வாஷிங்டன்: அமெரிக்கா - மெக்சிகோ எல்லை யில் தடுப்புச் சுவர் கட்டும் விவகாரத்தில், ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் மோதல் எழுந்துள்ளதால், நிதி ஒதுக்கீடு இல்லாமல், அமெரிக்காவின் அரசுத் துறைகள், பணிகள் எதுவும் நடக்காமல், நான்கு வாரங்களாக முடங்கியுள்ளன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், புதிய சமரச திட்டத்தை, அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்று அறிவித்தார். ஆனால், எதிர்க்கட்சியினர், இதை ஏற்கவில்லை.
மெக்சிகோ நாட்டிலிருந்து அகதிகள் வருவதை தடுக்கும் வகையில், அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில், தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.இந்த திட்டத்துக்காக, பட்ஜெட்டில், 45 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்றும், அதற்கு, எதிர்க்கட்சியான, ஜனநாயக கட்சியினர்
ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், டிரம்ப் வலியுறுத்தினார்.ஆனால், ஜனநாயக கட்சியினர், இதை ஏற்க மறுத்து விட்டனர்.
இதற்கிடையே, அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான பட்ஜெட் மசோ தாவை, கடந்த மாதம், 22ம் தேதி நிறைவேற்ற வேண்டியிருந்தது. அந்த பட்ஜெட்டில், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான நிதியையும் ஒதுக்கும்படி, டிரம்ப் வலியுறுத்தினார்.
ஆனால், எதிர்க்கட்சி யினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதனால், அரசுத் துறைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு
செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதை அடுத்து, கடந்த நான்கு வாரங்களாக, அரசின் பல் வேறு துறைகளும் முடங்கியுள்ளன. அரசு ஊழியர் களும், பொதுமக்களும்
இதனால் பாதிக்கப் பட்டு உள்ளனர். இது, அமெரிக்காவில், 'ஷட்டவுன்' என,
அழைக்கப்படுகிறது.இந்த விவகாரத்தில், இரு தரப் பினரும், பிடிவாதத்தை
தளர்த்தி, இறங்கி வராத தால், 'ஷட் டவுன்' துவங்கி, ஒரு மாதத்தை எட்ட உள்ளது.இந்நிலையில், புதிய சமரச திட்டத்தை, அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனியார், 'டிவி'யில், அவர் பேசியதாவது:
அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில், தடுப்புச் சுவர் கட்டப்பட வேண்டியது மிகவும்அவசியம். நம் நாட்டின் எதிர்கால சந்ததியினரை மனதில் வைத்து, இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பார்லிமென்ட் ஒப்புதல் அளிக்க வேண்டும்.தடுப்புச் சுவர் கட்டப்படுவதால், நாட்டில் உள்ள, அகதிகள் உடனடியாக வெளியேற்றப்பட மாட்டார்கள். இதற் காக, புதிய திட்டத்துக்கு அரசு தயாராக உள்ளது. ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி, இளம் வயதில், சட்ட விரோதமாக இங்கு நுழைந்தவர்களுக்கு, தற்போது, தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,அவர்கள் 2 ஆண்டுகளுக்கு நாட்டை விட்டு வெளியேற்றப்பட மாட்டார்கள்.அதன்படி, ஏழு லட்சம் பேருக்கு, இந்த அந்தஸ்து அளிக்கப் பட்டுள்ளது. அதில், 3லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட அவகாசம் முடியும் நிலையில் உள்ளது. இந்த, ஏழு லட்சம் பேருக்கும் வழங்கப் பட்டுள்ள, தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து, மேலும், மூன்று ஆண்டு களுக்கு நீட்டிக்கப்படும். இதன்
மூலம், அவர்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட வற்றை பெற முடியும். இவ்வாறு
சட்டவிரோதமாக நுழைந்துள்ளோர் குறித்து பார்லிமென்ட்டில் விவா தித்து,
விரிவான கொள்கை வகுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், 'டொனால்டு டிரம்பின் இந்த புதிய அறிவிப்பை ஏற்க முடியாது'
ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது. அதனால், வேலை நிறுத்தம் தொடர்கிறது.
பெண்கள் பேரணி
அமெரிக்க அதிபராக பதவியேற்றபோதும், பிரசாரத்தின்போதும், பெண்களுக்கு எதிராக, அதிபர் டொனால்டு டிரம்ப் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். பெண்களை அவமதிக்கும் வகையிலான, அவரது இந்த கருத்துகளுக்கு, அமெரிக்கா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
அதை எதிர்த்து, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பெண்கள் பேரணி, கடந்த சில
ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
பெண்கள் உரிமை பேரணி என்ற பெயரில், அமெரிக்க நகரங்களில் நேற்றும் நடந்தது. இளம்சிவப்பு நிற தொப்பி, உடை அணிந்து, டிரம்புக்கு எதிராக, ஏராளமான பெண்கள், பேரணியில்பங்கேற்றனர்.
'பார்லிமென்டில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்து, டிரம்பை, அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, சில பெண்கள் கோஷமிட்டனர். மேலும் சில பெண்கள், 'ரஷ்யாவின் கைப் பாவை டிரம்ப்' என, எழுதப் பட்ட போஸ்டர் களை ஏந்தியபடி,பேரணியில் பங்கேற்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (4)
Reply
Reply
Reply