அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பா.ஜ.,வுடன் கூட்டணி சேர யாருமில்லை' நாராயணசாமி

Added : ஜன 20, 2019
Share
Advertisement
சென்னை: 'தென் மாநிலங்களில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, யாரும் தயாராக இல்லை,'' என, புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:அரபு நாடுகளில் உள்ள தமிழர்கள், பெரிய தொழில் முனைவர்களாக உள்ளனர். அவர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தொழில் நிறுவனங்களை துவக்க தயாராக இருக்கின்றனர். அதற்கான கட்டமைப்பு குறித்த சந்திப்பிற்காக,

சென்னை: 'தென் மாநிலங்களில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, யாரும் தயாராக இல்லை,'' என, புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி கூறினார்.சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:அரபு நாடுகளில் உள்ள தமிழர்கள், பெரிய தொழில் முனைவர்களாக உள்ளனர். அவர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தொழில் நிறுவனங்களை துவக்க தயாராக இருக்கின்றனர். அதற்கான கட்டமைப்பு குறித்த சந்திப்பிற்காக, நான், துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்று வந்தேன்.நாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என, மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. லோக்சபா தேர்தலில், இந்த மிகப்பெரிய கூட்டணி, பா.ஜ.,வை வீழ்த்தும் என்கிற நம்பிக்கை உள்ளது.'நாட்டின் கலாசாரத்தை சீரழித்து வரும், பா.ஜ., ஆட்சியை, வீட்டுக்கு அனுப்புவது தான் முக்கிய நோக்கம்' என, காங்., தலைவர் ராகுல் கூறியுள்ளார்.'பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பது, தற்கொலைக்கு சமம்' என்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதனால் தான், பிரதமர் மோடி, 'யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம்' என, அழைப்பு விடுத்துள்ளார்.ஆனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட, தென் மாநிலங்களை பொறுத்தவரை, பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க, யாரும் தயாராக இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X