அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் முதல்வராக முடியாது! செங்கோட்டையன் கூறுகிறார்

Added : ஜன 20, 2019
Share
Advertisement
திருப்பூர்:''தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக எப்போதும் வர முடியாது,'' என அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில்நடந்த எம்.,ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்துக்கு கிராமம் தோறும் குடிநீர் வசதி, சத்துணவு திட்டம் போன்ற திட்டங்களை கொண்டு வந்தவர்எம்.ஜி.ஆர்., அவருக்கு பின்

திருப்பூர்:''தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக எப்போதும் வர முடியாது,'' என அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில்நடந்த எம்.,ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தமிழகத்துக்கு கிராமம் தோறும் குடிநீர் வசதி, சத்துணவு திட்டம் போன்ற திட்டங்களை கொண்டு வந்தவர்எம்.ஜி.ஆர்., அவருக்கு பின் தலைமைப் பண்பும், செல்வாக்கும் மிக்க முதல்வராக, தலைவராக விளங்கியவர் ஜெயலலிதா.தமிழகத்தில் தொழில் துவங்க அனைத்து வசதிகளும் உள்ளதால் தொழில் முனைவோர் தேடி வருகின்றனர். தமிழகத்தில் ஆண்டு தோறும் 5.17 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுகிறது. லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் தயாராகி வருகிறது. பிளஸ்2 வகுப்பில் புதிய பாடத்திட்டம் இந்தாண்டு அறிமுகப்படுத்தப்படும். இதை படித்து முடித்தவுடன் வேலை பெறலாம்.ஊராட்சி கூட்டம் நடத்தும் ஸ்டாலின் தமிழகத்தில் ஒரு நாளும் முதல்வராக முடியாது. அக்கட்சியில் வேண்டுமானால் அவர் தலைவராக இருக்கலாம். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X