பதிவு செய்த நாள் :
பா.ஜ., மீது ராகுல் திடீர் புகார்

புதுடில்லி:''மணிப்பூரில், அரசியல்சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை, பா.ஜ., அரசு நசுக்குகிறது,'' என, காங்கிரஸ் தலைவர் ராகுல்கூறியுள்ளார்.

 பா.ஜ., மீது, ராகுல், திடீர் ,புகார்

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, மணிப்பூரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரேன் சிங் முதல்வராக உள்ளார்.இம்மாநிலத்தில், பிரபல பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வாங்கெம், 39,

சமூக வலைதளத்தில், பிரதமர் நரேந்திர மோடியை பற்றியும், பா.ஜ, அரசை பற்றியும்விமர்சித்து பதிவுவெளியிட்டிருந்தார்.

இதையடுத்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு, காங்., தலை வர் ராகுல், கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். சிறையில் உள்ள பத்திரிகையாளர் கிஷோர் சந்திராவுக்கு, ராகுல் எழுதிய கடித விபரம்: அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை, கடந்த சில மாதங்களாக, மணிப்பூர், பா.ஜ., அரசு, நசுக்கி வருகிறது.


எதிர்ப்புகளை ஒடுக்கும் முயற்சியாக, பத்திரிகை யாளர் கிஷோர் சந்திரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.தவறுகளை தட்டிக் கேட்போரை, மணிப்பூர்

Advertisement

மாநில அரசு சிறையில் அடைக்கிறது. பாசிச சக்திகள்,ஒருமைப்பாட்டுடன் திகழும் இந்தியாவை அழிப்பதோடு, தங்களுக்கு எதி ரான கருத்துகளை கூறுவோர் மீது, தாக்குதல் நடத்தி வருகின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜன-201923:16:31 IST Report Abuse

Pugazh Vஎதிர் கருத்து களை எழுதினால் கைது பண்ணுவார்களாம். கண்டித்தால் அரைகுறை பப்பு என்று சொல்வார்களாம். இதெல்லாம் அராஜகங்கள், அநியாயங்கள் என்று கொஞ்சம் நாகரிகமான பாஜக காரர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.

Rate this:
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
21-ஜன-201922:45:35 IST Report Abuse

T M S GOVINDARAJANதேசிய பாதுகாப்பு சட்டத்தில் ஒருவர் கைது செய்யபடுகிறார் என்றால் அவர் தேசபக்தி இல்லாதவர் என்று தெரியாதது போல் அவருக்கு சாதகமாக ராகுல் நடந்து கொண்டால் அரசியலில் அனுபவம் இல்லாதாக போய்விடும். அமெரிக்க நிருபரை சவுதி கொன்றதாக செய்தி வந்தது. அதற்கு இன்று வரை முடிவில்லை.எனவே தாங்கள் தேசநலனோடு நடந்து கொள்ளுங்கள்.வாழ்க பாரதம்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜன-201922:13:02 IST Report Abuse

Pugazh Vஇங்கே பாஜக வாசகர்கள் எழுதும் வார்த்தை களை தேசிய அளவில் யாரும் கண்டுகொள்வதில்லை என்பதால் இவர்கள் வண்டி ஓடுகிறது.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X