அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் குழப்பத்தில் இருக்கிறார் : ஓபிஎஸ்

Added : ஜன 21, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஸ்டாலின் குழப்பத்தில் இருக்கிறார்  : ஓபிஎஸ்

மதுரை : மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,

யாகம் நடத்தினால் முதல்வராகி விட முடியும் என்ற மூட நம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா? யாகம் நடத்தினால் முதல்வராகி விட முடியும் என்றால் அனைத்து எம்எல்ஏ.,க்களும் யாகம் நடத்துவார்கள். மூட நம்பிக்கைக்கு ஸ்டாலின் புதிய அர்த்தம் கண்டுபிடிக்க தேவையில்லை.

ஸ்டாலின் சமீப காலமாக குழப்பத்தில் இருக்கிறார். கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ராகுலை அழைத்து வந்த ஸ்டாலின், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக பேசினார். இப்போது கோல்கட்டாவில் பா.ஜ.,விற்கு எதிராக நடத்தப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளார். எந்த பக்கம் சாய்ந்தால் லாபம் கிடைக்கும் என ஸ்டாலின் செயல்படுகிறார். எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெற்று அதிமுக சாதனை படைக்கும்.

தலைமை செயலகத்தில் எனது அறையில் வழக்கம் போல் பணியை துவங்குவதற்கு முன் சாமி கும்பிட்டதை, முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தியதாக ஸ்டாலின் தவறான தகவல்களை கூறி வருகிறார். ஏற்கனவே 3 முறை முதல்வராக இருந்து, தற்போது துணை முதல்வராக இருக்கும் நான் முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தியதாக கூறுவது ஏற்க முடியாதது. சாமி தான் கும்பிட்டேனே தவிர, யாகம் ஏதும் நடத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
21-ஜன-201921:21:07 IST Report Abuse
அம்பி ஐயர் சரி.... ஓ.பி.எஸ்... ஸ்டாலின் கோபூஜை எதுக்குப் பண்ணினாராம்....??? துர்காவை எதுக்கு காசிக்கு அனுப்பினாராம்....??? எந்தக் “கருமத்த”ப் பண்ண காசிக்குப் போனாங்களாம்....??? இப்படிக் கேட்க வேண்டியதுதான....???
Rate this:
Cancel
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
21-ஜன-201915:17:06 IST Report Abuse
Swaminathan Nath மக்கள் இந்த இந்து விரோதியை தோற்கடிக்க வேண்டும் , மற்ற மதமாக இருந்தால் வாழ்த்தி பேசுவார்.
Rate this:
Cancel
R S GOPHALA - Chennai,இந்தியா
21-ஜன-201914:58:52 IST Report Abuse
R S GOPHALA சுடாலினுக்கு கொல்கத்தா போயி வங்க மொழில எழுதி கொடுத்ததை நெற்று பேசுனதுல கிறுக்கு புடிச்சிடுச்சி. தான் என்ன பேசுறங்கறதே அதுக்கு புரியல்ல. மூளை குழம்பி போயிடுச்சி. வங்காள மொழியை தமிழ் மாதிரி பேசி அசிங்கம் பண்ணி தான் ஒரு தமிழ்நாட்டு பப்புன்னு நிரூபிச்சிட்டு வந்துருக்கு... ஏதாவது பேசனுமேன்னு உளறி கொட்டிக்கிட்டு லூசு மாதிரி கருத்து சொல்லிக்கிட்டு திரியிது...
Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
21-ஜன-201922:12:07 IST Report Abuse
அம்பி ஐயர்மூளை குழம்பிடுச்சா.....??? அப்போ இருக்குன்றீங்களா....??? இல்லைன்னு நான் சொல்லலை...... இருந்தால் சந்தோஷம்ன்னு தான் சொல்றேன்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X