தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தம்

Added : ஜன 20, 2019
Advertisement
 தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தம்

உடுமலை:உடுமலையில், தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்திக்கொள்வதால், பாதசாரிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரம் அமைந்துள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களும், 50 ஆயிரத்துக்கும் மேல் போக்குவரத்து வாகனங்களும் உள்ளன.
மேலும், தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.இந்நிலையில், இச்சாலையில் உள்ள கழுத்தறுத்தான் பள்ளம், பஸ் ஸ்டாண்ட், தளிரோடு மற்றும் திருப்பூர் ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில், ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்திச்செல்கின்றனர்.பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகளிலும், ரோட்டினை மறித்தும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல இடமில்லாமல் ரோட்டில் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. ரோட்டினை மறித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெருக்கடியால் வாகன விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.போக்குவரத்து போலீசார் சார்பில் ஆங்காங்கே நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும் பயனில்லை.இதனால், கழுத்தறுத்தான் பள்ளம் முதல் திருப்பூர் ரோடு சந்திப்பு வரை, போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து விதியை மீறி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X