பயங்கரவாத தாக்குதலில் தப்பித்தவர் கென்யாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார்

Updated : ஜன 18, 2019 | Added : ஜன 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement
பயங்கரவாத தாக்குதலில் தப்பித்தவர்  கென்யாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார்

நியூயார்க்: 2001 செப்.,11ல் நியூயார்க் நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்பிழைத்த அமெரிக்காவை சேர்ந்த ஜேசன் ஸ்பிண்ட்லர்(40) என்ற தொழில் அதிபர் ஒருவர், கென்யாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பரிதாபமாக உயிர் இழந்தார்.
கென்யா தலைநகர் நைரோபியில் கடந்த 16ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஓட்டலில் தங்கியிருந்த ஜேசன்ஸ்பிண்ட்லரும் உயிர் இழந்தார். அவருக்கு அடுத்த வாரம் தான் 41 வயதாக உள்ளது.

ஐ தேவ் இண்டர்நேஷனல் என்ற பெயரில், முதலீடுகள் குறித்த ஆலோசனை அளிக்கும் நிறுவனம் நடத்தி வரும் ஸ்பிண்ட்லர், மற்றவர்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிறுவனத்தை துவக்குவதற்கு முன்னர், நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் பணிபுரிந்து வந்தார். தலிபான் பயங்கரவாதிகள் நியூயார்க்கின் இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்திய அன்று, அவர் பணிக்கு காலதாமதமாக சென்றதால், அவர் உயிர் பிழைத்ததாக அவரது பெற்றோர் கூறி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
metturaan - TEMA ,கானா
18-ஜன-201918:55:36 IST Report Abuse
metturaan விதி.... வலியது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X