கோல்கட்டா,:மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணிக்கு எதிராக, 'மெகா' கூட்டணி அமைக்கும் நோக்கில், கோல்கட்டாவில் இன்று மாநாடு நடத்துகிறார். இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது, இன்றைய மாநாட்டில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல், தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர், இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளனர்.
வரும் ஜூனில், தற்போதைய லோக்சபா பதவிக்காலம் முடிவதால், பொதுத் தேர்தல், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் எனத் தெரிகிறது. பா.ஜ., தலைமையிலான மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, கோல்கட்டாவில், இன்று பிரமாண்ட மாநாடு நடத்துகிறார்.இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி, ஒருமித்த கருத்துடைய கட்சிகளுக்கு, மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
'பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, காங்., தலைவர்
ராகுல் நிறுத்தப்பட வேண்டும்' என, சென்னையில் நடந்த கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.இந்த கருத்தை, பா.ஜ.,வுக்கு எதிரான பல கட்சிகள் ஏற்கவில்லை. முக்கியமாக, மம்தா பானர்ஜி அங்கீகரிக்க வில்லை.இதனால், அதிருப்தியில் உள்ள, காங்., தலைவர் ராகுல், அந்த கட்சியின் மூத்த தலைவர் சோனியா ஆகியோர், மம்தா நடத்தும் பேரணியில் பங்கேற்பதை தவிர்த்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், மாநாட்டில் பங்கேற்காமல், கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை அனுப்பி உள்ளார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான, சந்திரசேகர ராவும், இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தலைவர்கள், 'மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை' என, கூறியுள்ளனர்.
மாநாடு குறித்து, மம்தா கூறியதாவது:
பா.ஜ.,வின் மோசமான ஆட்சிக்கு எதிரான மாநாடாக, கோல்கட்டா மாநாடு இருக்கும். இந்த மாநாடு மூலம், மத்திய, பா.ஜ., ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்படும்.லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, 125 தொகுதி களுக்கு மேல் கிடைக்காது. அதை விட, மிக அதிக எண்ணிக்கையி லான தொகுதிகளில், மாநில கட்சிகள் வெற்றி பெறும். எனவே, அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக, மாநில கட்சிகள் திகழும்.இவ்வாறு அவர் கூறினார்.
இன்று நடக்கும் மாநாட்டில்,இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றிய
அறிவிப்பு வெளியாகும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர
முதல்வர் சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள், மாநாட்டில் பங்கேற்பர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா நடத்தும் மாநாடு குறித்து, பா.ஜ., தலைவர்கள் கூறுகையில், 'தங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, எதிர்க்கட்சிகள் முதலில் முடிவு செய்யட்டும்; அதன் பின், பிரதமர் நரேந்திர மோடியையும், ஆளும் கட்சியையும் அகற்றுவது பற்றி யோசிக்கட்டும்' என்றனர்.
மருமகனுடன் ஸ்டாலின் பயணம்
கோல்கட்டாவில் இன்று நடக்கும் மாநாட்டில் பங்கேற்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று மாலை, 5:00 மணிக்கு, தனி விமானத்தில், சென்னையிலிருந்து புறப்பட்டார். அவருடன், முன்னாள் மத்திய அமைச்சரும், கட்சியின் முதன்மை செயலருமான, டி.ஆர்.பாலு, ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோரும் சென்றுள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (32+ 21)
Reply
Reply
Reply