குத் தெரியாதா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X