இந்திய கோடீஸ்வரர்கள் சொத்து நாளுக்கு நாள் உயர்வு

Updated : ஜன 21, 2019 | Added : ஜன 21, 2019 | கருத்துகள் (28)
Advertisement
இந்திய கோடீஸ்வரர்கள், சொத்து மதிப்பு, செல்வ வளம், முகேஷ் அம்பானி

தாவோஸ் : இந்தியாவில் உள்ள ஒரு சதவீதம் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு மட்டும் ஒவ்வொரு நாளும் ரூ.2200 கோடி அதிகரித்துள்ளதாக உலக பொருளாதார கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஆக்ஸ்பாம் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், 2018 ம் ஆண்டில் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 39 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு நாளும் ரூ.2200 கோடி என்ற அளவில் உயர்ந்துள்ளது. சுமார் 13.6 கோடி இந்தியர்கள் 2004 ம் ஆண்டு முதல் ஏழைகளாகவே உள்ளனர். இந்திய பொருளாதார சமநிலையின்மை வறுமைக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கியதுடன், பொருளாதார நிலையை சீர்குலைத்து, உலகம் முழுவதும் சாமானிய மக்களின் கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது.

நாட்டின் மொத்த செல்வ வளத்தில் 77.4 சதவீதம், இந்திய கோடீஸ்வரர்களாக இருக்கும் 10 சதவீதம் மக்களிடம் உள்ளது. ஒரு சதவீதம் கோடீஸ்வரர்களிடம் 51.53 சதவீதம் சொத்துக்கள் உள்ளது. கீழ்மட்டத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள்தொகையான 60 சதவீதம் மக்களிடம் வெறும் 4.8 சதவீதம் செல்வ வளம் மட்டுமே உள்ளது.

2018 முதல் 2022 ம் ஆண்டு வரை ஒவ்வொரு நாளும் இந்தியா 70 புதிய கோடீஸ்வரர்கள் உருவாக்க வாய்ப்புள்ளது. இந்த பொருளாதார சமநிலையின்மையால் இந்தியாவில் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

புதிதாக 18 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாகி உள்ளனர். அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு முதல் முறையாக ரூ.28 லட்சம் கோடியை எட்டி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் நாட்டின் மருத்துவ, சுகாதாரம், தூய்மை, குடிநீருக்காக செலவிடும் ரூ.2,08,166 கோடி, இந்திய கோடீஸ்வர்களில் முதலிடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பான ரூ.2.8 லட்சம் கோடியை விட குறைவு. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-ஜன-201901:39:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்தியாவில் ஏழை பணக்காரர் பிளவு வரலாறு காணாத அளவுக்கு அதிகமாகி உள்ளது.. உலகில் இந்த பிளவு இந்தியாவில் தான் ஆமாம், கேப்பிடலிசம் என்று வளரும் மேற்கத்திய நாடுகளில், உலகின் தாதாவான அமெரிக்காவில் கூட இந்த அளவு பிளவு இல்லை. இந்த பெருமை எல்லாம் ஊழலற்ற நிர்வாகம் என்று சொல்லியலையும் மோசடி தர்பாரின் தில்லுமுல்லு விளையாட்டுக்களால் தான். காங்கிரசின் கொடுமை அறுபதாண்டு என்று கூவிக்கொண்டே காவி பண்டாரங்கள் நாலரை ஆண்டில் நாட்டை அதை விட நாலுமடங்கு நாசமாக்கி விட்டார்கள் என்பதன் சாரம் தான் இந்த புள்ளிவிவரம்.
Rate this:
Share this comment
Cancel
Shroog - Mumbai ,இந்தியா
22-ஜன-201900:59:09 IST Report Abuse
Shroog மோடி பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகி விட்டு, நடுத்தர மக்களை ஏழைகளாக ஆக்கி விட்டார். எடுத்துக்காட்டாக, பிஜேபி கட்சி ஏழையாக இருந்தது. இப்போ 1028 கோடி சொத்து மதிப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
21-ஜன-201923:14:09 IST Report Abuse
Pugazh V பணக்காரர்களைப் பார்த்து பொறாமைப்பட்டு ஏதேதோ எழுதுகிறார்கள். பாஜகவை கவனிக்கும் விதத்தில் கவனித்தால் பணக்காரர் ஆகலாம். பணக்காரர் மேலும் மேலும் பணம் சேர்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X