தரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தரிசனம் செய்த பெண்கள்: கேரள அரசு திடீர், 'பல்டி'

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (62)
Advertisement
சபரிமலை,தரிசனம்,பெண்கள்,கேரள அரசு,பல்டி

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனம் செய்த, 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பட்டியலில், நிறைய தவறுகள் இருந்ததால், புதிய பட்டியலை தயாரிக்க, கேரள அரசு முடிவு செய்துள்ளது.

'கேரளாவிலுள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், 10 - 50 வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா என்ற பெண்கள், கள்ள பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு கேட்டு, இந்த பெண்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது, சபரிமலையில், 51 பெண்கள் தரிசனம் செய்ததாக, மாநில அரசு சார்பில் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதில், பல குளறுபடிகள் இருந்தன. அந்தப் பட்டியலில், சில ஆண்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. மேலும், சில பெண்களின் வயது குறைத்து காட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் பட்டியலில் திருத்தங்கள் செய்து, புதிய பட்டியல் தயாரிக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
27-ஜன-201919:20:08 IST Report Abuse
karutthu கூட்டு பிழை வந்து விட்டதோ ? சராசரியாக ஒரு லக்ஷம் பெண்கள் சாமி தரிசனம் செய்தார்கள் என்று சொல்லிவிடுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
25-ஜன-201910:00:05 IST Report Abuse
Muthukrishnan,Ram நல்லாவே அரசியல் பண்றிங்க சபாஷ்.
Rate this:
Share this comment
Cancel
s sambath kumar - chennai,இந்தியா
23-ஜன-201916:12:40 IST Report Abuse
s sambath kumar அவர் இங்கே வந்து கழகத்தில் கேட்டிருக்கலாம். எப்படி அறிக்கை தயார் செய்வது என்பதில் வல்லவர்கள் உடன்பிறப்புகள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X