மோடிக்கு பயம் வந்து விட்டது: கோல்கட்டாவில் ஸ்டாலின் பேச்சு

Updated : ஜன 19, 2019 | Added : ஜன 19, 2019 | கருத்துகள் (179)
Advertisement
ஸ்டாலின், மோடி, கோல்கட்டா, மம்தா, மாநாடு

கோல்கட்டா : சமீப காலமாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பார்த்து மோடிக்கு பயம் வந்து விட்டது என கோல்கட்டாவில் நடந்த மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

கோல்கட்டாவில் பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி மெகா மாநாடு ஒன்றை கூட்டி உள்ளார். இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் வங்க மொழியில் வணக்கம் சொல்லி உரையை துவக்கினார். பின்னர் தமிழில் அவர் ஆற்றிய உரை, வங்காளத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. ஸ்டாலின் தனது உரையில், வங்காளத்து புலிகளுக்கு தமிழகத்தின் ஸ்டாலினின் வணக்கங்கள். பல மைல்கள் கடந்து உங்களை காண வந்துள்ளேன். இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம் மே மாத நடைபெற உள்ளது. அதற்காக மம்தா இந்த மாநாட்டை கூட்டி உள்ளார். மம்தா அழைப்பை ஏற்று வந்திருக்கிறேன். மம்தா பானர்ஜி இரும்பு பெண்மணி.

இந்த மேடையில் இந்தியாவை பார்க்கிறேன். பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு இருக்கிறார். நாம் மொழி, கலாச்சாரம் என வேறுபட்டிருந்தாலும் நமது சிந்தனை பா.ஜ,வை வீழ்த்த வேண்டும், மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான். நாம் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி நமக்கு தான். தோல்வி மோடிக்கு. சில மாதங்களுக்கு முன் மோடி தனக்கு எதிரிகளே இல்லை, எதிர்க்கட்சிகளே இல்லா இந்தியா என கூறி வந்தார். ஆனால் கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகளை தான் திட்டுகிறார். நம்மை பிடிக்கவில்லை என்பதை விட அவருக்கு பயமாக உள்ளது. பயத்தால் புலம்புகிறார். இந்த மேடையில் இருக்கும் தலைவர்கள், வர முடியாத தலைவர்கள், வர தயங்கி இருக்கும் தலைவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நமது ஒற்றுமை தான் மோடியை பயங்கொள்ள வைத்துள்ளது. ஒற்றுமை மூலம் இந்தியாவை காப்போம்.

மோடியை எதிர்ப்பது ஏன் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். அவர் எனக்கு உதவி செய்கிறார, இடைஞ்சல் செய்கிறாரா என்பது முக்கியமல்ல. நாட்டு மக்களுக்கு உதவி செய்கிறாரா, இடைஞ்சல் செய்கிறாரா என்பது தான் முக்கியம். நான் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன், இதை செய்வேன் என பொய் வாக்குறுதிகளை தந்து ஆட்சிக்கு வந்தவர் மோடி. 100 கூட்டங்களில் பேசி, 1000 பொய்களை பேசி இருப்பார்.

அவர் சொன்ன பொய்களில் மிகப் பெரியது, வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றது தான். ஆனால் சொன்னபடி பணத்தை போடாரா. இந்தியர்களின் தலையில் கல்லை தான் போட்டார். வாயில் மண்ணை தான் போட்டார். நாட்டு மக்களை குழிக்குள் தள்ளினார்.

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, காய்கறி, மளிகை விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை உயர்வு, பசியால் துன்பப்படுவோரின் எண்ணிக்கை உயர்வு, குடிசை வாழ் மக்கள் உயர்வு என்பது தான் உலகம் சுற்றும் பிரதமரின் சாதனைகள். இவர் தான் இந்தியாவை ஆள துடித்துக் கொண்டிருக்கிறார்.


யாருக்கான ஆட்சி:

இது யாருக்கான ஆட்சி, கார்ப்பரேட் மற்றும் பெரு நிறுவன ஆட்சி. பிரைவேட் இந்தியா லிமிடெட் ஆகிவிட்டார். இவர்களுக்கு எதுற்காக ஓட்டளிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விட்டனர். கோல்கட்டாவிலும் பார்க்கிறேன். ஊழல் இல்லா ஆட்சி செய்வதாக கூறுகிறார் மோடி. கடந்த 6 மாதங்களாக கூறி வரும் ரபேல் ஊழல் இல்லாமல் என்ன. விஜய் மல்லையா நாட்டை விட்டு செல்வதற்கு முன் அருண் ஜெட்லியை பார்த்து விட்டு சென்றுள்ளார். லலித் மோடி, சுஷ்மா சுவராஜ் உதவியுடன் வெளிநாடு தப்பி சென்றுள்ளார். நீரவ் மோடியை தப்ப விட்டது. இதெல்லாம் ஊழல் இல்லையா. 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்ததன் பின்னணியில் ஊழல் இல்லையா. இது கறுப்பு தினம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் கூறி உள்ளார். யாருக்காக இந்த தடை, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள். ஊழலை பற்றி மோடி பேசலாமா.

மோடி ஆட்சியில் ஒரே இடத்தில் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது போல் ஊழலும் குவிக்கப்பட்டுள்ளது. அதிக அதிகாரம் ஊழலுக்கு வழிவழிக்கும். அதையே இந்த ஆட்சி காட்டுகிறது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்நோக்கி சென்று விடும். இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மம்தாவுக்கு நன்றி. மோடி பார்த்து பயப்படும் தலைவர் மம்தா.

மேற்குவங்கத்திற்கு வந்து பிரசாரம் செய்ய மோடியும், அமித்ஷாவும் பயப்படுகிறார்கள். அத்தகைய இரும்பு பெண்மணியாக இருப்பவர் மம்தா. கருணாநிதி மீது மரியாதை கொண்டவர் மம்தா. அத்தகையவரின் அழைப்பை நான் எப்போதும் ஏற்பேன். பா.ஜ.,வை தனிமைப்படுத்த வேண்டும். நாம் தனியாக இருந்தால் அவர்களுக்கு சாதகமாகி விடும். இதை அனைத்து கட்சிகளும் உணர வேண்டும். நமது ஒற்றுமை தான் பா.ஜ.,வை வீழ்த்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (179)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Body soda - Bishan,சிங்கப்பூர்
25-ஜன-201913:14:42 IST Report Abuse
Body soda இவரு தான் அருண் ஜெட்லீயை அருண் ஜட்டின்னு அந்த மீட்டிங்குல பாத்து படிச்சுட்டு வந்துருக்குறார்....இப்ப அத நெட்டிசன்ஸ் வாட்சப்பிலையும், பேஸ்புக்லையும் செந்தில், கவண்டமணி மீம்ஸ் போட்டு செய்யுறானுங்க.... நல்லா பார்த்துக்கோங்க இவரு தான் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய போகுறார்....
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
25-ஜன-201910:33:39 IST Report Abuse
Matt P இவரு வெளிமாநிலத்துக்கு எல்லாம் போய் பேசி பிரபலமாவதை பார்த்தால் ,விரைவில் பிரதமர் பதவியை அடைந்து , அங்கேயம் கொள்ளையை ,மேம்படுத்தி தமிழனுக்கு மேலும் பெருமை சேர்க்காமல் விடமாட்டார் போலிருக்கிறது .
Rate this:
Share this comment
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
24-ஜன-201917:33:04 IST Report Abuse
R S GOPHALA அங்க போய் சும்மா எல்லாரையும் வேடிக்க பாத்துட்டு வந்துருக்காரு... அவுங்க பேசினது எதுவும் இவுருக்கு கண்டிப்பா புரிஞ்சி இருக்காது. பக்க பக்கன்னு எதுவும் புரியாம திரு திருன்னு முழிச்சிப்புட்டு ஏதோ அவருக்கு புரிஞ்சு அளவுக்கு ஒளறிட்டு வந்துருக்காரு. இவுரு சொல்றதயெல்லாம் ஏங்க சீரியசா எடுத்துக்கிட்டு... ஏதோ பொழுது போகாம எதிரி அரசியல் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதோ இந்த லோக் சபா தேர்தல்ல சுத்தமா இருந்த இடமே தெரியாம போக போகுது திமுக. அதுவும் இவுரு போய் பிரச்சாரம் பண்ணுனாருன்னா, சுத்தமா ஊத்திக்கும். இன்னும் காமெடி பீஸ் ஆகிடுவாரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X