பதிவு செய்த நாள் :
தொழில் துவங்க சாதகமான நிலை:
பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

காந்திநகர்:''உலகில், தொழில் துவங்குவதற் கான ஏற்ற நாடுகள் பட்டியலில், 75இடங்கள் முன்னேற்றம் அடைந்து, 77வது இடத்தில், இந்தியா உள்ளது,'' என, பிரதமர் மோடி கூறினார்.

தொழில், துவங்க,சாதகமான,நிலை, பிரதமர்,நரேந்திர,மோடி பெருமிதம்

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள காந்தி நகரில், குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை குறிக்கும் வகையிலான, 'வைப்ரன்ட் குஜராத்' என்ற பெயரிலான, சர்வதேச மாநாடு, நேற்று துவங்கியது.இதில், பிரதமர் மோடி பேசியதாவது:

மத்தியில், நான்கு ஆண்டுகளுக்கு முன், தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்றது.'சீர்திருத்தம், செயல்பாடு, புத்தாக்கம், மீண்டும் செயல்பாடு' என்ற தாரக மந்திரத்தை முன்வைத்து, அரசு செயலாற்றி வருகிறது.நாட்டின் சராசரியான பொருளாதார வளர்ச்சி, 1991-ம் ஆண்டுக்கு பின், நான்காண்டுகளில்கடந்த நான்கு ஆண்டுகளாக,

7.3 சதவீதமாக இருந்து வருகிறது. பணவீக்கம், 4.6 சதவீதமாக, தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்தியாவுக்கு அடிக்கடி வருபவர்கள், கடந்த ஏற் பட்டுள்ள மாற்றத்தை, நிச்சயம் உணர்ந்து உள்ளனர். இங்கு, தொழில் செய்வது எளிமை யாக்கப்பட்டு உள்ளது.ஜி.எஸ்.டி.,எனபடும் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. வரிகள் சீர் திருத்தம் செய்யப்பட்டு, செலவு குறைக்கப்பட்டுள்ளது.


டிஜிட்டல் பரிவர்த்தனை,ஆன்லைன் பரிவர்த்தனை, ஒற்றை சாளர அனுமதி ஆகிய நடவடிக்கைகளும், வர்த்தகம் செய்வதை எளிமையாக்கியுள்ளன. அத னால்,முன் எப்போதும் இல்லாத அளவில், தொழில் துவங்க உகந்த நாடாக, இந்தியா மாறியுள்ளது.

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் ஆகியவை, இந்தியாவின் பொருளாதாரம் குறித்து, திருப்தி தெரிவித்து உள்ளன. இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள விஷயங்களை அகற்றுவதில், கவனம் செலுத்தி வருகிறோம்.

இதன் பலனாக, உலக வங்கியின், எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் பட்டியலில், 75 இடங்கள் முன்னேறி, 77௭வது இடத்தில், இந்தியா உள்ளது. அடுத்த ஆண்டுக்குள், முதல், 50 இடங்களுக்குள் வரும் வகையில்,கடுமையாக உழைக்க வேண்டும்.

Advertisement

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி, அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் சிறப்பான கொள்கைகளால், கடந்த நான்கு ஆண்டுகளில், நேரடி அன்னிய முதலீ டாக, 18 லட்சத்து, 21 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.சாலைகள், துறை முகங்கள், ரயில்வே, விமான நிலையங்கள், தொலை தொடர்பு போன்ற துறைகளில் முதலீட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

இந்த மாநாட்டில், உஸ்பெகிஸ்தான் அதிபர், ஷாவத் மிர்ஜியோவ், ருவாண்டா அதிபர், பால் ககாமி, தொழில் அதிபர்கள்உட்பட பலர் பங்கேற்றுஉள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜன-201919:28:15 IST Report Abuse

Pugazh Vரெண்டு நாளாக இந்த கட்டுரை யை இங்கே வைத்திருந்தேம் 20, 24 பேர் தான் ஏதோ கருத்து சொல்லி யிருக்காங்க. அப்போ.ஒரு 40 பேர் படிச்சிருப்பாங்கன்னு வெச்சுக்கலாம்.. பரிதாபமாக இருக்கிறது. தேஞ்ச சிடிய கிளிஞ்ச திரைல எத்தனை நாள் தான் ஓட்டுவாங்க..ரசிகரா இருந்தாலும் எத்தனை முறை கை தட்டறது???

Rate this:

முடியட்டும் விடியட்டும் சூரியன் உதிக்கட்டும் இருக்கிற சிறுவியாபாரிகளை காலி செய்துவிட்டு இப்போ பெரு முதலாளிக்கு ரெட் கார்பெட் வரவேற்பு என்னமோ குஜராத் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் போல ஏன் அதை மஹாராஷ்டிராவிலோ இல்லை தமிழ்நாட்டிலோ நடத்த கூடாது

Rate this:
Sathiyanathan - Paris,பிரான்ஸ்
19-ஜன-201911:25:07 IST Report Abuse

Sathiyanathanமோடி தலைமையிலான கடந்த 4ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் கடன் 50% உயர்ந்துள்ள தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. 54 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் தொகை தற்போது 82 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அய்வறிக்கை தெரிவித்து உள்ளது. மோடியின் திறமையற்ற ஆட்சி காரணமாக, வங்கிகளில் கடன் வாங்கிய பெரும் பண முதலைகள், நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர். இதன் காரணமாக வங்கிகள் பேரழிவை சந்தித்து வருகின்றன. மேலும் கறுப்பு பணத்தை கொண்டு வருவேன் என்ற மோடி… அதை கண்டு கொள்ளாத நிலையில், நாட்டின் கடன் மட்டும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.

Rate this:
Manian - Chennai,இந்தியா
20-ஜன-201913:26:08 IST Report Abuse

Manianதவறான கருத்து. அமெரிக்காவின் கடன் தற்போது சுமார் 1 டிரிலியன் டாலர். அம்மெரிகா போண்டி ஆகிவிட்டாதா? ராணுவதை பலப்படுத்த, வெளி நாட்டு கடன் வட்டி, விவசாயிகள் கடன் தள்ளுபடி, பேங்குகளில் வாராக் கடன், அரசாங்க சிப்பந்திகளின் சம்பளம், மற்றய நாடுகளுக்கு உதவி, யூஎன் படைகளுக்கு செலவு... கருப்பு பணம் கொண்டு வருவது மெதுவாக பலன் வரும். வெளி நாடுகளில் கள்ளப் பணம் இருந்தாலும், நமது ஆர்மி அங்ககே போய் .. வர முடியாது. ஓட்டே போடாதவனக்கு இந்தியாவைப் பற்றி ஏன் கவலை? ...

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X