பதிவு செய்த நாள் :
முக்கியத்துவம்!
அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...
ஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு

புதுடில்லி:இந்தியாவுடன், ராணுவம் சார்ந்த, இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க, அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஏவுகணைபாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு குறித்து,இந்தியாவுடன், அமெரிக்கா, விரிவான பேச்சு நடத்தியுள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், 'இந்திய - பசிபிக் ராணுவ உத்தி சார் திட்டத்தில், இந்தியா முக்கியத்துவம் பெற்ற நாடாக திகழ்கிறது' என, கூறப்பட்டு உள்ளது.

 முக்கியத்துவம்!,அமெரிக்க, ராணுவ,நட்புறவில்,இந்தியாவுக்கு...:	ஏவுகணை,துறையில்,ஒத்துழைப்பு,அளிக்க,முடிவு

பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளுடன் நெருங்கிய நட்புறவு பாராட்டும் வகையில், பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று, நட்புறவை வளர்த்து வருகிறார். இதனால், பல நாடுகளில், இந்தியா மீதான அபிப்பிராயம் சிறப்பானதாக மாறியுள்ளது.

உலகின் வல்லரசுகளில் ஒன்றாக திகழும் அமெரிக்கா, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கத் துவங்கியுள்ளது.

முன்னுரிமை



இந்தியாவுடனான இருதரப்பு உறவை, அனைத்து துறைகளிலும் செம்மைப்படுத்த, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் முன்னுரிமை அளித்து வருகிறார். இதன் ஒரு கட்டமாக, ராணுவ உத்திசார் நட்புறவை அதிகரிக்கும் நோக்கில், இந்தியாவுடன்,

அமெரிக்கா பேச்சு நடத்தியுள்ளது. இந்த பேச்சின் போது, இந்தியாவுடன், ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, இரு தரப்பு பிரதி நிதிகளும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, 'ஏவுகணை பாதுகாப்பு மறு ஆய்வு' என்ற பெயரில், 81 பக்க அறிக்கையை, அமெரிக்க ராணுவ தலைமையகமான, 'பென்டகன்' வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ள தாவது: ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, இந்தியாவுடன், அமெரிக்கா பேச்சு நடத்தியது. அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ பங்குதாரராகவும், அமெரிக்காவின், இந்திய - பசிபிக் ராணுவ உத்தி சார் திட்டத்தில், முக்கிய நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

ஆதிக்கம்



இந்தியாவுடன், ராணுவ உத்தி சார் நட்புறவை, மேலும் அதிகரிக்க, அமெரிக்கா விரும்புகிறது. இந்திய பெருங்கடல் பாதுகாப்பு விஷயத்தில், இந்தியாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்வதில், அமெரிக்கா உதவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.அந்த அறிக்கையில், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் ஏவுகணை பாதுகாப்பு திட்டங்கள், பெரியளவில் அச்சுறுத்தல்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து, 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 'எஸ் - 400' ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க, இந்தியாஒப்பந்தம் செய்துள்ளதை, அமெரிக்கா பெரிதுபடுத்தவில்லை. இது, இந்தியாவுக்கு, அமெரிக்கா அளித்துவரும் முக்கியத்துவத்தை, உறுதி செய்வதாகஉள்ளது.

ராணுவ தளவாட தொழிற்சாலை நாசிக் நகரில் அமைக்க முடிவு



மஹாராஷ்டிராவின் நாசிக் நகரில், ராணுவ

Advertisement

தளவாடங்கள் தொழிற்சாலை மண்டலம் அமைய உள்ளதாக, ராணுவ இணையமைச்சர், சுபாஷ் பாம்ரே கூறியுள்ளார்.நாசிக் நகரில் நேற்று, ராணுவ தொழில்துறை சார்ந்த வல்லு னர்கள் பங்கேற்ற, சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற, அமைச்சர் சுபாஷ் பாம்ரே பேசியதாவது:

ஏற்கனவே, தமிழகத்தின் கோவை நகரில், ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலை மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், நாட்டின் இரண்டாவது, ராணுவ தள வாடங்கள் தொழிற்சாலை மண்டலம், நாசிக் நகரில் அமைக்கப்பட உள்ளது.இந்த தொழிற் சாலை மண்டலம், உள்ளூர் தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கு உதவும்.

மேலும், மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா' எனப்படும், 'இந்தியாவில் தயாரியுங்கள்' திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இந்த திட்டம் திகழும்.

வரும், 2025க்குள், ஆயுதங்கள் ஏற்றுமதியில், உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக, இந்தியா திகழ வேண்டும் என, இலக்கு நிர்ண யிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய திட்டமிடப் பட்டுள்ளது .இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
123 - Nellai,இந்தியா
19-ஜன-201914:59:57 IST Report Abuse

123இன்றும் இந்தியா ஒரு காலனி நாடாகத்தான் திகழ்கின்றது. வெள்ளையரின் வணிக வளாகம்.

Rate this:
Magesh - Riyadh,சவுதி அரேபியா
19-ஜன-201911:05:05 IST Report Abuse

Mageshஅமெரிக்க அடிமைகள்...

Rate this:
Magesh - Riyadh,சவுதி அரேபியா
19-ஜன-201911:04:25 IST Report Abuse

MageshAmerican Slaves....

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X