பதிவு செய்த நாள் :
முழக்கம்!
மோடி அரசை நீக்குவோம் என 22 கட்சிகள்...:
தேர்தலுக்கு பின் பிரதமரை தேர்ந்தெடுக்க முடிவு

கோல்கட்டா:'வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை நீக்குவோம்' என, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் முழங் கினர். மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உட்பட, 22 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

முழக்கம்,மோடி, அரசு, நீக்குவோம் ,கட்சிகள், தேர்தல், பிரதமர்,அருண் ஷோரி,யஷ்வந்த் சின்ஹா, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி, ஆந்திர முதல்வர், மதச்சார்பற்ற ஜனதா தளம்,  தேவ கவுடா, காங்கிரஸ், மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடி , ராஜிவ் பிரதாப் ரூடி, 
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசின் பதவிக்காலம், விரைவில் முடிவுக்கு வருவதால், லோக்சபா வுக்கு வரும், ஏப்ரல் - மே மாதங்களில், தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில், பல்வேறு கட்சிகள் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் தலைமையில், கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான, சந்திர பாபு நாயுடு ஈடுபட்டார்.

மரியாதை இல்லைஅதே சமயம், மாநிலக் கட்சிகள் கூட்டணியை அமைக்கும் முயற்சியில், தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான, சந்திரசேகர ராவ் ஈடுபட்டார். 'காங்கிரஸ் தலைவர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக்க வேண்டும்' என, சென்னையில் நடந்த, கருணாநிதி சிலை திறப்பு விழாவில், தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் கூட்டணியில், இதற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, மிக பிரமாண்டமான, எதிர்க்கட்சிகள் மாநாடு நடத்துவதாக அறிவித்தார். அதில் பங்கேற்க, பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

அதன்படி, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா வில், நேற்று மாநாடு மற்றும் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், சந்திரசேகர ராவ், பிஜு ஜனதா தளம் தலைவரும், ஒடிசா முதல்வருமான, நவீன் பட்நாயக், ஒய்.எஸ்.ஆர் - காங்., உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை.

இருப்பினும், இந்தக் கூட்டத்தில், தி.மு.க., உட்பட, 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய, கட்சித் தலைவர்கள், 'வரும் லோக்சபா தேர்தலில், மோடி தலைமையிலான அரசை நீக்குவோம். அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் இருப் போம்' என, முழக்கமிட்டனர்.'கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்' என,

தலைவர்கள், தங்கள் பேச்சில் குறிப்பிட்டனர். 'ஐக்கிய இந்தியா பேரணி' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில், மம்தா பானர்ஜி பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, காலாவதி ஆகிவிட்டது. அதை வீட்டுக்கு அனுப்புவோம். வரும் லோக்சபா தேர்தலில், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் போட்டியிட்டு, மோடி அரசை வீழ்த்துவோம். அரசியலில், மற்றக் கட்சியினருக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும். ஆனால், பா.ஜ., அரசு, அதை செய்யத் தவறிவிட்டது. அந்தக் கட்சியில் உள்ள, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி போன்ற மூத்த தலைவர்களுக்கே, மரியாதை இல்லை.

புதிய தலைமைஅதனால், புதிய தலைமையை நோக்கி காத்திருக்கின்றனர். வரும் தேர்தலில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றால், இவர்கள் அனைவரும் ஒதுக்கப்பட்டு விடுவர்.நீங்கள் வென்றால், யார் பிரதமர் என்று கேட்கின்றனர். பிரதமர் யார் என்பதை, தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தேர்தலைசந்திப்போம், என்ற உறுதியை அளிக்கிறோம்.

நாட்டைப் பிளவுபடுத்த, 70 ஆண்டுகளாக பாகிஸ்தான் செய்து வந்த முயற்சிகளை, நான்கே ஆண்டுகளில், பா.ஜ., செய்துள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சியில், பிரதமர் இந்திரா கொண்டு வந்த, அவசர நிலையை விட மிகவும் மோசமான நிலை தற்போது நாட்டில் உள்ளது. அதனால், மோடி ஆட்சியை அகற்றுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க, காங்கிரஸ் தலைவர், ராகுல், மூத்த தலைவர், சோனியா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் பங்கேற்கவில்லை; அவர்கள் சார்பில், கட்சியின் மூத்த தலைவர், மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் மனு சிங்வி பங்கேற்றனர்.

சமீபத்தில், உ.பி.,யில், காங்கிரஸ் இல்லாத கூட்டணியை, முன்னாள் முதல்வர்களான, மாயா வதியின், பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சிகள் அமைத்தன. கோல்கட்டா கூட்டத்தில், மாயாவதி பங்கேற்கவில்லை; அவர் சார்பில் மூத்த தலைவர் சதிஷ் மிஸ்ரா பங்கேற்றார். அதேசமயம், அகிலேஷ் யாதவ், கலந்து கொண்டார்.

குஜராத்தைச் சேர்ந்த, படேல் போராட்டக் குழுத் தலைவர் ஹர்திக் படேல், தலித் போராட்டத் தலைவர், ஜிக்னேஷ் மேவானி பங்கேற்றனர்.

அதிருப்தி தலைவர்கள்முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான, தேவ கவுடா; அவருடைய மகனும், கர்நாடக முதல்வருமான, குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு; டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றனர்.

பா.ஜ., அதிருப்தி தலைவர்களான, சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தேசியவாத, காங்., தலைவர், சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா, அவருடைய தந்தை, பரூக் அப்துல்லா,

Advertisement

அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர், ககங் அபாங் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

அசர மாட்டோம்!


ஐக்கிய இந்தியா பேரணி என்ற பெயரில், மாறுபட்ட கொள்கை உள்ளோர் கூடியுள்ளனர். இது,முரண்பாடு களின் தொகுப்பு. இதற்கு எல்லாம், நாங்கள் அசர மாட்டோம். வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, மிகப் பெரிய வெற்றியை பெறும்.

ராஜிவ் பிரதாப் ரூடி
செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

கொள்ளையடித்த கூட்டம்!


தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் தலைநகர் சில்வாசாவில், புதிய மருத்துவக் கல்லுாரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது: மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வுக்கு ஒரே ஒரு, எம்.எல்.ஏ., மட்டும் உள்ளார். ஆனால், நம்மைப் பார்த்து, மாநில அரசு பயப்படுகிறது. அங்கு பேரணி நடத்த அனுமதி தரப்படுவது இல்லை. தேர்தலின்போது கொலைகள் செய்து உள்ளனர். ஆனால், ஜனநாயகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதை நான் தடுத்து நிறுத்தினேன். அதனால் பாதிக்கப்பட்ட கட்சிகள் தான், தற்போது, மெகா கூட்டணி என்ற பெயரில் கூடியுள்ளன.அவர்கள் தற்போது நடத்தியுள்ள பேரணி, கூட்டங்கள், மோடிக்கு எதிரானதல்ல; நாட்டு மக்களுக்கு எதிரானது. மீண்டும், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும் என, இவர்கள் பயப் படுவதால், ஒன்றாக கூடியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

தலைவர்கள் பேசியது என்ன?கோல்கட்டா கூட்டத்தில், கட்சித் தலைவர்கள் பேசியதாவது:காங்கிரஸ் மூத்த தலைவர், மல்லிகார்ஜுன கார்கே: பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷாவிடம் இருந்து நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற, நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். நாம் நீண்ட, கடினமான பாதையை நோக்கி செல்கிறோம்; கை கோர்த்து நாம் பயணிப்போம்.

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர், தேவ கவுடா: நமக்குள் உள்ள வேறுபாடுகளை களைந்துவிட்டு, பா.ஜ.,வை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளோடு, ஒற்றுமையாக பயணிப் போம். உறுதியான அரசை அளிப்போம் என்பதை, மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு: கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை, பா.ஜ., அரசு நிறைவேற்றவில்லை. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மட்டுமே, பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார்.

சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ்: உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கூட்டணி அமைத்ததால், பா.ஜ., மிரட்சியில் உள்ளது. எங்கள் அணியில், பிரதமர் யார் என்பதை, மக்கள் தீர்மானிப்பர்.
பா.ஜ., அதிருப்தியாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, அருண் ஷோரி: பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்.

பா.ஜ., அதிருப்தியாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, யஷ்வந்த் சின்ஹா: மத்திய அரசை புகழ்ந்தால், நீங்கள் தேச பக்தி உடையவர்; எதிர்த்து பேசினால், தேச விரோதி ஆகிவிடுவீர்.இவ்வாறு தலைவர்கள் பேசினர்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
20-ஜன-201921:50:43 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்சுதந்திரம் வாங்கி உழைத்த மக்கள் அதிகம் உள்ள இடத்தில் ஊழலை வளர்க்கும் கூட்டமா?

Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-ஜன-201920:39:29 IST Report Abuse

elakkumananதேர்தலுக்கு பின்னால் இருக்கபோறவர்கள்தான் அதை பற்றி கவலை படவேண்டும். ஏற்கனவே இல்லாத நிலையில் இருந்து இன்னும் இல்லாத நிலைக்கு போகப்போகும் இந்த தொடை நடுங்கி வீரர்கள் ஏன் கவலை பட வேண்டும். மோடி தப்பு செஞ்சா இந்த இருபது சில்லறை தியாகிகளின் ஒருவருக்கு கூட நெஞ்சில் மாஞ்சா இல்லையா ஒரு கேசு போட? ஏன் இந்த சில்லாண்டுகளின் ஆதரவு தியாகிகள் கூட கேசு போட முயலலியா? முழக்கமாம் மோடிக்கு எதிராக. ...................முக்கலாம். முழக்கம் எல்லாம் முடியாது. அவங்க அவங்க ஒரு செய்தி சேனல் ஒரு செய்தி தாள் வச்சுக்கிட்டு ஒரே ஏமாத்திகிட்டு வெளியில் சிரிச்சிகிட்டு திரியுதுக. உள்ளுக்குள்ள, மோடியை நெனைச்சு கொடூரமா நடுங்கி போய் கெடக்குதுக. அழகெட்ஸ்களும் தான். ஆனாலும், பல்லை கடிச்சிகிட்டு சிரிக்கிறது வெளியில தெரியாம பாத்துக்கோங்க . சார், தலைப்பு பாத்து போடுங்க. சத்தம் முக்கலா ? இல்ல முழக்கமா?

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
20-ஜன-201920:13:53 IST Report Abuse

 N.Purushothamanநேத்து நடந்த பிரியாணியில ( அதுக்கு பேரு பேரணியாம்) சுடலைக்கு பதிலா இன்னொருத்தன் நல்லா ஒளறினான் ...அவன் வேற யாரும் இல்லை ..சரத் யாதவ் தான் ..போபோர்ஸ் ஊழல்ன்னு உண்மையை சொன்ன புண்ணியவான் ...கும்தாவோட மூஞ்சே மாறி போச்சு ...ஒரு மைக்கை எடுத்து அது போபோர்ஸ் இல்லை..ரபேல்ன்னு சொல்லி சமாளிச்சுச்சு ...அதனை திருடன்களையும் இன்றே மேடையில பார்த்தப்போ மோடிஜி சொன்னது தான் நினைவுக்கு வந்துச்சி ...

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X