ஸ்டாலின் - தினகரன் இடையே சமரசம்: சசிகலாவிடம் பேச தூது அனுப்பிய ராகுல் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஸ்டாலின் - தினகரன் இடையே சமரசம்
சசிகலாவிடம் பேச தூது அனுப்பிய ராகுல்

பிரதமர் மோடி மீதான எதிர்ப்பு ஓட்டுகள் பிரியாமல் இருக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் இடையே, சமரசம் ஏற்படுத்தும்
முயற்சியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள், எம்.பி., ஒருவரும் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டாலின்,தினகரன்,சமரசம், சசிகலா,தூது, ராகுல்

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, ஸ்டாலின், தினகரன் இடையே, காரசாரமான அறிக்கை போர் நடந்தது. இருவரின் ஆதரவாளர்களும், சமூக வலைதளங்கள் வாயிலாக, கடுமையாக விமர்சித்து கொண்டனர்.காலியாக அறிவிக்கப் பட்டுள்ள, 20 தொகுதிகளின், எம்.எல்.ஏ.,க் களுக்கு, தி.மு.க., தரப்பில் அளிக்கப்பட்ட உத்தர வாதத்தை நிறைவேற்றாத காரணம் தான், ஸ்டாலின் -தினகரனின் மோதலுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு வர வேண்டிய முக்குலத்தோர், முஸ்லிம் ஓட்டு கள், அ.ம.மு.க.,வுக்கு சென்று விட்டால், தென் மாவட்டங்களில்,தி.மு.க.,வெற்றி பாதிக்ககூடும் என, வட மாநில, 'டிவி' சானல்களின், கருத்துக் கணிப்பில் தெரிய வந்து உள்ளது.அதேசமயம், வட மாவட்டங்களில், தி.மு.க.,பலமாக உள்ளது. ஆனால், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட் டங் களில், தி.மு.க., பலவீனமாக இருக்கிறது.


அ.ம.மு.க., தனியாகவோ அல்லது பா.ம.க., -

தே.மு.தி.க., - மக்கள் நீதி மையம் ஆகிய கட்சி
களுடன் இணைந்தோ போட்டியிட்டால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியாது என்பதும், கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து, காங்.,

வட்டாரங்கள் கூறியதாவது:



லோக்சபா தேர்தலில், அ.ம.மு.க., தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ போட்டியிட்டால், அக்கட்சி பெறுகின்ற ஓட்டுகளில், 70 சதவீதம், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல கூடிய தாக தான் இருக்கும்.இதனால், விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட, 10 தொகுதிகளில், தி.மு.க., - காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு, பாதிப்பை உருவாக்கும்.

எனவே, அ.ம.மு.க., வுக்கு, காங்.,கூட்டணியில், மேற்கு மாவட்டங்களில், இரண்டு; தென் மாவட்டங் களில், இரண்டு என, நான்கு தொகுதிகளை, உள் ஒதுக்கீடாக வழங்கிவிடலாம் என, ஆலோசிக்கப் படுகிறது.மேலும், கூட்டணியில் சேர்த்து கொள்ள வும், காங்கிரஸ் தலைவர் ராகுலிடம், முக்குலத் தோர் சமூகத்தைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவரும், முன்னாள், எம்.பி., ஒருவரும், யோசனை கூறியுள்ளனர்.


இந்த கூட்டணியால், தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில், தி.மு.க., - காங்கிரஸ் வெற்றி உறுதி என, அவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர். ராகுலும், அந்த யோசனையை, நடிகை விஜயசாந்தி வாயிலாக, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் தெரிவிக்க ஏற்பாடு செய்தார்.

காங்., கூட்டணியில் இணைந்து போட்டியிட, தினகரனை சம்மதிக்க வைக்குமாறு,

Advertisement

விஜயசாந்தியிடம் கூறப்பட்டது.இதன்படி, சிறையில், சசிகலாவை நேரில்சந்தித்து, காங்கிரஸ் கட்சியுடன், அ.ம.மு.க., கூட்டணி வைக்க வேண்டும் என, விஜயசாந்தி, துாது சென்றார்.மேலும், மத்தியில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், சசிகலா உறவினர்களின் வழக்கு களை சரிசெய்யவும் வாய்ப்பு உண்டு என, சசிகலாவிடம், காங்.,கட்சியைச் சேர்ந்த, மகளிர் அணி தலைவர் ஒருவரும் ஆலோசனை கூறியுள்ளார்.

இதையடுத்து, இந்த யோசனையை, தினகரனிடம், சசிகலா தெரிவித்து உள்ளார். ஆனால், தினகரன், முதல்வர் கனவு காண்ப தால், காங்கிரஸ் கூட்டணி யில் உள்ஒதுக்கீடு பெற விரும்பவில்லை.தன்னால், 15 சதவீத ஓட்டுகளை பெற முடியும்; தனித்து போட்டி யிட்டு, மூன்று தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என, சசிகலாவிடம், நம்பிக்கையுடன் கூறியுள்ளார் தினகரன்.


ஆனால், தினகரனால், 8 சதவீத ஓட்டுகளை தான் பெற முடியும் என, சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், யார் கை ஓங்கபோகிறது என்பது,தேர்தல் தேதி அறிவித்த பின், தெரிய வரும்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
23-ஜன-201913:45:28 IST Report Abuse

Manianசசி காலா ராகுலை விடு தொளபதிக்கு ராகுல் மூலம் து அனுப்பினாள்- நீங்கள் ஓட்டு என்ற அவலை கொண்டு வாருங்கள் , நாங்கள் தினகரன் என்ற உமியை தருவோம் , இரண்டையும் கலந்து , ஆளுக்கு பாதி பங்கு வச்சு , ஊதி ஊதி திங்களாம் என்று இருந்தால் , இன்னும் சுவாரசியமாக இருக்குமே. ஆனால், தோள்பதி நைனா வெளி நாட்டிலே வுட்கள், நிலங்கள் என்றெல்லம் முதலீடு செய்தததை திரும்ப கொண்டடைந்த மோடி புடிச்சுகிட்டுவாரே. சசி அத்தை, காசு நீங்க போடுங்க, பிரியாணி, குவார்தரு கொடுத்து நான் ஆளுகளை கூட டியாரென். ஒங்க மன்னர்குடி மாபியா, எங்களோட தூத்துகுடி மாபியா ரண்டையும் வச்சு காசு கேக்குற பயலுகளை நசிக்கிப்போடுவேம். சும்மா சும்மா ஓட்டுக்கு காசு கொடுக்க முடியுமா? இதை பத்திரமா வச்சுகிடுங்க, கேக்கும்போது தாங்கன்ன, அதுக்கு எதுக்கு காசு அத்தை? சபாஷ்டா மருமகனே. ஒன் புத்தி அப்பவே தெரியாம போச்சே.

Rate this:
oce - chennai,இந்தியா
21-ஜன-201914:14:05 IST Report Abuse

oceஇந்திய தண்டனை சட்டத்தின் வீச்சு ஆட்சியில் அமரும் குற்றம் செய்த அரசியல் வாதிகளிடம் சுணங்கி விடுகிறது. பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் சட்டங்களை இயற்றும் அதி காரத்தை நீக்கி அதை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மிக உச்ச குழு என்ற அமைப்பிடம் கொடுக்கலாம்.

Rate this:
oce - chennai,இந்தியா
21-ஜன-201914:07:49 IST Report Abuse

oceஅதிகமாக உப்புள்ள பண்டமும் குப்பைக்கே போகும்.

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X