கண்ணாடியாய் பளபளக்கும் சாலை: சந்திரசேகர ராவ் சபதம்

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (22)
Advertisement
சந்திரசேகர ராவ்,கண்ணாடியாய்,பளபளக்கும் சாலை, தெலுங்கானா,முதல்வர், திடீர் சபதம்

ஐதராபாத்: ''கண்ணாடியை போல், பளபளப்பான சாலைகளை தெலுங்கானாவில் அமைப்போம்,'' என, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், சபதம் செய்து உள்ளார்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் நேற்று, நெடுஞ்சாலைகள் துறை உயரதிகாரிகளுடன், முதல்வர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தெலுங்கானாவில், நீர்ப்பாசனத்துக்கு அடுத்ததாக, சாலைகள் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தெலுங்கானாவில் உள்ள சாலைகளை தரம் வாய்ந்தவையாக மாற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். அடுத்த இரு ஆண்டுகளில், தெலுங்கானாவில் உள்ள சாலைகள் அனைத்தும், கண்ணாடியை போல் பளபளப்பாகும்.

தெலுங்கானாவில், 12 ஆயிரத்து, 751 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் உள்ள சாலைகள் அனைத்தும் தரமானவையாக மாற்றப்படும். தற்போதுள்ள சாலைகளின் நிலையை மதிப்பீடு செய்து, புதிய சாலைகள் அமைப்பதற்கான செலவு மதிப்பீடு செய்யப்படும். பின், இந்த திட்டத்துக்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். சாலைகள் சரி செய்யும் பணியை தொடர்ந்து கண்காணிக்கும்படி, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
21-ஜன-201921:27:37 IST Report Abuse
அம்பி ஐயர் பார்த்து...பார்த்து..... கண்ணாடியவே சாலையா போட்டுடப் போறாரு.....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-ஜன-201915:28:49 IST Report Abuse
இந்தியன் kumar தரமான சாலைகளை தரமான தலைவர்களால் தான் அமைக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
21-ஜன-201909:59:22 IST Report Abuse
pattikkaattaan தமிழ்நாட்டுல இருக்கற சாலைகளில் குண்டு குழி இல்லாமல் இருக்கிற ஒரு சாலையை காட்டிவிட்டால் ஆயிரம் வராகன்கள் பரிசு ... இதுல ஸ்மார்ட் சிட்டியாம் ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X