அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிறம் மாறும் வைகோ : தமிழிசை கண்டனம்

Added : ஜன 20, 2019 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை: 'மதுரை வரும் பிரதமருக்கு, கருப்புக் கொடி காட்டுவோம்' என ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ அறிவித்துள்ளதற்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், தமிழிசை கூறியிருப்பதாவது:தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க வரும் பிரதமருக்கு, கருப்புக் கொடி காட்டுவதாக கூறும் வைகோவை கண்டிக்கிறோம். இலங்கைத் தமிழரை படுகொலை செய்ய

சென்னை: 'மதுரை வரும் பிரதமருக்கு, கருப்புக் கொடி காட்டுவோம்' என ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ அறிவித்துள்ளதற்கு தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், தமிழிசை கூறியிருப்பதாவது:தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க வரும் பிரதமருக்கு, கருப்புக் கொடி காட்டுவதாக கூறும் வைகோவை கண்டிக்கிறோம். இலங்கைத் தமிழரை படுகொலை செய்ய துணை நின்ற, காங்., தலைவர் ராகுலுடன், சிலை திறப்பு விழாவில், கை குலுக்கிய வைகோவுக்கு, கருப்புக் கொடி காட்ட, என்ன தார்மீக உரிமை உள்ளது... மக்கள் நலப் பணிக்காக, 1,500 கோடி ரூபாயில், எய்ம்ஸ் துவங்க வரும் பிரதமருக்கு, அரசியலில் அடிக்கடி நிறம் மாறும் வைகோ, கருப்புக் கொடி காட்டுவதை, தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். அன்று, ஸ்டாலினுக்கு எதிராக, வைகோவுக்காக தீக்குளித்த, ம.தி.மு.க., தொண்டர்களின் ஆன்மா, அவரது இன்றைய ஆதரவு துரோகத்தை மன்னிக்காது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
20-ஜன-201918:59:30 IST Report Abuse
சுந்தரம் வைகோ சில தவறுகளை செய்தார் என்று சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் செய்யாத தவறுகள் இல்லை. திமுகவில் இருந்தபோது எம் ஜி ஆரிடமிருந்து பல உதவிகள் பெற்றவர். ஆனால் முதலமைச்சர் பதவியில் இருந்து அவர் மறைந்தபோது அவரது பூத உடலுக்கு மரியாதை செலுத்த மாட்டேன் என்று பேசியவர் இந்த வைகோ. அடுத்து தனி கட்சி ஆரம்பித்ததும் திரு. கே பி கந்தசாமி தன் செய்தித்தாளை வைகோ கட்சிக்காக ஒதுக்கினார். ஆனால் வைகோ அந்த கே பி கே அவர்களையும் மறந்தார். தன்னை நம்பி வந்த பலர் தீக்குளித்ததும் வெ மா சூ சு இன்றி திமுகவுக்கு சாமரம் வீசுகிறார். இடையில் பிரபாகரன் வருவார் வந்துகொண்டிருக்கிறார் என்று நாடகமும் ஆடினார். மோடியை புகழ்ந்து பேசிய வாயால் இன்று சுடலையை புகழ்கிறார். கூடங்குளம் திட்டத்தில் நெல்லை மாவட்டத்தினருக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்று போராட்டங்கள் நடத்திய அதே வைகோ பின்னாட்களில் உதயகுமாருக்கு சாமரம் வீசிக்கொண்டு கூடங்குளம் திட்டத்தை திறக்கக்கூடாது என்று போராடினார். நல்ல கண்ணுவை மோசம் என்று சொல்லி விஜய காந்துக்கு அல்வா கொடுத்தார். இடையில் இரண்டு ஜி ஊழலில் ஸ்டாலினுக்கும் பங்குண்டு என்று பேசிய வாய் தனக்கு பங்கு வந்ததும் இரண்டு ஜி ஊழலே இல்லை என்று கூறுகிறார். இப்போது அல்லேலூயா அல்லேலூயா என்று சொல்லிக்கொண்டிருக்கினார்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
20-ஜன-201916:44:03 IST Report Abuse
Indhuindian Tamil media both print and electronic are giving undue importance and coverage to Vaiko despite knowing that he is spent force in politics. He has no policy or principles. He is anti establishment. He made unprin utterances about Stalin and Karunanidhi. But now he swears to make Stalin the chief minister of Tamil Nadu. Both Jaya and Karunanidhi put him in jail but he does not hold any grudge against anyone of them as long as it turns to his advantage and benefit.
Rate this:
Cancel
Thamilanban - Shivamogga,இந்தியா
20-ஜன-201912:15:19 IST Report Abuse
Thamilanban . இந்த ஆளை மனித இனத்திலும், எந்த உயிரினத்திலும் சேர்க்க முடியாது. இந்த ஆளை தூக்கி ஜெயில்ல போடுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X