பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பொன் மாணிக்கவேலுக்கு கிடைத்தது வெற்றி:
சென்னையில் அலுவலகம் ஒதுக்கீடு

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்கவேலுக்கு, சென்னையில் அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது; அலுவலக சாவியும், அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 பொன் மாணிக்கவேலுக்கு, கிடைத்தது, வெற்றி,சென்னையில் அலுவலகம்,ஒதுக்கீடு

தமிழக காவல் துறையில், ரயில்வே, ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த, பொன் மாணிக்கவேல், கூடுதலாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவையும் கவனித்து வந்தார். அவர், பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்கி, சிலை கடத்தல் காரர்களுக்கு சிம்ம சொப்பணமாக இருந்து வருகிறார்.

இதனால், 2017, ஜூலை, 21ல், சிலை கடத்தல் தொடர்பான, அனைத்து வழக்குகளையும், பொன் மாணிக்கவேல் விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த, பொன் மாணிக்கவேல், 2018, நவ., 30ல், பணி ஓய்வு பெற்றார். அவரை, ஓராண்டுக்கு, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக

அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக, பொன் மாணிக்கவேல் நீடிக்கலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது.இந்நிலையில், பொன் மாணிக்க வேலுக்கு கீழ் பணியாற்றி வந்த, கூடுதல், எஸ்.பி., இளங்கோ உட்பட, 70க்கும் மேற்பட்ட போலீசார், அவருக்கு எதிராக, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சிலை கடத்தல் வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த, சக்திவேல் என்பவனை அழைத்து வந்து, 'பொன் மாணிக்கவேல் பொய் வழக்கு போடுகிறார்' என, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளிக்க வைத்தனர்.அதன்பின், பொன் மாணிக்க வேலுக்கு, போலீசார் ஒத்துழைக்க மறுத்தனர்; சென்னையில் அவர் செயல்பட்டு வந்த அலுவலகம் பறிக்கப்பட்டது; அவரது சம்பளமும், நிறுத்தி வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பின்னணியில், உயர் போலீஸ் அதிகாரிகள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்கெல்லாம் சாட்டையை சுழற்றும் விதமாக, 'சிலை கடத்தல் தடுப்பு பிரிவை அரசு கையாளும் முறை, சரியாக இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.மேலும், 'சிறப்பு பிரிவு அதிகாரிக்கு, சென்னையில் அலுவலகம் ஒதுக்க வேண்டும். இல்லை என்றால்,நீதித்துறை அவசர நிலையை பிறப்பிக்க நேரிடும். பொன் மாணிக்கவேலுக்கு எதிராக செயல்படும் போலீசாரை, பணியிடை நீக்கம் செய்ய நேரிடும்' என, உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.

இதையடுத்து, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை, கிண்டியில், பொன் மாணிக்கவேலுக்கு

Advertisement

அலுவலகம் ஒதுக்கியுள்ளார். அவரிடம், அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:


பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, புதியதாக ஆட்களை தேர்வு செய்ய திட்டமிட்டார். இதனால், தனக்கு கீழ், அயல்பணி என்ற அடிப்படையில் பணியாற்றி வந்த, ஒரு கூடுதல் எஸ்.பி., உட்பட, 116 பேரை, அவர்கள் பணியாற்றிய இடத்திற்கே திருப்பி அனுப்பி விட்டார். அவர்களுக்கு, மாவட்ட எஸ்.பி.,க்கள், பணி இடம் ஒதுக்க வேண்டும்.

ஆனால், 'பொன் மாணிக்கவேல், திருப்பி அனுப்பிய போலீசாருக்கு, பணி இடம் ஒதுக்க கூடாது' என, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதனால், வேலை செய்யாமல் உள்ள, 116 பேருக்கும், 52 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-ஜன-201901:38:20 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்கூஜாகா தலைவர்களின் கருத்து என்னவோ? கொடநாடு கொலைகள் விவகாரத்தையும் இவர் விசாரிக்க வேண்டும்.

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
23-ஜன-201911:56:19 IST Report Abuse

narayanan iyerபொன்மணிக்கவேல் மட்டுமே வேலை செய்து முடிக்க முடியாது . கூட வேலை செய்யும் ஆட்களின் ஒத்துழைப்பு அவசியம் .

Rate this:
I love Bharatham - chennai,இந்தியா
22-ஜன-201917:02:39 IST Report Abuse

I love Bharathamஎங்களின் முதல் கடவுள் நீயே ...நீங்கள் முருகனின் அவதாரம்....எங்கள் மனக்குமுறலின் விடிவு .......பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X