கள்ள பயண பெண்களுக்கு பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : ஜன 18, 2019 | Added : ஜன 18, 2019 | கருத்துகள் (78)
Advertisement
சபரிமலை, கள்ள பயண பெண்கள், சுப்ரீம் கோர்ட், கனக துர்கா, பிந்து, கேரள அரசு

புதுடில்லி: சபரிமலைக்கு கள்ளத்தனமாக சென்று தரிசனம் செய்த கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


மாமியார் தாக்குதல்


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 'அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கலாம்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. ஆனால், 10 - 50 வயதுள்ள பெண்களை அனுமதிக்க விடாமல், ஐயப்ப பக்தர்கள் போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவிலின் பாரம்பரியத்தை தகர்த்து, சமீபத்தில், இரண்டு பெண்களை, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, மாநில அரசு, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றது.கேரளாவைச் சேர்ந்த, கனகதுர்கா, 44, பேராசிரியை பிந்து ஆகிய இருவரும், கள்ளத்தனமாக சென்று தரிசனம் செய்ததற்கு, பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.இந்தப் பெண்கள், பலத்த பாதுகாப்புடன், அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டுக்குச் சென்ற, கனகதுர்காவை, அவரது மாமியார் தாக்கியதால், தலையில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


உத்தரவு


இந்நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, இந்த இரண்டு பெண்கள் சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், இன்று (ஜன.,18) விசாரணை வந்தது. அப்போது, பெண்களின் பாதுகாப்புக்கு மாநில அரசு தான் பொறுப்பு. இரண்டு பேருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள போலீசாருக்கு உத்தரவிட்டது.


மறுப்பு


பெண்களின் சார்பில், போராட்டம் நடத்திய பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.பக்தர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சபரிமலையில் தரிசனம் செய்த கள்ளபயண பெண்கள் இருவரும், இடதுசாரிகள் எனக்கூறினார்


51 பெண்கள்

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 50 வயதுக்கு உட்பட்ட, தமிழகத்தை சேர்ந்த 24 பேர் உட்பட 51 பெண்கள் இதுவரை சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. தரிசனம் செய்த பெண்களின் விவரத்தையும் தாக்கல் செய்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
19-ஜன-201910:27:27 IST Report Abuse
ரத்தினம் இந்த பொய் லிஸ்டில் பெரிய தகிடு தத்தம் நடந்திருக்கிறது என்று ஏற்கனவே ஒரு டிவி நிகழ்ச்சி யில் அந்த அந்த பேருக்கே நேரலையில் போன் போட்டு கிழி கிழி என்று கிழித்து விட்டார்கள். மக்கள் விரோத கம்யூனிஸ்டுகள், அதற்கு நீதி மன்றம் துணை போனது கேலி கூத்து.
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
19-ஜன-201910:22:27 IST Report Abuse
Krish Sami "சுப்ரீம் கோர்ட் ஆணை இதை விமர்சிக்க யாரும் இல்லை. பி.விஜயன் இடத்தில் இவர்கள் இருந்தால் என்ன செய்வார்கள்? புகழ்". பலரும் இப்படி எந்த பொருளும் இல்லாமல் பேத்தவே செய்கிறார்கள். திரு. பினராயி விஜயன் எல்லா உச்சநீதிமன்ற ஆணைகளையும் மதிக்கின்றாரா? "Piravom Church Case" , முல்லை பெரியார் என்று தேடுங்கள். அவர் கதை தெரியும். இவர் விரும்பும் தீர்ப்பென்றால் எந்த மாற்று கருத்தையும் மனதில் கொள்ளாமல் பாய்ந்து செய்வார். இவருக்கு விரும்பாத தீர்ப்பென்றாலோ, செய்தால் தனக்கு தொல்லை வரும் என நினைத்தாலோ, அந்த தீர்ப்புக்கு எதிராக எந்த வகையில் தாமத படுத்த முடியுமோ அதை செய்வார். இந்த பாகுபாட்டை பற்றித்தான் பலரும் பினராயி விஜயன் அவர்களை கிழித்து நார் நாராக போடுகிறார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் இந்து மத வெறுப்பாளர்களுக்கும், நாத்திகவாதிகளுக்கும் இது புரியாது - அவர்கள் 'வளர்ச்சி' அவ்வளவே. நானும் ஒரு நாத்திகன் என்பது வேறு விஷயம். நான் மற்றவர்கள் மத உணர்வை - இந்துவானாலும், இஸ்லாமியர் என்றாலும், கிறிஸ்த்துவர் என்றாலும், வேறு எந்த மதத்தினர் என்றாலும் - முழுவதுமாக மதிப்பவன். அரைவேக்காட்டு நாத்திகன் அல்ல.
Rate this:
Share this comment
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
19-ஜன-201900:49:45 IST Report Abuse
unmaitamil இது பினராய்க்கு, SC கொடுத்த சரியான மரண அடி தீர்ப்பு . இவர்கள் கொடுத்த கோவில் சுத்திகரிப்பு, தந்திரி மேல் நடவடிக்கை, பெண்களுக்கு தனி வழி போன்ற மற்ற பல வழக்குகள் எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, இந்த இரு பெண்களுக்கும் 24 மணிநேரமும் பாதுகாப்பு கொடு என்ற உத்தரவை மட்டும் கூறி, பினராயை, (bodyguard ) காவல்காரனை போல் ஆக்கி விட்டது. இனி இந்த இரு பெண்களையும் பினராய் தோளில் சுமக்க வேண்டும். எத்தனை காலமோ ???? இவர்கள் கொடுத்த 51 பெயர் லிஸ்டில் பல ஆண்களும், 60 வயதை தாண்டிய பெண்களும் உள்ளனர். கேரளாவே சிரிப்பாய் சிரிக்கிறது. இனியாவது இவர்கள் திருந்தட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X