பொது செய்தி

இந்தியா

கும்பமேளா: உ.பி., அரசின் வருவாய் ரூ.1.20 லட்சம் கோடி!

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (35)
Advertisement
கும்பமேளா,Uttar Pradesh,உத்தரபிரதேசம்,உ.பி., வருவாய்,ரூ.1.20 லட்சம் கோடி

பிரயாக்ராஜ் : பிரயாக்ராஜ் கும்பமேளா மூலம், உ.பி., அரசுக்கு ரூ.1.20 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என இந்திய தொழில் கூட்டமைப்பு கணித்துள்ளது.

உ.பி.,யில், அலகாபாத் என அழைக்கப்பட்ட, பிரயாக்ராஜில், கும்பமேளா விழா நடக்கிறது. கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும், பிரயாக்ராஜில் உள்ள கும்ப நகரி பகுதியில், மகர சங்கராந்தியான, ஜன.,15ல் கும்பமேளா விழா துவங்கியது. சிவராத்திரியான, மார்ச், 4ம் தேதி வரை, 50 நாட்களுக்கு, இந்த திரிவேணி சங்கமத்தில், பக்தர்கள் புனித நீராடுவர். இந்த ஆண்டு, 16 கோடி பேர் வருகைத் தருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கும்பமேளா மூலம் உ.பி., அரசுக்கு ரூ.1.20 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய தொழில் கூட்டமைப்பு கணித்துள்ளது. கும்பமேளாவை நடத்துவதற்காக உ.பி. அரசு 4,200 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய், உ.பி., அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ராஜஸ்தான் உத்திரகண்ட், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களும் இதனால் பயனடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஜன-201920:30:47 IST Report Abuse
Bhaskaran அதனால் தான் நாங்க தாமிரபரணி புஷ்கரத்துக்கு வந்த பக்தர்களுக்கு எந்தவித சவுகரியமும்செய்துகொடுக்கவில்லாய் ஹிஹிஹி ஆனா எல்லாமந்திரியும் குளிச்சுட்டுவந்த்துட்டோம்
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
21-ஜன-201913:27:05 IST Report Abuse
pattikkaattaan ஏனுங்க.. நான் அங்க வந்து பக்கோடா போட்டு விக்கலாம்னு இருக்கேன் .. நல்ல வருமானம் கெடக்குமுங்களா ?
Rate this:
Share this comment
Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
27-ஜன-201906:40:49 IST Report Abuse
 Muruga Velதுப்புரவு பணி செய்ய ஆள் தேடறாங்க ..நீங்க போகலாம் ......
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
21-ஜன-201911:29:47 IST Report Abuse
சுந்தரம் 4200 கோடி செலவழிச்சு ரூ.1.20 லட்சம் கோடி வருவாய் கிடைக்குமா ? அத்தனையும் அரசாங்க கணக்குல காட்டுவாங்களா ?
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஜன-201913:18:36 IST Report Abuse
Pasupathi Subbianஅதானே நம்ம பழக்கத்தை மாற்றமுடியுமா. இத்தனைநாள் திருடர்களுடன் பழகி பழகி , இனி நல்ல புத்தி வருமா? ஜி எஸ் டி என்றால் என்ன என்று தெரிந்து பாடம் படித்து வரவும்....
Rate this:
Share this comment
karthick - bangalore,இந்தியா
21-ஜன-201913:43:05 IST Report Abuse
karthickநண்பரே ...கீழ எனது பதில் பார்க்கவும்..கண்டிப்பா 1.2 lakhs crore கிடைக்கும். - கார்த்திக்.பெங்களூரு...
Rate this:
Share this comment
sagar saritha - Chennai,இந்தியா
21-ஜன-201915:47:32 IST Report Abuse
sagar sarithaஅரசின் வருவாய் என்பது GST , பெட்ரோல் மற்றும் டீசல் வரிகள் மற்றும் வெளிநாட்டவர்களோ இந்தியர்களோ வந்தால் சுற்றுலா துறை விதிக்கும் நுழைவு மற்றும் இதர கட்டணங்கள். உத்தர பிரதேசத்தில் 8 லட்சம் பேர் GST வரியின் கீழ் வருகிறார்கள் என்று தோராயமாக வைத்துக்கொண்டாலும், இங்கே குறிப்பிட்டிருக்கிற மொத்த 16 கோடி பேரும் 8 லட்சம் பேரிடம் தான் சேவை பெறுவார்கள் என்று கூற இயலாது . ஆக GST வரி ஒவ்வொரு சேவைதாரரும் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் கட்டிய பிறகே வருவாய் எவ்வளவு, அரசு வரி எவ்வளவு ஈட்டியது என்று சொல்ல முடியும். 16 கோடி பேர் கும்ப மேளாவிற்கு வருவதாக வைத்து கொண்டாலும் தோராயமாக கீழே வருமாறு வருவாய் இருக்கும் GST வரி = 10400 CR ( மாநில பங்கு மட்டும்) பெட்ரோல் வரி = 8800 CR இதர கட்டணங்கள் = 16000 CR மொத்தம் = 35200 CR இங்கே இவர்கள் குறிப்பிட்டிருப்பது 1,20,000 Cr. ஆனால் வருவாய் சதவீதம் 30% குள்ளே இருக்க தான் வாய்ப்புகள் அதிகம். 35200 Cr /120000 Cr =29.33%...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X