பதிவு செய்த நாள் :
'தோல்விக்கு காரணம் தயாரித்து விட்டனர்'
எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம்

புதுடில்லி:''மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதால், ஓட்டுச் சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

  'தோல்விக்கு,காரணம்,தயாரித்து,விட்டனர்',எதிர்க்கட்சிகள் குறித்து,மோடி,விமர்சனம்

''வரும் லோக்பா தேர்தலில் அடையப் போகும் தோல்விக்கு, தற்போதே அவர்கள் காரணத்தை கண்டுபிடித்து விட்டனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.மஹாராஷ்டிரா மற்றும் கோவாவை சேர்ந்த, சில லோக்சபா தொகுதிக ளின், 'பூத்' அளவிலான, பா.ஜ., நிர்வாகிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், பிரதமர், மோடி, நேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:

பல எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணியானது, ஊழல் நிறைந்த, எதிர்மறை யான கொள்கை உடைய கூட்டணி. அவர்கள், பணத்தின் பலத்தை நம்பியுள்ளனர்; பா.ஜ., மக்களின் பலத்தை நம்பி உள்ளது. கோல்கட்டா வில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற, கட்சித்

தலைவர்களில் சிலர், அரசியல்வாதிகளின் வாரிசு கள்; வேறு சிலர், தங்கள் வாரிசுகளை அரசியலுக்கு கொண்டு வரத் துடிப்பவர்கள். ஆனால் நாங்கள், மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதால்,ஓட்டுசீட்டு முறைக்கே திரும்ப வேண் டும்' என, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் லோக்சபா தேர்தலில் தோல்வி அடையப் போவதால், அதற் கான காரணத்தை, தற்போதே அவர்கள் தயாரித்து வைத்துள்ளனர்.

மக்களை முட்டாள் என நினைத்து, ஒன்று சேர்ந்து உள்ளனர். இந்த கூட்டணி, நாட்டுக்கு ஆபத்தானது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்யலாம் என, ஆராய்ந்து செயல்படுத்தி வருகிறோம்.


அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து,பொரு ளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதில் இருந்தே, நாம் நல்ல திட்டத்தை தான் செயல் படுத்தி உள்ளோம் என்பது உறுதியாகி விட்டது. மக்களுக்கு நல்லது செய்தால், எதிர்க்கட்சி கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக் கின்றன.இவ்வாறு அவர்
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் கூறினார்.

Advertisement

முன்னதாக, கோவா முதல்வர், மனோகர் பரீக்கரை, பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.
நடந்த எதிர்க்கட்சிகளின் பேரணி குறித்து கருத்து தெரிவித்திருந்த, பிரதமர் நரேந்திர மோடி,'இந்தக் கூட்டணி, மக்களுக்கு எதிரானது' என, குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல், காங்., தலை வருமான, மம்தா பானர்ஜி மற்றும் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலை வருமான, சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

பிரதமர் மோடி, தன்னை நவாப் என்றும், நாங்கள் அவரது அடிமைகள் என்றும் நினைத்துள்ளார். அவரது பாட்டுக்கு, நாங்கள் ஆட வேண்டும் என்று நினைத்துள்ளார்; அது நடக்காது. அதனால் தான், இப்படி விமர்சித்து உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜன-201923:07:23 IST Report Abuse

Pugazh Vஎங்கே யோ கூடுவாஞ்சேரி யில் இருக்கறவர் மொபைலை ஹேக் பண்ணி வங்கி கணக்கில் பூந்து பணத்தை அபேஸ் பண்ண முடிகிற போது தேர்தலுக்கு முன்னாலேயே கையில் கிடைக்கும் ஓட்டு மெஷினில் தகிடுதத்தம் பண்ணுவதா கஷ்டம்? இவர் பேசுவதை பார்த்தால் , மெஷினை தாமரைக்கு தயாரித்து விட்டனர் போலிருக்கிறது. தைரியம் இருந்தால் வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தட்டுமே பார்க்கலாம்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜன-201922:10:46 IST Report Abuse

Pugazh Vஅவர்கள் காரணம் தயாரிக்க வில்லை. இவர்கள் மெஷின் களை தயாரித்து விட்டனர் போல.

Rate this:
atara - Pune,இந்தியா
24-ஜன-201906:12:30 IST Report Abuse

ataraThe Voting device works based on Token numbers there is no Characters programming like any party names , Simple logic Display of Candidate names is label Tag in respective booth , They are given tags , So Simple logic they sort names based on Sorting from top to bottom , if so I will say first 5 and last 5 listing in every machine use Private party names , And the list display in very voting booth machine should be random for every Candidate so here the blind logic is given to illiterate slum people that they get money for vote bank , There are various people has Voting rights in multiple states who do business in one state and family or parents in other state. The Vote machine is non-networking or wireless based device , physical cable to be connected. , I will say your home water pipe line is failed based on Computer used in your next house. so stupid talks are entertained , if you can participiate in the EVM hacking test by sitting around that. Person like you is need for this country to work in Borders for nation. ...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜன-201922:10:02 IST Report Abuse

Pugazh V"மெஷின் தப்பாவேலை செய்ததால் தான் காங்கிரஸ் மூன்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்ததோ ?"/ ஆமாம் பாஸ்கரன். மெஷின் ஒழுங்காக வேலை செய்திருந்தால் பாஜக மேலும் பல இடங்களில் தோற்றிருக்கும்.. ஏன் டெபாசிட் கூட இழந்திருக்கும்.

Rate this:
மேலும் 30 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X