'மாற்றி யோசி!' பிரதமர் வேட்பாளராக மம்தாவை அறிவிக்க திட்டம் Dinamalar
பதிவு செய்த நாள் :
மாற்றி யோசி,பிரதமர்,வேட்பாளர்,மம்தா,அறிவிக்க திட்டம்

பிரதமர் வேட்பாளராக மம்தா  அறிவிக்க திட்டம்

கோல்கட்டா: காங்கிரஸ் தலைவர் ராகுல் பிரதமர் வேட்பாளராவதை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் மாற்றி யோசிக்கின்றன. ராகுலை பிரதமர் வேட்பாளராக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்த நிலையில் அதற்கு போட்டியாக கர்நாடக முதல்வர் குமாரசாமி, ''நாட்டை வழிநடத்தும் தகுதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு உள்ளது,'' என திடீரென 'வாய்ஸ்' கொடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து லோக்சபாவுக்கு வரும் ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கூட்டணி அமைக்கும் முயற்சியில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சி நடந்தது.

பிரமாண்ட பேரணி


சென்னையில் நடந்த கருணாநிதி சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் ராகுலை பிரதமராக ஏற்க பல கட்சிகளின் தலைவர்கள் முன்வரவில்லை.
ராகுல் தலைமை இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கோல்கட்டாவில் பிரமாண்ட பேரணி

நடத்தினார். இதில் 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கோல்கட்டாவில் நடந்த கூட்டத்தில் பேசிய தலைவர்களும், 'பிரதமர் யார் என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்' என ஒருமித்தக் குரலில் தெரிவித்திருந்தனர்.
சென்னை கூட்டத்தில் ராகுல் குறித்து பேசிய ஸ்டாலின் கோல்கட்டா கூட்டத்தில் அவரைப் பற்றி ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் மம்தா பானர்ஜியை பாராட்டி பேசினார்.ஸ்டாலினுக்கு போட்டியாக கர்நாடக முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி 'வாய்ஸ்' கொடுத்துள்ளார்.
பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பதிலாக மம்தாவை அறிவிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் யோசித்து வருவதை அவரது பேச்சு உறுதி படுத்தியுள்ளது. தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் குமாரசாமி கூறியுள்ளதாவது:

கடந்த 1977ல் அப்போதை பிரதமரான காங்கிரசைச் சேர்ந்த இந்திரா அமல் படுத்திய அவசர நிலைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது அதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் நிலவுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் அதிருப்தி நிலவுகிறது. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டால் தான் பா.ஜ., அரசை வீழ்த்த முடியும்.
பிரதமர் வேட்பாளர் யார் என்பது தற்போதைக்கு பிரச்னையே இல்லை. தேர்தலுக்கு முன்பே கூட்டணியின் தலைவர் யார் பிரதமர் வேட்பாளர் என்பதை முடிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

திறமையானவர்


ஒவ்வொரு மாநிலத்திலும் திறமையான தலைவர்கள் உள்ளனர். இவர்கள் தேசிய அளவில் திறமையாக செயல்படக் கூடியவர்களாகவும் உள்ளனர்.

அந்த வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் திறமையானவர்; நாட்டை வழிநடத்தும் தகுதிகள் அனைத்தும் அவருக்கு உள்ளது. நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யக் கூடியவர். மேற்கு வங்கத்தில் அவர் நீண்டகாலம் முதல்வராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மிகவும் எளிமையானவர், அதே நேரத்தில் நிர்வாகத்தில் தேர்ந்தவர்.
தேர்தலுக்குப் பின் அனைத்து தலைவர்களும் அமர்ந்து பிரதமர் யார் என்பது குறித்து முடிவு எடுப்போம். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காத தலைவர்களும் எங்கள் கூட்டணியில் இணைய வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு கூறினார்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மாற்றி யோசிக்கின்றனர். இதையே குமாரசாமியின் பேச்சு உறுதிபடுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மம்தாவின் உபசாரம்


கோல்கட்டாவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி தேனீர் விருந்து அளித்தார். அதில் மசாலா தோசை, டார்ஜிலிங் டீ என, தேர்ந்தெடுக்கப்பட்டு உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அத்துடன் தங்கள் மாநிலத்துக்கு வந்துள்ள தலைவர்களுக்கு தன் கையால் உணவு வகைகளை பரிமாறினார், மம்தா பானர்ஜி; இது, பேரணிக்கு வந்திருந்த அரசியல் கட்சி தலைவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-ஜன-201921:01:15 IST Report Abuse

Pugazh Vஎதிர்க்கட்சி களின் கூட்டணியைப் பார்த்து பாஜக கூட்டத்திற்கு அஸ்தியில் ஜன்னி கண்டு விட்டது நன்றாக தெரிகிறது. அந்த கூட்டணி யின் பேச்சுகள், அறிக்கைகள் மட்டுமல்ல அதன் தலைவர்களில் யாராவது தும்மினால் கூட பாஜக கூட்டத்தினர் ஜெர்க் ஆகி விடுகிறார்கள்.

Rate this:
SPB - Chennai,இந்தியா
22-ஜன-201917:30:07 IST Report Abuse

SPBமனிதருள் மாணிக்கம், எங்கள் தங்கம் வைகோவுக்கு ஏன் அழைப்பு இல்லை

Rate this:
R.SANKARA RAMAN - chennai,இந்தியா
22-ஜன-201917:16:35 IST Report Abuse

R.SANKARA RAMANஇதில் என்ன வேடிக்கை என்றால் ஒரு காங்கிரஸ் தலைவரும் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல தைரியமில்லை. விஜய்காந்த் பாணியில் சொன்னால் திரானியில்லை.

Rate this:
மேலும் 57 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X