பதிவு செய்த நாள் :
தூக்கியடிப்பு?,வேறு,சிறைக்கு,மாற்றப்படுகிறார்,சசிகலா

'பெங்களூரு சிறையில், சசிகலா சலுகை அனுபவித்தது உண்மை தான்' என, உயர்மட்ட அதிகாரிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் அம்பலமாகி உள்ளது. சிறையில் சகல வசதிகளுடன், சொகுசாக இருந்த பகீர் தகவல், விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதால், சசிகலா வேறு சிறைக்கு விரைவில் துாக்கியடிக்கப்படுவார். சசிகலாவுக்கு துணை போன ஜெயிலர்களை, கூண்டோடு மாற்றவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கர்நாடக அரசு தயாராகி வருகிறது.மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவிற்கு, சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. அவரும், அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் ஆகியோரும், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களில், அதிகாரிகள் பணம் பெற்று, சசிகலாவுக்கும், இளவரசிக்கும் சிறப்பு சலுகைகள் வழங்கியதாக, அப்போதைய சிறைத்துறை, பெண் அதிகாரி, டி.ஐ.ஜி., ரூபா புகார் தெரிவித்தார். இதற்காக, சிறைத்துறை, டி.ஜி.பி., சத்தியநாராயண ராவ் தரப்பில், 2 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகவும்,குற்றச்சாட்டு எழுந்தது.இந்த குற்றச்சாட்டு, கர்நாடகா அரசியலில், அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ரூபாவின் குற்றச்சாட்டை, சம்பந்தப்பட்ட சிறைத்துறை உயர் அதிகாரிகள் மறுத்தனர். இது குறித்து விசாரணை நடத்த, அப்போதைய கர்நாடக முதல்வர், சித்தராமையா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, டி.ஐ.ஜி., ரூபா, வேறு துறைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய்குமார் தலைமையில், உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, சிறையில் ஆய்வு நடத்தியது.
அப்போது, சிறையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்ட அறிக்கையை, இந்தக் குழு, 2018 நவம்பரில், கர்நாடக அரசிடம் சமர்ப்பித்தது.

சலுகைகள்


தற்போது, அந்த அறிக்கையில் இடம் பெற்ற, பகீர் தகவல்கள் அம்பலமாகி

உள்ளன. சசிகலாவுக்கும், இளவரசிக்கும், சிறையில் விதிகளை மீறி, ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. சிறை வளாகத்தில் உள்ள, 28 அறைகளில், 100 பெண்கள் இருந்தனர்.
அறைக்கு நான்கு பேர் வீதம் தங்க வைப்பதற்குபதிலாக, சசிகலாவுக்கு ஐந்து அறைகள் ஒதுக்கியது போக, மீதமிருந்த, 20 அறைகளில், 98 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். சசிகலா தங்கியிருந்த அறையில், திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தன. 'அறைக்குள் பூனைகள் நுழைவதை தடுக்க, திரைச்சீலைகள் போடப்பட்டன' என, சிறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
'குக்கர் உள்ளிட்ட பொருட்கள், சசிகலா அறையில் உள்ளன' என, ரூபா கூறியிருந்தார்.'ஆய்வின் போது, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் இல்லை; ஆனால், அறையில் சமையலுக்கான மஞ்சள் துாள் காணப்பட்டது. இதன் வாயிலாக, சிறை அறையில், சசிகலாவுக்கு, தனியாக சமையல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என, விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும், சசிகலாவும், இளவரசியும் வெளியே சென்று வந்த, 'வீடியோ' குறித்தும், உயர்மட்டக் குழு விசாரணை நடத்தியது.
இருவரும் பார்வையாளர்களை சந்திக்கச் சென்றதாக கூறப்பட்டிருந்தாலும், 'சிறை நிர்வாகம் அளித்த நேரத்திற்கும், 'சிசிடிவி' காட்சிகளில் பதிவான நேரத்திற்கும், வேறுபாடு உள்ளது' என, விசாரணை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்டதாக கருதி, சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியதாக, சிறைத் துறையினர் கூறிய தாகவும், அக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறை வளாகத்தில், சொந்த

உடை அணிய, சசிகலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள தாகவும், அக்குழு தெரிவித்து உள்ளது.இந்தக் குழுவின் அறிக்கையில், சிறை விதிகளை மீறி, சசிகலாவுக்கு பல்வேறு சொகுசு வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்தது உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது. இதனால், வேறு சிறைக்கு சசிகலா மாற்றப்படலாம் என, தெரிகிறது.
மேலும், சசிகலாவுக்கு வசதிகள் கிடைக்க துணை போன, ஜெயிலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கவும், அவர்களை, விரைவில் கூண்டோடு மாற்றவும், கர்நாடக அரசு தயாராகி வருகிறது.

ரூபா சொல்வது என்ன?


வினய்குமார் குழு அறிக்கையை, டி.ஐ.ஜி., ரூபா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். அரசு தரப்பில் எந்த பதிலும் வராததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். '2018 டிச., 28க்குள், ரூபாவிற்கு, விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும்' என, கர்நாடக அரசுக்கு, நவ., 28ல், நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், ஜன., 1ல், ரூபாவுக்கு, வினய்குமார் அறிக்கை, 'விரைவு தபால்' வழியாக அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து, ரூபா கூறியதாவது:நான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என, உயர்மட்ட விசாரணை அறிக்கையில் நிரூபணமாகி உள்ளது. ஆனாலும், லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள், விசாரணையை மெத்தன மாக நடத்தி வருகின்றனர். விசாரணையை விரைவாக முடித்து, தவறு செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத் தர வேண்டும். தவறு செய்தவர் கள் யாராக இருந்தாலும்,சட்டப்படி தண்டிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசியல் புள்ளிகளிடம் விசாரணை?
சிறை அதிகாரிகளுக்கு,

2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணா, சிறையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தினார். விசாரணை இன்னும் முடியவில்லை. இறுதி கட்டமாக, சசிகலாவுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள, சில முக்கிய அரசியல் புள்ளிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது, அவர்கள் போலீசில் வசமாக சிக்குவர் என, கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசி அறையில் சிறப்பு வசதி


விசாரணை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு அறைகளில், ஒரு அறையில், சொகுசு கட்டில் மற்றும் படுக்கை விரிப்புகள் போடப்பட்டு இருந்தன
* சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைகளில், 'ஏசி' வசதியும் செய்யப்பட்டு இருந்தது
* பார்வையாளர்களை சந்திக்க, சசிகலாவுக்கு, ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது பயன்படுத்தப்படாத ஒரு அறையை, அவருக்காக அலங்கரித்து, ஒதுக்கி கொடுத்துள்ளனர்
* கைதிகள், பார்வையாளர்களை சந்திக்க, குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆனால், சசிகலாவுக்கு, அதிக அளவில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டது
* சசிகலா, இளவரசி ஆகியோர் தங்கி இருந்த பகுதிகளில், ஆண் காவலர்கள் யாரும் பணி யமர்த்தப்பட வில்லை; பெண் காவலர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்
* சிறையில் ஆய்வு நடத்திய போது, சில ஆதாரங்களை அழிக்க, அதிகாரிகள் முயற்சி செய்தது தெளிவானது
* கண்காணிப்பு கேமராக்களை இயங்க விடாமல், அதிகாரிகள், 'சுவிட்ச் ஆப்' செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
21-ஜன-201922:56:11 IST Report Abuse

Sridhar Rengarajanசரிப்பா கண்டுபிடிச்சிட்டீங்க, பாராட்டுக்கள், ஓகே, இனிமேல் என்ன செய்யப்போகிறீர்கள். அத சொல்லுங்க. ஜெயிலுக்குள் லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததால் மேலும் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுக்க போகிறார்களா. அல்லது உச்சநீதிமன்றம் வழங்கிய தண்டனையை முறையாக முதலில் இருந்து அனுபவிப்பார்களா. அப்புறம்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜன-201922:29:49 IST Report Abuse

Pugazh Vஏன் மத்திய அரசு பாஜக விடம் தானே. சென்ட்ரல் சிறைக்கு மாற்ற வேண்டியது தானே? பாஜக வால் இவரை அசைக்க முடியாது.

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-ஜன-201904:11:47 IST Report Abuse

Cheran Perumalமத்திய அரசுக்கென எந்த சிறையும் இல்லை. மேலும் கோர்ட் உத்தரவு இல்லாமல் மாற்றவும் முடியாது என்பதை இவர் அறியமாட்டார், ஏனெனில் இவரது தலைவன் ஸ்டாலினுக்கே இந்த விவரங்கள் தெரியாது. ...

Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-ஜன-201904:12:35 IST Report Abuse

Cheran Perumalபுகழேந்தியை பிடித்து விசாரித்தால் பணம் எங்கிருந்து வந்தது, யாருக்கெல்லாம் கொடுத்தார்கள் என்பது தெரியும். ...

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
21-ஜன-201921:51:34 IST Report Abuse

அம்பி ஐயர்நல்லா காமெடி பண்றாங்க..... இப்போ இருக்குற கர்நாடக அரசுக்கு (???) தன்னை ஸ்திரப்படுத்திக்கவே முடியல..... இதுல வேற இவுங்க சசியத் தூக்கி வேற சிறைக்கு மாற்றப் போறாங்களாமா....??? திஹாருக்கு மாற்றினால் நன்றாக இருக்கும்.... அதுவும் இளவரசி.... சசி.... சுதாகரன் மூவரையும் வெவ்வேறு சிறைகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்..... தண்டணையையும் இரண்டுமடங்காக்க வேண்டும்..... விஜயசாந்திய தூது அனுப்பி கூட்டணிக்கு அச்சாரம் பேசிய ராகுல் தலைமையிலான காங்கிரஸ் தயவோடு நடக்கும் கர்நாடகமா அவுங்களுக்கு எதிரா நடவடிக்கை எடுக்கப் போகுது....??? எனக்கென்னமோ நம்பிக்கையில்லை..... அப்படியே பேருக்கு மாற்றினாலும் கூட.... அங்கும் ராகுல் உத்தரவுப்படி..... சகலவிதமான வசதிகளும் செய்துகொடுப்பார்கள்.....

Rate this:
மேலும் 80 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X