ஆட்சியை மாற்றும் இடைத்தேர்தல்: தி.மு.க.,வினருக்கு கனிமொழி அழைப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சியை மாற்றும் இடைத்தேர்தல்: தி.மு.க.,வினருக்கு கனிமொழி அழைப்பு

Added : ஜன 20, 2019
Share
துாத்துக்குடி:''தமிழகத்தில், 21 தொகுதிகளில் நடக்க உள்ள இடைத்தேர்தல், ஆட்சியை மாற்றக்கூடியது,'' என, எம்.பி., கனிமொழி கூறினார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த, தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக, அக்கட்சியின் எம்.பி., கனிமொழி பங்கேற்றார். அவர் பேசியதாவது:தமிழகத்தில், 21 தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல், ஆட்சியை மாற்றக்கூடிய

துாத்துக்குடி:''தமிழகத்தில், 21 தொகுதிகளில் நடக்க உள்ள இடைத்தேர்தல், ஆட்சியை மாற்றக்கூடியது,'' என, எம்.பி., கனிமொழி கூறினார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த, தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக, அக்கட்சியின் எம்.பி., கனிமொழி பங்கேற்றார். அவர் பேசியதாவது:தமிழகத்தில், 21 தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல், ஆட்சியை மாற்றக்கூடிய தேர்தல். இதை புரிந்து, நாம் செயல்படவேண்டும்.'தி.மு.க.,வினர் கூறுவதை செய்யக் கூடாது' என நினைக்கிற ஆட்சி, இங்கு இருப்பதால், மக்கள் பிரச்னைகளை தீர்க்க முடியாமல், நாம் தவிக்கிறோம். எனவே, இனி எந்த தொகுதியிலும், தி.மு.க., தோல்வியையே பார்க்க கூடாது என்ற நிலையை, நாம் உருவாக்க வேண்டும்.ஜி.எஸ்.டி.,யால், எந்தளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை, எடுத்துச் சொல்ல கூட தைரியம் இல்லாத ஆட்சி, தமிழகத்தில் உள்ளது. பட்டாசு தொழிலாளர்கள் பிரச்னையை, மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.ஆட்சி மாறினால் தான், இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும். இந்த ஆட்சியை மாற்ற, தேர்தல் பணியை இன்றிலிருந்தே துவங்க வேண்டும். தமிழருக்கு எதிரான, பா.ஜ., ஆட்சி, மத்தியிலிருந்து துாக்கி ஏறியப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X