அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை சரிவு
ஆட்சியை காப்பாற்ற தேவை, '8'

தமிழக சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை குறைந்தபடியே உள்ளது. லோக்சபா தேர்தலுடன், தமிழக சட்டசபையின், 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தால், அதில், குறைந்தபட்சம் எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, அ.தி.மு.க., ஆட்சி நீடிக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது. அதில்,அ.தி.மு.க., குறைந்த பட்சம், எட்டு தொகுதிகளில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 எம்.எல்.ஏ.,  எண்ணிக்கை,சரிவு,ஆட்சி, எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க., அதிமுக, தி.மு.க., அ.ம.மு.க.,

தமிழகத்தில், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 136 இடங்களில் வெற்றி பெற்று,ஆட்சியை பிடித்தது.

ஊசலாட்டம்தி.மு.க., 89 இடங்களில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ், எட்டு

இடங்களிலும், முஸ்லிம் லீக், ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.ஜெயலலிதா மறைவு காரணமாக, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதில், சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன், வெற்றி பெற்றார். இதனால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 135 ஆககுறைந்தது.

அ.தி.மு.க.,வில் இருந்த, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க் கள், 18 பேரை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதனால், அ.தி.மு.க., - எம்.எல் .ஏ.,க் கள் எண்ணிக்கை, 117 ஆக குறைந்தது. அதன்பின், திருப்பரங்குன்றம், எம்.எல்.ஏ., போஸ் மறைவு காரணமாக, அ.தி.மு.க.,வின் பலம், 116 ஆககுறைந்தது.அதே நேரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக, தி.மு.க., - எம்.எல். ஏ.,க்கள் எண்ணிக்கை, 88 ஆக குறைந்துள்ளது.

தற்போது, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பதவி இழப்பு காரணமாக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 115 ஆக குறைந்துள்ளது.இவர்களில், மூன்று, எம்.எல்.ஏ.,க்கள், தற்போதும், தினகரன்ஆதரவாளர்களாக நீடிக்கின்றனர். மேலும் இரண்டு, எம்.எல்.ஏ.,க்கள், ஊசலாட்டத்தில் உள்ளனர்.

கட்டாயம்

எனவே, 110 பேர் தான், அ.தி.மு.க.,வின் உண்மையான, உறுதியான, எம்.எல்.ஏ.,க்களாக

Advertisement

உள்ளனர். இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, 20 தொகுதிகள் காலியாக இருப்ப தாக அறிவிக்கப்பட்டு உள்ளன பாலகிருஷ்ணா ரெட்டி யின், ஓசூர் தொகுதியு ம் காலி என்று அறிவிக்கப்பட்டால், இத் தொகுதிகளின் எண்ணிக்கை, 21 ஆக உயரும்.இந்த தொகுதி களுக்கு, லோக்சபா தேர்தலுடன், இடைத் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

இவற்றில், அ.தி.மு.க., குறைந்தபட்சம், எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இல்லையெனில், ஆட்சியை இழக்கும் நிலை உருவாகக்கூடும். எனவே, இடைத் தேர்தல் நடந்தால், அது, மினி சட்டசபை தேர்தலாக கருதப்படும். இது, தி.மு.க., - அ.தி.மு.க., - அ.ம.மு.க., ஆகிய கட்சி களுக்கு, கடும் சவாலாக இருக்கும் என்பது உறுதி.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21-ஜன-201912:58:09 IST Report Abuse

A.George AlphonseWhen Jayalalithaa was leader of the opposition party of our state assembly used to call the then ruling DMK government as Minority government in her each and every speech of our state assembly. Now the same situation has come to her ruling AIADMK party government of our State.The time and and tide always change so as this party also.

Rate this:
BJRaman - Chennai,இந்தியா
20-ஜன-201913:16:51 IST Report Abuse

BJRamanமுதலில் பிஜேபி அவுட் ஆகிவிடும்... பின்னர், பழனி பொய் விடுவார். ஜே இருந்தே, 135 தான் முடிந்தது, இப்போ, பழனியும், பன்னீரும், தெர்மக்கோளும், எல்லா இடமும் போய் வோட்டு கேட்க முடியுமா அல்லது நல்ல பேச முடியுமா... எல்லாம் வரிசையாக சிறையில் செல்ல வேண்டும்

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
20-ஜன-201911:30:59 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்திமுகவில் கமிஷன் வாங்கும் 47 பேர் உள்ளவரை இந்த ஆட்சியை அசைக்கமுடியாது

Rate this:
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
20-ஜன-201914:03:14 IST Report Abuse

Ramakrishnan Natesanகமிஸ்ஸின் வாங்கி கொடுப்பவரே சொல்லும்போது நம்பி தானே ஆகணும் ...

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X