பதிவு செய்த நாள் :
ராகுல், பிரதமர் வேட்பாளர், கப்சிப், மம்தா, தி.மு.க., ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், காங்கிரஸ், பா.ஜ.,

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலின், கோல்கட்டாவில் மம்தா நடத்திய கூட்டத்தில், அதுபற்றி வாயே திறக்கவில்லை. இக்கூட்டத்தில் பங்கேற்ற, முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திர முதல்வர்,
சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்., தலைவர், சரத் பவார், டில்லி முதல்வர், அரவிந்த்
கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி தலைவர், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட, 22 கட்சி
தலைவர்களும், ராகுல் பெயரைக்கூட குறிப்பிடவில்லை.லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ.,விற்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பணியை, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு துவக்கினார். காங்., தலைவர், ராகுல் உட்பட, எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும், சந்தித்து பேசினார்.எதிர்க்கட்சிகள் ஓரணி யில் திரள தயாரானபோதும், ராகுலை, பிரதமர் வேட்பாளராக ஏற்க, யாரும் முன்வரவில்லை.

வலியுறுத்தல்


காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால், தங்களுக்கு பிரதமர் வாய்ப்பு கிடைக்கும் என, இக்கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரும் கருதுவதால், பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல், தேர்தலை சந்திக்க விரும்பினர்.அதை அறியாத, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், 2018 டிச., 16ல், கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு, பிரமாண்ட ஏற்பாடு செய்தார்.
அந்த விழா, தேசியஅரசியலில் முக்கியத்துவம்பெற வேண்டும் என, விரும்பினார். அதனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர், சோனியாவையும், ராகுலையும் ஆர்வத்தோடு அழைத்தார்.அதோடு, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர், பினராயி விஜயன், புதுச்சேரி

முதல்வர், நாராயணசாமி ஆகியோரும் அழைக்கப்பட்டனர். எல்லாரும் அமர்ந்திருந்த மேடையில், இவர்கள் யாருமேஎதிர்பார்க்காத அறிவிப்பை, ஸ்டாலின் வெளியிட்டார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின், பிரதமர் வேட்பாளராக, ராகுலை முன்மொழிவதாகவும், அதை கூட்டணி கட்சிகள் ஏற்க வேண்டும் என்றும், வலியுறுத்தினார். 'ராகுலே வருக... நாட்டிற்கு நல்லாட்சி தருக...' என, கருணாநிதி பாணியில் பேசி, கைத்தட்டலையும் பெற்றார்.
இதை, காங்கிரசுடன் கூட்டு சேர விரும்பிய, கட்சி தலைவர்கள் ரசிக்கவில்லை.'ஸ்டாலின், அவசரப்பட்டு விட்டார்' என்று, அடுத்த நாளே விமர்சனங்கள் எழுந்தன.

உத்தர பிரதேசத்தில், அகிலேஷ் யாதவின், சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சியும், திடீர் கூட்டணி அமைத்து, காங்கிரசை, 'கழற்றி' விட்டன. இதனால், காங்கிரஸ் தலைமையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் சந்தேகம் எழுந்துள்ளது.இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, புது கூட்டணியை ஏற்படுத்த, திரிண முல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜி, களமிறங்கி உள்ளார்.
அதற்காக, காங்கிரஸ் கூட்டணியில் சேர விரும்பிய கட்சிகளுக்கு, அவர் தனி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பையும், மம்தா முயற்சியையும் விரும்பாத காங்கிரஸ், ஒதுங்கிக்கொண்டது.
ஆனால், காங்கிரசையும்,

ராகுலையும் துாக்கி பிடித்த ஸ்டாலின், மம்தா அழைப்பை ஏற்று, கோல்கட்டா கூட்டத்தில் பங்கேற்றார்.அங்கு, 'ஒருங்கிணைந்த இந்தியா' என்ற தலைப்பில் நடந்த, பிரமாண்ட பொதுக் கூட்டத்தில், 22 கட்சிகளின் தலைவர்களில், ஒருவராக அவரும் பேசினார்.

ஒரே கொள்கை


ஒரு மாதத்திற்கு முன், சென்னையில், 'காங்., தலைவர் ராகுல் தான், பிரதமர் வேட்பாளர்' என, அறிவித்த ஸ்டாலின், நேற்றைய கூட்டத்தில், அவர் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை. இந்த விஷயத்தில், 'கப்சிப்' ஆகிவிட்டார்.அவர் மட்டுமல்ல, அந்த கூட்டத்தில் பங்கேற்ற, முன்னாள் பிரதமர், தேவகவுடா, கர்நாடக முதல்வர், குமாரசாமி, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு, டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாதி கட்சி தலைவர், அகிலேஷ் யாதவ், தேசிய வாத காங்., தலைவர், சரத் பவார் உள்ளிட்ட, 22 கட்சி தலைவர்களும், ராகுல் பெயரை குறிப்பிடவில்லை.
'தேர்தலுக்கு பின், பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கலாம்' என்பது தான், இந்த, 22 கட்சி கூட்டணியின் ஒரே கொள்கை. அதற்கு, ஆதரவு குரல் கொடுத்து, 'ரூட்'டைமாற்றியுள்ளார், ஸ்டாலின்.
'பா.ஜ.,வை தனியாக வீழ்த்த முடியாது!'
கோல்கட்டா கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது:வேறு வேறு ர். நம்முடைய

கட்சிகளை சேர்ந்தவர்கள், இங்கு உள்ளனசிந்தனை ஒன்று தான். பா.ஜ., கட்சியை வீழ்த்த வேண்டும்; நரேந்திர மோடியை, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நாம் வேறு வேறாக இருந்தாலும், நம்முடைய லட்சியம் ஒன்று தான். இந்த ஒற்றுமை மட்டும்,நம்மிடம் இருக்குமானால், வெற்றி நமக்கு தான்.
'எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால், நாம் வீழ்ந்து போவோம்' என்பது, மோடிக்கு தெரிந்துள்ளது. அதனால் தான், தினமும் கோபத்தால், நம்மை திட்டுகிறார். 'நான் ஆட்சிக்கு வந்தால், தேனாறும், பாலாறும் ஓடும்' என்று, பொய்யான வாக்குறுதி கொடுத்து, மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்தவர், மோடி.நுாறு கூட்டம் பேசினார்; ஆயிரம் பொய்களை சொல்லி இருப்பார்.

அவர் சொன்ன பொய்களில் மிகப்பெரியது, 'நான் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் உள்ள, கறுப்பு பணத்தை மீட்டு வந்து, இந்தியர்கள் அனைவருக்கும், தலா, 15 லட்சம் ரூபாய் போடுவேன்' என்பது தான். அது மாதிரி போட்டாரா; இந்திய மக்கள் தலையில் கல்லை தான் போட்டார்.மோடியின் ஆட்சியில், அதிகாரம் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டதைப் போல, ஊழலும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அதிகாரம், ஊழலுக்கு வழிவகுக்கும்.
மோடி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா, 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய் விடும். பா.ஜ.,வை தனிமைப்படுத்த வேண்டும். பா.ஜ.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும், மாநில கட்சிகளும், ஒன்று சேர வேண்டும். தனியாக இருந்து, அவர்களை வீழ்த்த முடியாது. அது, அவர்களுக்கு சாதகமாகி விடும். இதை, அனைத்து கட்சிகளும் உணர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
22-ஜன-201917:07:42 IST Report Abuse

I love Bharathamநமக்கு எதுக்கண்ணே இந்த வீண் ப்ரிச்சனை .... ஏன் அண்ணே சொந்த செலவுல சூன்யம் விச்சிக்கிறேங்க ...

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
22-ஜன-201915:07:39 IST Report Abuse

narayanan iyerசந்திரபாபு நாயுடு, ஸ்டாலினை முதலில் சந்தித்தபோது பிரதமராக வருவதற்கு அவர் தகுதியானவர் என்று ஒரு பிட்டை போட்டு விட்டு போனார் . அதன் பின்னர்தான் நடந்த சிலைதிறப்புவிழாவில் ஸ்டாலின் அறிவித்தார் ராகுல் தகுதியானவர் என்று . மீண்டும் நாயுடு, ஸ்டாலினை கூப்பிட்டு நாங்கள் உங்களை பிரதமராக அறிவிக்கலாம் என்று இருந்த நேரத்தில் இப்படி ஏன் ராகுல் பெயரை சொன்னீர்கள் என்று கூப்பாடு போட்ட பின்னர்ஸ்டாலினுக்கும் ஆசை வந்ததால் இப்போ சொல்லவில்லை கொல்கத்தாவில் அவ்வளவுதான் .ஆனால் இப்போ அந்த கூட்டணியில் எல்லாருக்கும் பிரதமர் ஆசை வந்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியவில்லை . என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை . முதலில் ஹிந்துக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் வரவேண்டும் . மேலும் இந்த சாதி அடிப்படைஒதுக்கீடு ஒழிக்கப்படவேண்டும் .

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
22-ஜன-201915:03:05 IST Report Abuse

narayanan iyerசந்திரபாபு நாயுடு, ஸ்டாலினை முதலில் சந்தித்த போது பிரதமராக வருவதற்கு அவர் தகுதியானவர் என்று ஒரு பிட்டை போட்டு விட்டு போனார் . அதன் பின்னர் தான் நடந்த சிலைதிறப்புவிழாவில் ஸ்டாலின் அறிவித்தார் ராகுல் தகுதியானவர் என்று . மீண்டும் நாயுடு, ஸ்டாலினை கூப்பிட்டு நாங்கள் உங்களை பிரதமராக அறிவிக்கலாம் என்று இருந்த நேரத்தில் இப்படி ஏன் ராகுல் பெயரை சொன்னீர்கள் என்று கூப்பாடு போட்ட பின்னர் ஸ்டாலினுக்கும் ஆசை வந்ததால் இப்போ சொல்லவில்லை கொல்கத்தாவில் அவ்வளவுதான் .ஆனால் இப்போ அந்த கூட்டணியில் எல்லாருக்கும் பிரதமர் ஆசை வந்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியவில்லை . என்ன நடக்கும் என்றும் தெரியவில்லை .

Rate this:
மேலும் 106 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X