பிரதமராக சிறந்த நபர் : மம்தாவை புகழ்ந்த சத்ருகன் சின்ஹா

Added : ஜன 18, 2019 | கருத்துகள் (33)
Advertisement
சத்ருகன் சின்ஹா, மம்தா பானர்ஜி, பா.ஜ., பிரதமர், லோக்சபா தேர்தல்

புதுடில்லி : பிரதமர் பதவிக்கு சிறந்த நபர் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசி, அடுத்த சிக்கலுக்கு வழிவகுத்துள்ளார் பா.ஜ., எம்.பி.,யான சத்ருகன் சின்ஹா.

பீஹார் மாநிலம் பாட்னா சாஹிப் லோக்சபா தொகுதியின், எம்.பி.,யாக உள்ளவர், பிரபல பாலிவுட் நடிகர், சத்ருகன் சின்ஹா, 72. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களையும், பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். மத்திய அமைச்சர் பதவி கிடைக்காததால், அவர், இந்த போக்கை பின்பற்றி வருகிறார். ''கட்சியில் இருப்பது பிடிக்கவில்லை என்றால், ராஜினாமா செய்துவிடுங்கள்,'' என, பா.ஜ., அதிருப்தியாளரான, சத்ருகன் சின்ஹாவுக்கு, பீஹார் துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷில் குமார் மோடி நேற்று ஆலோசனை வழங்கி இருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து மம்தா பானர்ஜி நடத்த உள்ள கூட்டத்தில் தான் கலந்து கொள்ள உள்ளதாக சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2 எம்.பி.,க்கள் மட்டுமே இருந்த போது நான் பா.ஜ.,வில் சேர்ந்தேன். கட்சிக்காக உழைத்து கட்சியை பலப்படுத்தினேன். மம்தா நடத்தும் கூட்டத்தில் நானும், யஷ்வந்த் சின்ஹாவும் (மற்றொரு பா.ஜ., அதிருப்தியாளர்) கலந்து கொள்ள உள்ளோம். சில பா.ஜ., தலைவர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.

லோக்சபா தேர்தலுக்கு பின் மம்தா பானர்ஜி பிரதமராகி விட்டால் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் யார் என்பதை தேர்தலுக்கு பிறகு மக்களும், கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் மம்தா,பிரதமர் பதவிக்கு சிறந்த நபர். அவர் மாநில தலைவர் மட்டுமல்ல. முக்கியமான தேசிய தலைவரும் கூட என புகழ்ந்து பேசினார். வரும் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.,வின் நட்சத்திர பேச்சாளர்களின் ஒருவராக இருக்கும் சத்ருகன் சின்ஹாவின் இத்தகைய செயல்பாடு பா.ஜ.,வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
18-ஜன-201920:04:50 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மமதாவுக்கு இப்போது ஜென்மத்து சனி ஆரம்பமாயிருக்காமே அதான் இந்த பேக்காவாதாரம் இந்தம்மாவை புகலூரார் ஜாக்கிரதை மம்தா ஜீ
Rate this:
Share this comment
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
18-ஜன-201919:58:06 IST Report Abuse
jambukalyan BJP யில் இருந்து கொண்டு Mamta வைப் புகழும் வெட்கம் கெட்ட ஒருவன்
Rate this:
Share this comment
Cancel
18-ஜன-201918:45:15 IST Report Abuse
நக்கல் BJPல் இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு தறுதலைகள் கட்சி பேரை கெடுப்பதற்கென்றே இருக்கின்றன.. அடித்து விரட்டவேண்டும்..
Rate this:
Share this comment
skv - Bangalore,இந்தியா
19-ஜன-201912:05:32 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>இந்தாளு ஒரு மொடாக்குடிகாரனுக இவன் வாய் இப்படியேதான் கேவலமா உளறினே இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X