காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி| Dinamalar

காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறும் எதிர்க்கட்சிகள் : மோடி

Updated : ஜன 20, 2019 | Added : ஜன 20, 2019 | கருத்துகள் (74)
Advertisement
மோடி, எதிர்க்கட்சிகள், மம்தா பொதுக்கூட்டம், பா.ஜ.,

புதுடில்லி : எதிர்க்கட்சிக்கள் எங்களை காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என மக்களிடம் கதறிக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கோல்கட்டாவில் மம்தா நேற்று நடத்திய கூட்டம் தொடர்பாக அவர் பிரதமர் மோடிகூறியிருப்பதாவது:
" ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் சிலரை கோபப்படுத்தி உள்ளது. மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதை நான் தடுக்கும் போது கோபம் வருவது இயற்கை தான்". இந்த கூட்டணி மக்களுக்கு எதிரானது. தங்கள் மாநிலங்களில் ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்கியவர்கள் ஜனநாயகத்தை காக்க வேண்டும் என பேசுகிறார்கள்.

மேற்குவங்கத்தில் ஒரே ஒரு எம்.பி., கொண்ட கட்சி (பா.ஜ.,) மற்றவர்களை தூங்க விடாமல் செய்து விட்டது. அதனால் பதற்றம் மற்றும் பயத்தால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள் என கதறுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
20-ஜன-201921:07:56 IST Report Abuse
பிரபு நாட்டு மக்கள் எல்லாருமே கிட்டத்தட்ட எங்களை காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள்-ன்னு கத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா அது உங்க கிட்ட இருந்து.
Rate this:
Share this comment
Cancel
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
20-ஜன-201920:13:02 IST Report Abuse
T M S GOVINDARAJAN ஏம்பா நடேசா இவவ்ளவு நாளா இந்த கடன் விசயத்தை சொல்லவே இல்லை.எந்த செய்தித்தாள்களில் வந்தது என்று எந்த தேதியில் வந்துள்ளது என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் சொல்லும் போது தமிழ் செய்திதாளாக இருக்கட்டும் .இவ்வளவு கடன் சொல்லும் போது ரூபாய் மதிப்பு எப்படியப்பா அப்படியே காங்கிரஸ் ஆட்சியில் 69இருந்தது அப்படியே இன்றும்71 ஆக இருக்கிறது என்ன காதில் பூ சுற்றுகிறாயா 50சதவீதம் கடனாகி இருந்தால் இன்று100ரூபாய்க்கு மேல் சென்று இருக்கும். அதுபோல பெட்ரோல் ,டீசல் விலை உயர்ந்ததால் இன்று மக்கள் எல்லாம் அத்தியாவசிய பொருட்கள் ஏதுமின்றி வறுமையில் வாடி கொண்டு நடந்தும் சைக்கிளிலும் எந்த ஒரு நெரிசல் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Achchu - Chennai,இந்தியா
20-ஜன-201919:31:14 IST Report Abuse
Achchu இவர் இந்த வார்த்தைகளை ஒருநாள் சொல்லப் போகிறார் இதை குறித்து வைத்துக் கொள்ளலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X